Translate

திங்கள், 2 மே, 2016

கண்ணீர்  அஞ்சலி
கடலூரின் மூத்த தொழிற்சங்கத்தலைவர் D.ரெங்கநாதன் மறைவுக்கு AIBSNLPWA நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் அஞ்சலி



நமது உறுப்பினர்களுடன் DR




தமிழ் மாநில NFTE சங்கத்தின் வித்து தோழர் சிரில் அவர்களின் அணுக்க வாரிசாக திகழ்ந்தவர்.துறை,தொழிற்சங்கம் இரண்டு 
பணிகளிலும் துல்லியத்தைப் போதித்தவர்.எதிலும் கறார்தன்மை 

என்பது அவரது பண்பு.நேர்மையாளர்.ஒழுக்கச்சீலர்.லைன் ஸ்டாப் 

ஊழியர்களின் பாதுகாவலர்.கடலூர் மாவட்டத்தில் நமது அமைப்பை பேரமைப்பாய் உருவாக்கியதில் தோழர் ரகுவுடன் இணைந்து 

செயலாற்றியதில் இருவரும் இரட்டையர் என போற்றப்பட்டனர்.

...தோழர் ஜெயராமன் nfte தலைவர்


தோழர் ரங்கநாதன் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 
என்னுடன் நீண்ட வருடங்கள் நட்பு பாராட்டியவர். 
தொழிற்சங்க கருத்துக்கள் எங்களிடையே சண்டை மூட்டிய காலமும் உண்டு.  சண்டை சங்கத்தில். நட்பு மாறியது இல்லை. 
அந்த அளவுக்கு எங்கள் நட்பு இருந்தது. 
அந்த நண்பர் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 
வாழ்க அவர் புகழ்
...தோழர் B.திருநாவுக்கரசு AIBSNLPWA கடலூர்