Translate

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

BT Arasu lost his mother on 5 th August and shares with pride,
                     the memory of his mother with due respect, the great contribution 
                     done to their family.

எங்கள் தாய் திருமதி முத்துலட்சுமி அவர்கள் மறைந்தார் ...
பள்ளிகல்வி இல்லாத இவர் பிள்ளைகள் இருவரை CA ஆக்கினார் 
பேரன் மூவர் CA (இவற்றில் ஒருவர் CPA) , ஒருவர் MBA .
அரசு வேலைக்கு என்னை உயர்த்தினார்
கல்வி ஒன்றே வாழ்வை உயர்த்தும் என்பார் 
வறுமையை வாழ்வை விட்டே துரத்தினார் 
இவரின் மன உறுதி எங்களை உயர்த்திற்று .
பட்ட கஷ்டங்களை வெற்றி படிக்கல் ஆக்கியவர் 
எதற்கும் என்றுமே அஞ்சாதவர் ; மன உறுதியின் மறு உருவம் 
அன்ன தானம் இவர் இயல்பில் இருந்தது 
யார் பசியையும் காண பொறுக்காதவர் 
நினைவாற்றல் மிக உண்டு 
உறவுகளின் அன்பை மிகவும் பெற்றவர் 
நன்றி மறவா தன்மையை இவரிடம் கற்றோம் 
வார்த்தையில் கனிவும் உண்டு கடுமையும் உண்டு 
இல்லற இனிமையை எங்கட்க்கு உணர்த்தியவர் 
செல்வம் இவரை செருக்குற விட்டது இல்லை 
அன்பும் பணிவும் இவர் காட்டிய பாதை 
உழைப்பின் பெருமையை இவரிடம் கற்றோம் 
திட்டமிட்ட வாழ்வை திறனே கொண்டவர்
இவர் எங்கள் தாய் -- இன்று இவர் வானுறையும் தெய்வத்துள் 
மறு பிறவி உண்டு என்றால் இவரே தாய் ஆனால் மகிழ்வோம் 


விதைத்த விதைகள் உறங்காது.

ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி பல்லுயிர்க்கும் நன்மை தரும்.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை இறைஞ்சுகிறோம்

சனி, 1 ஆகஸ்ட், 2015


    31-07-2015  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்

31-07-2015  அன்று   திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 

. நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.




 பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள்

1.M.சுப்பையன்    SrTOA பண்ருட்டி
2.K.முத்துசாமி TM உளுந்தூர்பேட்டை
3.K.இலட்சுமிநாராயணன் TM சிதம்பரம்
4.S.பாலன் TM ஸ்ரீமுஷ்ணம்
5.S.பழனிசாமி RM புவனகிரி

 தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
       திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார்.