Translate
சனி, 22 பிப்ரவரி, 2020
வியாழன், 13 பிப்ரவரி, 2020
AIBSNLPWA சிதம்பரத்தில் 10-2-2020 அன்று நடந்த முப்பெரும் விழா
10.02.2020அன்றுAIBSNLPWA கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதி இரண்டாம்ஆண்டு விழாவும் ஓய்வூதியர் தின விழாவும் VRS_optees 2019 வரவேற்பு விழாவும் ஆகிய முப்பெரும் விழா தோழர். ,N.தக்ஷிணாமூர்த்தி தலைமையில் மிக விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.200 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டு உள்ளனர். தோழர்.H. இஸ்மாயீல் மரக்காயர் வரவேற்று பேசிட தோழர்.K.லட்சுமிநாராயணன் ஆண்டறிக்கை வாசித்திட பொருளாளர்.தோழர்.இஸ்மாயில் மரக்காயார் வரவு செலவு அறிக்கையை அவையில் தாக்கல் செய்து பெருத்த கரவொலி யோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிதம்பரம் பகுதி முப்பெரும் விழாவில் தோழர். A.ஜெயகுமார் மாவட்ட உதவி செயலாளர் உரையாற்றினார். 2019-2021 ஆண்டுகளுக்கான சிதம்பரம் பகுதிபுதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழாவில் VRS -OPTEES-2019 தோழர்கள். 43 பேருக்கு கைத்தறி துண்டுகள் அணிவித்து அன்பாக வரவேற்க பட்டனர். VRS ல் சிதம்பரம் பகுதியில் ஓய்வுபெற்றவர்கள் எண்ணிக்கை 43 . அதில் 41 தோழர்கள் நம் சங்கத்தில் இணைகின்றனர். அது போலவே சிதம்பரம் பிஎஸ்என்எல் DEMrs.Geetha மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாநில செயலாளர்.R.வெங்கடாச்சலம் , மாநிலத்தின் துணைத்தலைவர் K.சந்திரமோகன் சிறப்புரை யற்றினார்கள் மாநில மற்றும் மத்திய சங்கம் தற்போதைய நிகழ்வுகளை பற்றி விரிவுரை ஆற்றினார்கள் இறுதியில் நன்றி தெரிவித்து கூட்டம் இனிதே நிறைவுற்றது
சிதம்பரம் பகுதி புதிய நிர்வாகிகள்
தலைவர்: N.தக்ஷிணாமூர்த்தி
உதவி தலைவர்: S.சுபாஷ்
A.ராஜேஸ்வரி
A.ஜெயகுமார்
A.நடராஜன்
செயலர்: G.பொருளாளர் குமார்
உதவி செயலர்: K.லக்ஷ்மினாராயனன்.
S.பாபுசெட்டியார்.
ராஜா தேசிங்கு
பொருளாளர்: H.இஸ்மாயில் மரக்காயர்
உதவி பொருளாளர்: M.இளங்கோவன்
அமைப்பு செயலர் A.அண்ணாதுரை
T.மாலதி
பொதுகுழு உறுப்பினர்கள்: B.கலிராஜ்
S.ரவிச்சந்திரன்
M.நாகராஜ்
N.விஜயலக்ஷ்மி
தணிக்கையாளர்: K.ராமசந்திரன்
ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் அனைத்து உறுப்பினர்களும்
வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
நன்றி உரை தோழர்.G.S.குமார் புதிய சிதம்பரம் பகுதி செயலாளர்
செவ்வாய், 11 பிப்ரவரி, 2020
கடலூர் நகர அரங்கில் நடந்த BSNL 2020 விருப்ப ஒய்வு பெற்ற நமது ஒய்வூதியர்களை பாராட்டி வழியனுப்பிய நமது AIBSNLPWA ஒய்வூதியர்கள்.
31-1-2020
ஓர் சகாப்தத்தை BSNL இல் நிறைவேற்றி ,பனியில் ,மழையில் ,கடும் வெய்யிலிலும் ,இடர்பாடுகளிலும் கடும் பணியாற்றி நமது துறையும்,நாமும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி உயர்ந்து வளர்ந்த நமது ஓய்வூ தியர்கள் நீங்கா நினைவுகளுடன் விடைப்பெற்ற காட்சிகள்
விருப்ப ஓய்வுபெற்று செல்லும் அனைத்து ஓய்வூ தியர்களையும் பாராட்டி வழியனுப்பிய அதிகாரிகளுக்கும் ,நண்பர்களுக்கும் நாம் அனைவரும் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)