Translate

ஞாயிறு, 25 ஜூன், 2017

 30.6.2017 அன்று பணி ஓய்வு பெறும் நமது தோழர்கள்
Shared publiclyView activity
















பணிஓய்வு பெறும்  இவர்கள் பல்லாண்டு நீள் ஆயுளும் நிறை செல்வமும் பெற்று வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்.

உன்னதமான ரமலான் மாதத்தில் உலகமெல்லாம் வாழ்கின்ற  

 இஸ்லாமியப் பெருமக்கள்

30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து

புலன்களை, இச்சைகளைக் கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் 

நிறைவில்

விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திரு நாளான ரமலான் ஈது 

பெருநாளில்

அண்ணல் நபிகள் நாயகம் கடைப்பிடித்துக் காட்டிய வாழ்க்கை 

நெறிகளைப் பின்பற்றி

விருந்தோம்பி,உயர்ந்த பண்போடு, மனிதநேய அன்பு காட்டி

இத்திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரசகோதரிகள் 

அனைவருக்கும்


எங்களது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் 

கொள்கிறோம்.

வெள்ளி, 2 ஜூன், 2017

கண்ணீர் அஞ்சலி 


தோழர் S.கனகசொருபன்


தோழர் S.கனகசொருபன் 01.06.2017 அன்று காலையில் 8 மணிக்கு இயற்கை எய்தினார்.
ன்றுபட்ட NFPTE பேரியக்கத்தின் தலைவரும் , அனைவராலும் குருஜீ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
 FNTO  மூத்த முன்னாள் தலைவர்களில் . முன்னவராக திகழ்ந்தவர்..
தோழர்கள் ஜமால்,சுப்பராமன்திரு வள்ளிநாயகம்  முதலிய எண்ணற்ற முன்னணி தோழர்களுடன் ஒரு பெரும் சக்தியாக விளங்கியவர்.
தோழர் ஜெகனோடு இருந்த சமகால சமமான தொழிற்சாங்க தலைவர் ஆவார்..
தொலைதொடர்பு ஊழியர்களின் மூத்த தோழர், தன்னிரகற்ற தலைவன், கடலூர் ஊழியர்களின் மத்தியில் தனக்கொரு தனி இடம் பிடித்த மாபெரும் தலைவரும் ஆவார்..
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற எண்ணத்தோடு எல்லோரிடமும் கண்ணியத்துடன் நட்பு பாராட்டியவர்.
1960,1968 வேலை நிறுத்த போராட்டத்தில் முன்னிலை தலைமை வகித்தவர்.
தி.மு.க. ஒரு மக்கள் எழுச்சியாக இருந்தபோது திருவாளர்கள் அண்ணாதுரை,
கலைஞர்,பேராசிரியர் அவர்களுக்கு அன்புக்குரிய தம்பியாக திகழ்ந்தவர்..

இவரது வீடு திருவாளர் அண்ணாதுரை,அவர்களால் திறந்து வைக்கப்பட்டது..

ஒய்வு பெற்ற பிறகும் ஒன்றிணைந்த BSNL & DOT ஓய்வூதியர் நலச்சங்கம் AIBSNLPWA –இன் ஒவ்வொரு கூட்டங்களிலும் நன்கொடை அளித்து கலந்துக்கொண்டார்..நாம் செய்யும் நற்செயல்களை பாராட்டி நம் முன்னணி தோழர்களுக்கு உற்சாகம் அளித்து வாழ்த்தினார்.


அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நமது கடலூர் மாவட்டச் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இரங்கல் கூட்டம்

01.06.2017 அன்று மாலை இரங்கல் கூட்டம் அவரது இல்லத்தின் அருகே அனைத்து தொழிற்சங்கங்க தலைவர்கள் தோழர்களுடன் அவரது போற்ற தகுந்த நினைவுகளை நினைவுறுத்தி  நடந்தது. மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அன்னாரின் இறுதி ஊர்வலம் கடலூர் செம்மண்டலம், காந்தி நகரிலிருந்து (02-06-2017) காலை 9.00 மணியளவில் புறப்பட்டு அன்னாரின்  மீளா உறக்கத்திற்கு .விடை கொடுக்கப்பட்டது.

Balki Narayanan Hearty condolences comrade

Selvaraju Natarajan ஆழ்ந்த இரங்கல்


Raja Sekaran அவரோடு பழகிய நாட்களின் நினைவலைகள்.குடூம்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்
Sekar Murugaian Remembering this wonderful and dnamic soul forever who's to remain in our hearts. May his soul rest in peace!

Bt Arasu நினைவுகூறத்தக்கது இப்படம்
Bt Arasu அண்ணன் ஜமால்தலைவர் சொரூபன்திரு சுப்பராமன்திரு வள்ளிநாயகம் ஆகியோர்..
Sekar Murugaian திரு. சொரூபன் மற்றும் ஜமால், இருவரின் நினைவும் நிழலாடுகிறது.