Translate

புதன், 31 டிசம்பர், 2014

31-12-2014 அன்று பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள்



1.R.ஜெகன்னாதன் உதவி பொதுமேலாளர்
2.P.மீனா சீனியர் டெலிபோன் சூபர்வைசர்
3.R. ஹரிசிங் தொலைபேசி இயக்குனர்



       இவர்களுக்கு பணிஓய்வு பாராட்டு விழா திரு சாந்தகுமார் துணை பொதுமேலாளர்-நிதி தலைமையில் ஆலோசனை கூட்ட அரங்கு கடலூர் மைய தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடந்தது,
       திரு மகேஷ் உதவி பொதுமேலாளர்-நிர்வாகம்  தொகுத்து வழங்கி சிறப்பாக நடத்துவித்தார்.
       திருமதி அபர்ணா  துணை பொதுமேலாளர்-நிர்வாகம், திரு ஞானசேகரன்  துணை பொதுமேலாளர்- CM கலந்துக்கொண்டு வாழ்த்தினர்.

       உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
        பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
       திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார். 
       

                      
ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டுநீள் 

ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன் 

என்று வாழ்த்துகின்றோம்.

திங்கள், 22 டிசம்பர், 2014

போரடி பெற்ற பென்ஷனும்...

 அதை சிதைக்கும் அரசாங்கமும் !
NFTE 
மாநில செயலர் தெளிவறிக்கை  

சனி, 13 டிசம்பர், 2014

நானும், நீங்களும் அவசரகதி உலகமயமாதல் காலத்தில் 

வாழ்கிறோம். 

உயர் வேக இண்டெர்நெட் நம்மை இணைக்கிறது. நம்மை பல 

விஷயங்கள் இணைக்கிறது.

ஆனால் ஒன்றேயொன்று துண்டிக்கப்பட்டுள்ளது. அதுதான் அன்பு

தயை குணம், கருணை. தனிப்பட்ட கருணையையும் அன்பையும் தயா 

குணத்தையும் உலகமயமாக்க முயற்சி செய்வோம். செயல்படாத 

நிலையில் ஏற்படும் கருணையோ, அன்போ அல்ல, மாற்றங்களைக் 

கொண்டு வரும் அன்பு. அதாவது நீதி, சமத்துவம், சுதந்திரத்தை 

நோக்கி அடியெடுத்து வைக்கும் கருணை, அன்பு.

மகாத்மா காந்தி கூறினார்: நாம் உண்மையில் இந்த உலகிற்கு 

அமைதியை கற்பிக்க வேண்டுமெனில் நாம் 

குழந்தைகளிடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். 

மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

புதன், 10 டிசம்பர், 2014

ஓய்வூதியர் தினம்  மற்றும் விழுப்புரம் பகுதிக்கூட்டம் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா 

ஓய்வூதியர் தினம்  மற்றும் விழுப்புரம் பகுதிக்கூட்டம் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா  08-12-2014 அன்று காலை 9மணியளவில் ஆசான் திருமண்டபத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.தோழர் K.முத்தியாலு அகில இந்திய அமைப்புச்செயலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.
 
தோழர் G.வேதாச்சலம் தலைமையில் கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது.தோழர் D.ராமலிங்கம் பங்கேற்ற அனைவரையும் பேரு மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
AIBSNLPWA கடலூர் மாவட்டம் தலைவர்  தோழர் .K.வெங்கடரமணன், மாவட்ட செயலாளர் K.சந்திரமோகன், பொருளாளர் N.திருஞானம்,உதவித்தலைவர் P.ஜெயராமன்  மாநில  துணை தலைவர்  K.இரவீந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினர்.  விழுப்புரம் பகுதியில் ஒவ்வொரு மாதத்தின்.5-ஆம் தேதி ஓய்வூதியர்கள் தவறாமல் சந்தித்து கடந்த இரண்டு ஆண்டுகளாய் பல பிரச்னைகளை தீர்த்து வைத்து மூன்றாம் ஆண்டு விடியலில் அடிஎடுத்து வைப்பது  பற்றி எல்லோரும் பெரு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தோழர் சபாபதி  தோழர் K.முத்தியாலு அகில இந்திய அமைப்புச்செயலர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 
தோழர் K.முத்தியாலு .  78.2, ஓய்வூதிய முரண்பாடுகள் நிலை  மற்றும் ஓய்வூதியர் தினம் பற்றி சுமார் 90 நிமிடங்கள் பேருரை ஆற்றினார்.


தோழர் கலியபெருமாள் மூத்த ஆர்எம்எஸ் தொழிற்சங்க தலைவர் நமது  செயல்பாடுகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, கூட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து மற்றும்  இறுதி வரை உற்சாகத்துடனும்,தோழமையுடன்  பங்கேற்றார். 
பொருளாளர் N.திருஞானம் அவர்கள் நமது நிதி நிலைமை,320 ஆயுள் உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக பீடு நடை போடுவதைப் பற்றியும் நாம் இன்னும் செல்ல வேண்டிய பாதையையும் எடுத்துரைத்தார்.
தோழியர் செல்வரசுமேரி  நமது கதைசொல்லி 
நமது மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கதை சொல்லி விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதையும்,எல்லோரிடமும் திறைமைகள் இருக்கின்றது அதை வளர்க்க வேண்டும் என்று சொன்னது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
  விழுப்புரம் கோட்டபொறியளர்கள் திரு இராமச்சந்திரன்,மதுரை இருவரும் கலந்துக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து ஓய்வுபெற்றதும் நம்மிடையேத்தான் சங்கமிக்க போகின்றோம் என்று பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே அறிவித்தனர்.




NFTE விழுப்புரம் கிளைசெயலர் தோழர் கணேசன் , FNTO விழுப்புரம் கிளைசெயலர் தோழர் ராஜேந்திரன் அவர்கள் சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கி கௌரவித்தனர்.
தோழர் B.துரைபாபு மாவட்ட துணைச்செயலர் அவர்கள் விழுப்புரம் பகுதி கூட்டங்களுக்கு எவ்வாறு முன்முயற்சி எடுத்து 120 உறுப்பினர்களில் 75 ஆயுள் உறுப்பினர்களை உருவாக்கி பல பிரச்னைகளில் உறுப்பினர்களுக்கு உதவியாக இருப்பதையும்,உறுப்பினர்கள் அல்லாதவரை எப்படி செற்பதையும் எடுத்துக் கூறினார்.
தோழர் ஜோ.வெற்றி மாவட்டத்துணைத்தலைவர் அவர்கள் விழுப்புரம் பகுதியில் நமது வளர்ச்சியினையும்,நமது உறுப்பினர்களின் பங்கினையும் கூறினார்.
தோழர் சண்முகசுந்தரம் மாவட்ட தணிக்கையாளர் நமது உறுப்பினர்கள் ஜாயின்ட் கணக்கு தன்னுடைய துணையுடன் மாற்ற வேண்டிய அவசியத்தை பற்றியும்,வருமான வரி வராமல் தடுக்க சேமிக்க வேண்டியதையும் அறிவுறுத்தினார்.

120 உறுப்பினர்கள் பங்கேற்றனர் கடலூர், சிதம்பரம்,விருத்தாசலம், திண்டிவனம்.செஞ்சி, உளுந்தூர்பேட்டை,அறம்கண்டநல்லூர் மற்றும் கள்ளக்குறிச்சி- இலிருந்து நமது பெருவாரியான  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தோழர் V.அரிகிருஷ்ணன் எல்லோருக்கும் நன்றிகூறினார்.
மதிய உணவுக்கு பின் கூட்டம் இனியே நிறைவுற்றது.