Translate

செவ்வாய், 31 ஜூலை, 2018

31.7.2018  அன்று பணி ஓய்வு பெற்றதோழர்கள்

  1. சிவகுமாரன் AGM
  2. விஜயமாலா SDE
  3. R.V.ஜெயராமன் OS
  4. மண்ணாங்கட்டி JE
  5. ஆறுமுகம் JE
  6. கலியமூர்த்தி TT













பணி ஓய்வு பெற்றதோழர்கள் நீள் ஆயுளும் 
 நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கவளமுடன்  பல்லாண்டுகள் என நாம் 
வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்

செவ்வாய், 24 ஜூலை, 2018

பென்ஷன் பத்ரிகா ஜூலை மாத தலையங்கம்
 பூரிக்கு பெருமையுடன் செல்வோம்...மாநில வலைப்பதிவிலிருந்து

BSNL ஓய்வூதியர்களின் மிகப்பெரிய சங்க அமைப்பான நம் AIBSNLPWA  செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் பூரியில் கூட உள்ளது . கடந்த 9 ஆண்டுகளில் நம் செயல்பாடுகள் , அதன் மூலம் நாம் வென்றெடுத்தவெற்றிகள் மேலும் இனி வரும் 3 ஆண்டுகளில் நாம் மேற்கொள்ளவேண்டிய திட்ட செயல்பாடுகளையும் திட்டமிட உள்ளோம். 2009 க்கு முன்நம் BSNL ஓய்வூதியர்கள் சார்பாக குரல் கொடுக்க யாரும் முன் வரவில்லைநமக்காக அனுதாபம் கொள்ளக்கூட யாருமே இல்லாத ஒருநிலைமையையும் நாம் நன்கு உணர்கிறோம்.
மத்திய அரசு பொது நிறுவனங்களின் ஊழியர்கள் எவருமே ஓய்வூதியமாற்றம் செய்யப்படாத நிலை இருக்கும் போது , நாம் மட்டும் நம்ஓய்வூதியர்கள் ஓய்வூதியம்  மாற்றியமைக்கப்பட வேண்டும் எனும்கோரிக்கை வைத்தபோது , " இது நடக்காதுநிறைவேறாத கனவு இது " என்று பலரும் கூறிய போது , நாம் நம் அயரா முயற்சியின் மூலமாகஓய்வூதிய மாற்றம் என்ற கனவினை நினைவாக்கி காட்டினோம்.  CCS 1972-வின் விதி முறைகளின் கீழ் நாம் ஓய்வூதியம் பெற்று வருகிறோம்.எனவேநமக்கு ஓய்வூதியம் மத்திய அரசே அளிக்க வேண்டுமென்று நாம்வலியுறுத்திய பொது, " இது விபரீதமான கோரிக்கைபிறகு பார்த்துக்கொள்ளலாம் " என்றிருந்தார்கள்ஆனால் நாம் நம் கோரிக்கையில்மிகவும் உறுதியாக இருந்து வந்தோம்கடைசியில் மத்திய அரசே நம்கோரிக்கையையை ஏற்றுக்கொண்டதுஆம் தோழர்களே BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் முழு பொறுப்பும் முழுக்கமுழுக்க மத்திய அரசையே சாரும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு/ஓய்வூதியர்களுக்கு சம்பள கமிசன் மூலமாகஎப்போதெல்லாம் செய்கிறார்களோ அப்போதெல்லாம் BSNL ஓய்வூதியமாற்றங்கள் செய்யப்பட்ட வேண்டும் என்று ஒரு நிலையானகோரிக்கையினை நாம் வைக்கும்போதுபெரிதாக எண்ணமுடியாத , பெருங்கனவு காண இயலாத சிலர் முரண்பாடான கோரிக்கைகளைவைக்கிறார்கள்.
மத்திய தொழிற்துறை நிறுவனங்களில் பணியில் சேரும்போது,1946 Industrial Employment விதி பிரகாரம் வரையறுக்கப்பட்ட கால வேலைவாய்ப்பினை எல்லா தொழிற்துறைகளிலும் அமலாக்க மத்திய அரசுமுயற்சித்து வருகிறதுஇதன் முடிவு என்னவாகும் என்றால் , எல்லாவகையான சமூகப்பாதுகாப்பு விதிகளை தொழிலாளிகளிடமிருந்துதிரும்பப்பெற்று அவர்களை புதிய ஒப்பந்த ஊழியர்களாக ஆக்குவதுதான்ஆளும் வர்க்கத்திலிருந்து இடையறாத தாக்குதல்களுக்கு இடையில்ஓய்வூதியம்   சிக்கித் தவித்து வருகிறது.
இனிவரும் தலைமுறைக்கு ஓய்வூதியம் என்பது இனி இருக்காது என்பதைநாம் அறிவோம்பென்ஷன் எதிர்காலத்தில் ஒருவேளை கிடைக்கலாம்எனும் நம்பிக்கை கூட யாரும் கொள்ள முடியாது.அவர்களுக்கு சமூகபாதுகாப்பு என்பது அறவே கிடையாதுவேலை இல்லாதோர் எண்ணிக்கைஅதிகமாவது , மைனாரிட்டியான உழைக்கும் வர்க்கத்திற்கு மிகப்பெரியஅச்சுறுத்தலாகும். .அப்படிப்பட்ட சூழலில் வயது முதிர்ந்த நம் நிலைமைமிகவும் கஷ்டமாக இருக்கும்.வயதானவர்களின் வாழ்வாதாரம் இளையசமுதாயத்தின்  பொறுப்பில்  இருக்கிறது.
நாம் ஓய்வூதியம் பெறுவதன் மூலம் ஓரளவு நல் வாய்ப்புஅடைந்தவர்களாக இருக்கிறோம்எதுவுமே இல்லாமல்கஷ்டப்படுவோரின் நிலையை எண்ணிப்பார்க்கிறோம்இந்த நிலை மாறிபொதுவான அமைதிகாரமான சுழ்நிலை தவழ நாம் ஆற்ற வேண்டியகடமைபொறுப்பு நம் பால் உள்ளதுமீண்டும் நாம் நீண்ட தூரம் பயணம்மேற்கொள்ள வேண்டும்நாம் மட்டும் தனியாக பயணிக்க முடியாதுசேர்ந்து நடக்கும் போது மேலே மேலே முன்னேறுவோம் என்ற உறுதியைமனதில் ஏந்திசெல்வோம்நாம் திரும்பிப் பார்க்க  தேவையில்லை.
பூரி அனைத்திந்திய மாநாடு மிகப்பெரிய அயிட்டங்களை தனது நிகழ்ச்சிநிரலில் அடக்கியுள்ளது.
வாருங்கள் பூரிக்கு பெருமையுடன் செல்வோம்.

புதன், 18 ஜூலை, 2018

அகில இந்திய AIBSNLPWA சங்க அறைகூவலுக்கு இணங்க  18-7-2018 அன்று காலை 9மணியில்இருந்து பொது மேலாளர் அலுவலகத்துக்கு எதிரில்
 200 உறுப்பினர்களுக்கு      மேல் கலந்துகொண்ட  எழுச்சி மிகுந்த மாபெரும்தர்ணா போராட்டம்
முன்னணி தோழர்களின் சிறப்புரை
 தோழர்கள் செல்வம்,அன்பழகன்,
சகோதர சங்கங்களின் வாழ்த்துரை

























   கடலூர் மாதாந்திர பகுதிக்கூட்டம் 14-7-2018