அஞ்சலி
ஈடுகட்ட முடியாத இழப்பு.
1982 கடலூர் மாநாடு நடைபெற்றபோது மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு ஜெயலலிதா ஆகியோர் உணவு பொறுப்பை தலைவர் பண்ருட்டியார் சார்பில் நண்பர் திரு அமிர்தலிங்கமும் நானும் ஏற்று, உபசரிக்கும் பேற்றினை பெற்ற நினைவு மனதில் நிழலாடுகிறது.
2014 ஆம் ஆண்டு தலைமை கழக அலுவலகத்தில் திரு பண்ருட்டியார் கழகத்தில் இணைந்த நிகழ்வுக்குப்பின் கடலூர் நண்பர்களை அழைத்து முதல்வர் எங்களுடன் உரையாடிய நிகழ்வும் மறக்க முடியாத நிகழ்வு.
அம்மா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
வாழ்க அவர் புகழ்....by B.Thirunavukkarasu.
நமது
அரசியல் விமர்சன உலகம் அவரைப் பற்றி எதிர்மறையாகவே அதிகம் பேசியிருக்கிறது. ஆனால், அவரது மிக முக்கியமான சில பங்களிப்புகளைப் பற்றியும் நாம் பேச வேண்டும்.
இது அவருக்கான அஞ்சலி செலுத்தும் நேரம் என்பதால் மட்டும் அல்ல, அவரது மறைவுக்குப் பின்பு ஏற்பட வாய்ப்புள்ள ஓர் அபாயம் குறித்த
கவலையாலும் இதைப் பற்றி இந்த நேரத்தில் நாம் பேச வேண்டியிருக்கிறது.
ஜெயலலிதாவைப் பற்றிய தன் இரங்கல்
உரையில், திமுக எம்பி-யான கனிமொழி பேசியபோது, ஜெயலலிதா தமிழகத்தின் நலன்களை விட்டுக்கொடுக்காதவர் என்று கூறினார்
அவரது
வாழ்வின் இறுதித் தருணம் வரை அவர் மத்திய - மாநில உறவுகள் குறித்த விஷயத்தில் ஒரு
தொடர்ச்சியைப் பார்க்க முடிந்தது. அவர் விட்டுக்கொடுக்கிற விஷயங்கள்
சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் சார்ந்து அமைகின்றன. ஆனால், அவர் விட்டுக்கொடுக்காத விஷயங்களில் தமிழ்நாட்டின் நெடுங்காலக்
கோரிக்கைகள் அடங்கியிருக்கின்றன. 69% இடஒதுக்கீடு எந்த
அளவுக்கு சமூகநீதிச் சிக்கலோ அதே அளவுக்கு மாநில உரிமைச் சிக்கலும்கூட. அதில் அவர்
உறுதியாக இருந்தார். காவிரி, முல்லைப்பெரியாறு என
எல்லாவற்றிலும் தமிழ்நாட்டின் பொதுக்குரலை அவர் ஒலித்தார்.
கடந்த
சுதந்திர தின விழாவில் ஜெயலலிதா இவ்வாறு கூறினார்: "நாட்டின்
சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை நாம் இன்றைய தினம் நினைவுகூர்கிறோம்.
சுதந்திரம் என்றால் பேசுவதற்கும் எழுதுவதற்குமான உரிமை மட்டுமல்ல. உண்மையான
சுதந்திரம் பொருளாதாரச் சுதந்திரம்தான்."
டெல்லியை நோக்கிச் சவாலான ஒரு
பார்வையை வீசியதிலும் "நீ மகாராஜா என்றால், நான் மகாராணி" என்று அட்டகாசமாகச் சிரிப்பதிலும் பல மாநில
முதல்வர்களிடையே மற்ற பல தமிழக முதல்வர்கள் உட்பட - அவர் வித்தியாசப்பட்டுதான்
இருந்தார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அதனால், மாநில
உரிமைகளுக்கான போராட்டத்தில் நிச்சயம் அவருக்கு ஒரு இடம் இருக்கவே செய்யும்.
.Shared by K.R /Thanks to Source Tamil Hindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக