Translate

திங்கள், 31 டிசம்பர், 2018

SAMPANN நேரடி காணொளி ஒளிபரப்பு

இன்று 30-12-2018 இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் ஓய்வூதியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பட்டுவாடாவை நேரடியாகவே அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்தும் SAMPANN ( SYSTEM FOR ACCOUNTING AND MANAGEMENT OF PENSIONS) திட்டத்தினை வாரணாசியில் காணொளி கண்காட்சி மூலம் துவக்கி வைத்து பேசினார். 

அந்த காணொளியினை நேரடியாக நேரடி ஒளி/ஒலி பரப்பு சென்னை அண்ணாசாலை தொலைபேசி நிலாயத்தில் உள்ள "ஹால் ஆப் இன்ஸபிரேஷன் " ஹாலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இந்த வாய்ப்பினை நம் சங்கம் அதன் தலைவர்கள் நல்ல முறையில் பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி வாரணாசியில் பிரதமரின் மற்ற அலுவல்கள் காரனாக துவங்க சற்று கால தாமதமானது.அந்த சமயத்தை பயன்படுத்தி PCCA மற்றும் CCA அவர்களுடன் கலந்தாலோசனை நடைபெற்றது. இந்த திட்டத்தின் சாதகங்களை தன் உரையில் எடுத்துரைத்தார் PCCA அவர்கள். 


நம்  சங்கத்தலைவர்கள் தோழர்கள் G.நடராஜன் , K.முத்தியாலு, T.S. விட்டோபன், V.ரத்னா , V. ராமராவ் , R. வெங்கடாசலம் , N.S. தீனதயாளன் , S. காளிதாஸ் , சென்னை தொலைபேசி மாநில M.முனுசாமி, S.தங்கராஜ் , M.கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள் .


ஓய்வூதியர்களின் குறைகள் இந்த ஏற்பாட்டின் மூலம் விரைவில் தீர்க்கப்பட்டால்தான் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனக்கொள்ளலாம் . 

தபால் நிலையம் சேமிப்பு அக்கவுண்ட் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த திட்டம் விஸ்தரிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர்.

CCA திரு பிரதான் அவர்கள் பேசும்போது KYP  என்பது அத்தியாவசியமானதல்ல , KYP  விவரங்கள் இல்லாமலேயே ஓய்வூதியம் அவரவர் வங்கி /தபால் நிலைய அக்கவுண்டில் சேர்க்கப்படும். 


தபால் நிலைய கணக்குகளுக்கு SAMPANN ஐ விஸ்தரிக்க சற்று கால தாமதமாகும். தபால் நிலைய சேமிப்பு அக்கவுண்ட் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் பென்சனர்களை வங்கி க்கு மாறும்படி நாங்கள் கோரவில்லை ஆனால் அவர்களாகவே வங்கி யில் சேமிப்பு கணக்கு உண்டாக்கி அதன் வழியாக பென்ஷன் வாங்க முயற்சித்தால் நாங்கள் வரவேற்போம். 

ஓய்வூதியர்கள் குறைகளை களைய ஒவ்வொரு SSA தலைமையகத்திலும்  ஓய்வூதியர் குறைதீர்க்கும் மையம் ஏற்படுத்தப்படும். 

அம்மையங்களை பென்சனர்கள் அணுகி தங்கள் குறைகளை விரைவாக தீர்த்துக்கொள்ளலாம்.

பிறகு நேரடியாகவே காணொளி நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 100 தோழர்கள் இதனை கண்டு பயனுற்றார்கள் இத்திட்டத்தை செயல்படுத்த இன்னும் கால நிர்ணயம் செய்யப்படவில்லை.
                                                           செய்தி திருநெல்வேலி வலைப்பதிவு ..நன்றி

வெள்ளி, 28 டிசம்பர், 2018

27-12-18 இல்கடலூர்  மாவட்ட கிளையின் சிறப்பான ஓய்வூதியர் தினம்






 





திங்கள், 24 டிசம்பர், 2018

கிருஸ்துமஸ் 2018,புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019

இயேசுவும்,கிருஷ்ணரும் மேய்ப்பரே
எளிமையும்,அன்புமே உலகை ஆளும்.

பகிர்ந்துக்கொள்வது,அன்பு செலுத்துவது
தோள் கொடுப்பது, துயர் துடைப்பது,
உற்சாகம் கொள்வது,உயர்வில் மகிழ்வது,
தன் சுதந்திரத்தை இழக்காமல் ஏற்றமாய் இருப்பது 
நம்மை நெறிபடுத்துவதால்மற்றவரையும் மகிழ்விப்பதாகும்.

                       கிருஸ்துமஸ் 2018,புத்தாண்டு வாழ்த்துக்கள்.2019

புதன், 19 டிசம்பர், 2018

கடலூர் மாவட்டத்தின் பென்ஷனர் விழா அழைப்பு 27-12-2018

கடலூர் மாவட்டத்தின் மீண்டும் ஒரு சிறப்பான கூட்டம் புதிய சில கருத்துக்களோடு உங்களுடன்.
அனைவரும் வருக வருக என்று வரவேற்கிறோம்.


விழுப்புரம் பகுதியில் 19-12-2018  அன்று பென்ஷனர் தின விழாவும்,
விழுப்புரம் பகுதி6 வது ஆண்டு விழாவும்- தோழர் RV புதிய மாநிலச்செயலரின் எழுச்சி உரையும்.






























19.12.2018 அன்று காலை கடலூர் மாவட்டம் விழுப்புரத்தில் பென்ஷனர் தினமும் விழுப்புரம் பகுதி ஆறாவது ஆண்டுமாநாடு மற்றும் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் தோழர்.வீரராகவன் தலைமையில் நடைபெற்றது..தோழர்கள் P.ஜெயராமன்,N. திருஞானம், சந்திரமோகன், அன்பழகன் புதுவை,
அசோகன்,செல்வரசு மேரி சாந்தகுமார் , துரைபாபு , வீரமணிஉரை ஆற்றினர்.
மாநில செயலாளர் ஆர் .விசிறப்புரைஆற்றினார்.

மாவட்டம் முழுவதிலும் இருந்து 200 தோழர்கள்.கலந்து கொண்டனர்.































விழுப்புரம் பகுதிக்கான புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.கடலூர் மாவட்ட அனைத்து தோழர்களும் புதியநிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
                அமைப்புச்செயலர்: தோழர்  A.வேலாயுதம்

செவ்வாய், 18 டிசம்பர், 2018

கண்ணீர் அஞ்சலி
PS என்று எல்லோராலும் அழைக்க படுகின்ற P.சுப்ரமணியன் 17-12-2018 அன்று மறைவு.


AIBSNLPWA மற்றும் அவரது நண்பர்கள் இறுதி மரியாதையில் கலந்துக் கொண்டனர். அவரின் ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திக்கிறோம்.


எங்கள் P.S.
லெனின் போல உயரம் அதிகமில்லை
ஆழ்கடல் போல அத்தனை அமைதி
சிந்தனையும் அப்படித்தான், ஆழமானது
குணத்தால் நிறை குடத்தான், தளும்பான்!

விரிகருத்தால் கூர்மை அவன் பார்வை,
எரிமலை அன்ன சுட்டெரிக்கும், உண்மை!
எரிமலையின் சாம்பல்கூட சுடும், இவன்வார்த்தை
ஒருபோதும் சுட்டதில்லை ஒருவர் மனத்தை!
சீறிச் சினக்கும் சீயம் அமைதிகொள
சீதையாம் இலக்குமி உடனிருக்க வேண்டும்!
இதயம்கூட படபடத்து சப்தமிடாத போது
இவன் சுமந்தான் பேஸ்மேக்கர், விந்தை!
வாழ்க்கைச் சுழலில் சிக்காத படகில்லை
சுழலிலே உழன்றபோதும் முகம் சுழியான்!
மாடிஏற முடியாமல் போகும் என்றோ
தேடிஓடவில்லை பதவி உயர்வு தங்கிவிட்டான்--
பணிஓய்வு பெற்றவர்க்குத் தொண்டு செய்தான்;
பணிநிறைவு செய்யாமல் வாழ்வை நிறைத்தான்,
ஓய்வூதியர் நாளில் நெடுஓய்வு கொண்டான்!
புரட்சிகர கொள்கை உயர்த்திய தோழன்
இரெழுத்தால் நாமறிந்த நிறை அன்பன்!
இருபெண்கள் செல்வமென வாழ்ந்த தலைவன்
புரட்சி மங்கையின் பெயர்சூட்டி மகிழ்ந்தான்!
இல்லமும் இயக்கமும் இருகண்ணென இயங்கிய
எங்கள் பி.எஸ். இன்றில்லை, எப்படி நம்ப?
பாரி மகளிருக்கு அன்றிருந்தார் கபிலர்
அருமைத் தோழனுக்கு நாமிருப்போம் என்போம்!
போய் வா நண்பா!
உன் நினைவுகளைப் பத்திரமாய்
பூட்டி வைப்போம் நெஞ்சில்!
( இன்று விடியலில் இயற்கை எய்திய P S என அனைவரும் அன்போடு அழைக்கும் தோழர் p சுப்பிரமணியன், மேனாள் கடலூர் மாவட்டத் தொலைத் தொடர்பு சங்க NFTE மாவட்டச் செயலாளரின் நட்பை தோழமையை நினைந்து...
இறுதி நிகழ்வுகள் கடலூரில் நாளை மாலை அல்லது மறுநாள் காலையில் ......
   
நன்றி--செய்தியை பகிர்ந்துக்கொண்ட தோழர் நீலகண்டன் 

புதன், 12 டிசம்பர், 2018


தஞ்சையில் முப்பெரும் விழா 10-12-2018

    



  10-12-2018 திங்கட்கிழமை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள்நல சங்கத்தின் 
முப்பெரும் விழா வான ஏழாவது மாவட்ட மாநாடுஓய்வூதியர்கள் தின விழா 15வது ஆண்டு தொடக்க விழா மற்றும்பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் தஞ்சை கல்லு குளம்நாஞ்சிக்கோட்டை சாலையில்  அமைந்துள்ள திரு இருதயமறைமாவட்ட பேராலய மக்கள் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.தோழர் சந்திர பிரகாஷ் நினைவரங்கத்தில் காலை 10 மணிக்குதொடங்கிய மாநாடு மாலை ஆறு மணிக்கு நிறைவுற்றதுகிட்டத்தட்ட400  தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக தோழர் ஜி நடராஜன் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் டி ராமாராவ் தமிழ் மாநிலத் தலைவர் தோழர்வெங்கடாசலம் தமிழ் மாநில செயலர் ஆகியோர் அழைக்கப்பட்டுபங்குபெற்று சிறப்பித்தனர்.

தோழர் சாமிநாதன் தலைமையில் ஒரு குடும்பமாக சமூக செயல்களில் சாதனைகள் புரியும் ஒருமித்த ஒத்திசைவுக்குழு அனைத்து நல் உள்ளங்களுக்கும்  கடலூர் தோழர்களின் நெஞ்சு நிறை வாழ்த்துக்கள்.
























தோழர் சாமிநாதன் மாவட்ட செயலர் தன்னுடைய வரவேற்புரையில்மாவட்ட சங்க செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறிஅனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று தனது வரவேற்பு உரையைநிறைவு செய்தார்பிறகு 71 வயதை அடைந்துள்ள தோழர்கள்வெங்கடாசலம் மாநில செயலர் , சந்தானகோபாலன் மாவட்டதுணைத்தலைவர் கல்யாணசுந்தரம் உறுப்பினர் ஆகியோருடைய பீமரதசாந்தி விழா தம்பதியருக்கு ஆளுயர ரோஜா மலர் மாலைஅணிவிக்கப்பட்டு கேக் வெட்டி உறுப்பினர்கள் அனைவரதுவாழ்த்துக்களுடனும்  சிறப்பாக கொண்டாடப்பட்டது .தவிரவும் இந்தமாதம் பிறந்த தினம் வாய்க்கப்பெற்ற தோழர் தோழியர்கள் அனைவரும்கேக் வெட்டி வாழ்த்துக்களுடன் பிறந்தநாளை சிறப்பாககொண்டாடினார்கள்.







அடுத்து தோழர்கள் ஜி நடராஜன் அகில இந்திய துணைத் தலைவர்தோழர் ராமாராவ் மாநிலத்தலைவர் தோழர் வெங்கடாசலம் மாநிலசெயலர் ஆகியோரை சிறப்பித்து பொன்னாடை ஆள் உயர ரோஜாமாலை அளிக்கப்பட்டு தஞ்சை பெரியகோயிலின் உருவம் கொண்டநினைவுப் பரிசு மற்றும் தஞ்சை தலையாட்டி பொம்மை இனிப்புவகைகள்  தஞ்சை முந்திரி ஆகியவை உறுப்பினர்களின் ஆரவாரத்துடன்அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர.

தோழர் கே எஸ் கே தோழர்  கே டி அவர்களது சங்கப் பணியின் பொன்விழா மற்றும் பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள் தஞ்சை சார்பில்தோழர் சாமிநாதன் சமுதாய பணிக்கான பெரும் கொடையாளர்தோழியர் சந்திரகுமாரி அவர்கள் விழாவில் பொன்னாடைஅணிவிக்கப்பட்டு ஆளுயர ரோஜா மலர் மாலை அணிவிக்கப்பட்டுநினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு அனைவரதுஉறுப்பினர்களின் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டு தங்களதுஏற்புரையில் உரையாற்றி மகிழ்ந்தனர.

நமது மாநாட்டினை மதுரை மாவட்ட செயலர் தோழர் வீராசாமி மதுரைமாவட்ட செயலர் பட்டுக்கோட்டை தோழர்C.V. தங்கையன்தோழர் princeதோழியர் பத்மினி மற்றும் தோழர்கள் கேகிள்ளிவளவன் NFTE, A.இருதயராஜ்,BSNLEU, பிரபாகரன் AIBSNLEA,A.M.F. ஜெயசீலன்,FNTOமுருகையன்,SEWA,அரியலூர் ஆறுமுகம் ,எஸ் ராஜா ராமன் ஆர்விவேகானந்தன் ஆர் மணிவண்ணன் ஆகிய பணியில் உள்ள தஞ்சைபிஎஸ்என்எல் துணைப் பொது மேலாளர்கள் ஆகியோர் தங்களதுசிறப்பான வாழ்த்துக்களை கூறியதோடு மட்டுமல்லாமல் தங்களதுகருத்துக்களையும் நமது சங்கத்தின் பெருமைகளையும் போற்றிப்புகழ்ந்து சிறப்பானதொரு வாழ்த்துக்கள் கூறி உரையை நிறைவுசெய்தனர் முதலாவதாக தஞ்சை மாவட்ட சங்கத்தின் வலைதளத்தைபட்டுக்கோட்டை தோழர் சிவசிதம்பரம் அவர்கள் சிறப்பான முறையிலேவலைதள பொறுப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டு நமது தோழர் ஜிநடராஜன் மத்திய சங்க துணைத் தலைவர் வலைத்தளத்தினை பெருத்தஆரவாரத்துடன் மன்றத்தில் அனைவரது மகிழ்ச்சியுடன்கரவொலிக்கிடையே தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தனது சிறப்புரை மற்றும் ஏற்புரையில் தஞ்சை மாவட்டத்தின்சமுதாய தொண்டினையும் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்தஞ்சை மாவட்டம் ஆற்றிய சேவையினையும் சிறப்பித்து வாழ்த்திஉரையாற்றினார் இன்றைய நிலையில் எம் ஆர் எஸ் பற்றியும் அதற்குவருங்காலத்தில் நாம் வேறு விதமாக எவ்வாறு பயன்படுவது என்பதுபற்றி மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஓய்வு ஊதியம் உயர்வுகுறித்தும் ஒவ்வொரு உறுப்பினரும் நமது சங்கத்திற்காக இரண்டுஉறுப்பினர்களை சேர்க்க முயற்சி எடுக்கக்கோரியும் சிறப்பானதொருஉரை நிகழ்த்தி நிறைவு செய்தார் தோழர் ராமாராவ் மாநில தலைவர்தஞ்சை மாவட்ட சங்கத்தின் சமுதாய பணியினையும் நாம் அறிவிப்பு செய்து நடத்தப்படுகின்ற பொன்விழா மணிவிழா பீமரத சாந்தி விழாசதாபிஷேக விழா மற்றும் பிறந்த விழா காட்சிகளை கண்டு மகிழ்ந்துபிற மாவட்ட சங்கங்களிலும் மாநில சங்கத்திலும் இதுபோன்றவிழாக்கள் நடத்தப்பட வேண்டுமென்று ஒவ்வொரு மாவட்டசங்கங்களில் உரை நிகழ்த்தும் போது அறிவுறுத்துவதாகவும் கூறிமகிழ்ந்தார்.

தோழர் வெங்கடாசலம் மாநில செயலர் பொருள் ஆய்வுக் குழுவினைதொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் தனது சிறப்பு மற்றும்ஏற்புரையில் இது ஒரு மிக திருப்திகரமான மாநாடு பணியில்இருக்கின்ற சங்கங்கள் கூட நடத்த முடியாத அளவிற்கு சிறப்பாக இந்தமாநில மாநாடு நடைபெறுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது  நம்முடைய78.2 நிலுவை பெற்று 60 40 முறையையும் நீக்கியது பற்றியும் தற்போதுநமது pension உயர்வு மாற்றத்திற்கும் மூன்றாவது பி ஆர் சி கும் எந்தசம்பந்தமும் இல்லை தற்பொழுது உள்ள நிலையில் நாம் எவ்வாறு மற்றஓய்வூதிய தங்களுடன் சேர்ந்து இந்த ஓய்வு ஊதியத்தை உயர்த்தி பெறப்போகிறோம் என்பது பற்றியும் நமது ஓய்வூதிய மாதாந்திர பட்டுவாடாஅந்த அந்த சிசி   அலுவலகங்களிலிருந்து இனி பெற போவதின் சாதகபாதங்களை பற்றியும் தற்போது நடைபெற இருக்கின்ற பட்டுவாடாசிறந்தது என்றும் தனது 71 வது வயதிலும் சங்கப்பணி ஆற்றுவதுபற்றியும் நமது தமிழ் மாநிலம் இந்திய அளவிலே அதிகமானஉறுப்பினர்களை கொண்ட மாநிலம் தமிழ் மாநிலம் என்றும் சிறப்பித்துகூறி தனது உரையை  நிறைவு செய்தார்.
 வாழ்க வளர்க  பிஎஸ்என்எல்  ஓய்வூதியர்  நல சங்கம் . நன்றி.
இப்படிக்குதோழமை உணர்வு மற்றும்  வாழ்த்துக்களுடன்  
தஞ்சைமாவட்ட  பிஎஸ்என்எல்  ஓய்வூதியர்கள் நல சங்கம் .