Translate

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

அக்டோபர் 2018  முதல்  IDA

தற்போதைய கணக்குபடி எதிர்பார்க்கும் உயர்வு  7.6%

அக்டோபர் 2018  முதல்  மொத்த  IDA 135.6% ஆகும்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

அனைத்திந்தியAIBSNLPWAமாநாடு பூரி  22,23-9-2018

P.கங்காதர் ராவ் புதிய பொதுச்செயலரின் உரை.

தோழர் ராமன்குட்டி தலைவர் உரை
தோழர் D.கோபாலகிருஷ்ணன் துணைத்தலைவர்  உரை
G.நடராசன்  துணைத்தலைவர் உரை.

தோழர்  நெல்லை அருணாசலம்  மத்தியச்சங்க நிர்வாகி  உரை


தோழியர் கோவை  சிவகாமசுந்தரி துணைச்செயலாளர் முத்தியாலு,மாநிலத்தலைவர் ராமாராவ் அவர்களால் கவுரவிக்கப்பட்டார்
நமது மாநிலச்செயலர் தோழர் R.வெங்கடாசலம் அவர்களின் உரை
தோழர் R.அசோகன் கடலூர் மாவட்டச்செயலாளர் அமைப்பு நிலை vivaathaththiஉரையாற்றினார்கள்
அரங்கம் நிறைந்தக்காட்சி
தோழர் G.நடராசன்  துணைத்தலைவர்முன்னணி தோழர்களுடன்

கோவை மாவட்ட செயலாளர் தோழர் அருணாச்சலம்



















புதிய மத்தியச்சங்க நிர்வாகிகள் பட்டியல்

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள்.
நிகழ்வுகள்..
22 மாநிலங்களிலிருந்து 774சார்பாளர்களும், 458 பார்வையாளர்களும் ஆக மொத்தம் 1232 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது தவிர ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து 183 சார்பாளர்களும் 69 பார்வையாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அகில இந்திய பொறுப்பாளர்கள் தோழர்கள் DG , முத்தியாலு , நடராஜன் , ராமராவ் , S .அருணாசலம் , மற்றும் நம் மாநில செயலர் தோழர் RV ஆகியோர் பங்கு பெற்றனர். மாநாட்டில் நம்மை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
அமைப்பு நிலை விவாதத்தில் தமிழ் மாநிலத்திருந்து தோழர்கள் N.S.தீனதயாளன் -STR , S.வீராசாமி -மதுரை, B .அருணாசலம்-கோவை , R .அசோகன்-கடலூர், ஆகியோர் பங்கு பெற்று பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.
22-ஆம் தேதி இரவு ஒடிஷா மாநில கலைஞர்களின் ஒடிசி நாட்டிய மிக சிறப்பாக வண்ணமிகு நிகழ்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி அனைவரின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருந்தது. அன்று இரவு உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயத்திலிருந்து வரவழைக்கப்பட்ட பிரசாதம் மிக சிறப்பான முறையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
23 ஞாயிறு அன்றும் பல்வேறு மாநிலச்செயலர்கள் பரப்புரையாற்றினர். விவாதங்களுக்கு பதில் அளித்து பொது செயலர் தோழர் நடராஜன் உரையாற்றினார்.
Pension is Right என்ற புத்தகம் தோழர் DG அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் தயாரிக்க ,தயாரிப்பில் முழு முயற்சி எடுத்துக்கொண்ட அகில இந்திய துணைப்பொது செயலர் தோழர் V.V.S. மூர்த்தி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளும் நம் தோழர்களால் வாங்கப்பட்டு விற்று தீர்ந்து விட்டது. மிகவும் பயனுள்ள இப்புத்தகம் மீண்டும் அச்சிட்டு வெளியிட மாநிலசெயலர்கள் முன் முயற்ச்சி எடுத்து தெரிவித்தால் இரண்டாம் பதிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
நம்மை எதிர்நோக்கியுள்ள மிக முக்கியமான கோரிக்கையான ஓய்வூதிய மாற்றம் 01-01-2017 முதல் விரைவில் பெறுவதற்கு எதிர்வரும் 2018 நவம்பர் மாதம் டில்லியில் ஒரு கருத்தரங்கம் ( convention ) நடைபெறும் அதைத் தொடர்ந்து அனைத்து மாநில , மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று தோழர் DG முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக பலத்த கரவொலிகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
அனைத்திந்திய நிர்வாகிகள் தேர்வும் ஒரு மனதாக நடந்தேறியது. தோழர் P S ராமன்குட்டி அவர்கள் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை தலைவர்களாக தோழர் DG , G.நடராஜன் மற்றும் A . சுகுமாரன், பொது செயலாளராக கர்நாடக மாநிலத்தை சார்ந்த தோழர் P .கங்காதரராவ் , துணைப்பொது செயலாளர்களாக தோழர் முத்தியாலு மற்றும் ஆந்திரா மாநிலம் தோழர் வரப்பிரசாத ராவ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளராக தோழர் TS விட்டோபன் அவர்களும் துணை பொருலாளராக தோழர் ராமராவ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். AGS ஆக நெல்லை மாவட்ட செயலர் தோழர் S .அருணாசலம் மீண்டும் தேர்வாகி உள்ளார். மற்றும் தோழியர் V. ரத்னா சென்னை தொலைபேசி அவர்கள் AGS ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் நிகழ்ந்த வரலாறு காணாத வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கிய கோவை தோழியர்சிவகாம சுந்தரி அவர்கள் விழா மேடையில் ஒடிஷா மாநில பாரம்பரிய முறையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் .
இந்த மாநாட்டின் ஒரு சிறப்பு அம்சமாக 98 வயது நிரம்பிய ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரைச்சார்ந்த பெரியவர் சைதன்ய பெஹெரா அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் . 1921 ஆம் வருடம் பிறந்துள்ள இவர் கைத்தடி இல்லாமல் , யாருடைய உதவியும் இல்லாமல் தாமே நடப்பது போற்றுதற்குரிய விஷயம்.
மொத்தத்தில் நம் அமைப்பு ஓய்வூதியர் மத்தியில் ஒரு பலமான அமைப்பாக இருக்கிறோம் என்பதை மெய்ப்பித்தது. சென்ற மாநாட்டிற்குப் பிறகு நமது சங்கம் 104.49 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளதாக தோழர் DG அறிவிக்க அனைவரின் கரவொலி விண்ணைப்பிளந்தது.
நம் மாநில செயலர்தோழர் RV தமது பரப்புரையில் தமிழ் மாநில உறுப்பினர் எண்ணிக்கை பத்தாயிரத்தினை தாண்டி விட்டது. நம் லட்சியம் அடுத்த மாநாட்டிற்குள் பதினைந்தாயிரத்தை தொட்டுவிடுவோம் என்று பலத்த கரகோஷங்களிடையே தெரிவித்தார். நம் வளர்ச்சி விகிதம் சுமார் 140 சதவீதமாகும்.
இறுதியாக சிறப்பான முறையில் நல் வசதிகளுடன் நாம் தங்குவதற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்திருந்த வரவேற்பு குழுவிற்கு நன்றி பாராட்டப்பட்டது. வயிற்றுக்கு சங்கடம் தராத சுவைமிகு ஒடிஷா பாரம்பரிய உணவு வழங்கிய சமையற்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் 

                                                    

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018



 அனைத்திந்திய AIBSNLPWA மாநாடு பூரியில் 
 கடலூர் மாவட்டச்சங்கத்தோழர்கள்,தோழியர்கள்

























வியாழன், 20 செப்டம்பர், 2018

பூரி அனைத்திந்திய AIBSNLPWA மாநாட்டிற்கு உற்சாகத்துடன் பயணித்த கடலூர் மாவட்டச்சங்கத்தோழர்கள்,தோழியர்கள்
சென்னை சென்ட்ரல் 20-9-2018









































நாடு முழுவதுற்குமான அதாலத் 18-9-2018

நாடு முழுவதுற்குமான அதாலத்தின் ஒரு பகுதியாக  18-9-2018 அன்று மதியம் 2-30 மணிக்கு சென்னை தொலைபேசி மாவட்ட நன்னம்பிக்கை புத்தாக்க  (INSPIRATION )அரங்கில் நடைபெற்றது.
மாநிலச்சங்கநிர்வாகிகள்,மாவட்டச்சங்கநிர்வாகிகள் ,முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டு தீர்விற்கான ஆய்வினை முன்வைத்தனர்.

நமது கடலூர்  மாவட்டச்சங்கத்தின் சார்பாக தோழர்கள் P.ஜெயராமன் தலைவர்,அசோகன் செயலர் கலந்துக்கொண்டனர்.

புதன், 12 செப்டம்பர், 2018

1-1-2017 முதல் பென்ஷன் மாற்றம் 
ஆசிரியர்:D.கோபாலகிருஷ்ணன்அ.இ.துணைத்தலைவர்
திருச்சி மாநில மாநாட்டு அறிக்கை இணைப்பு