Translate

சனி, 31 டிசம்பர், 2016

2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்








             ஆசைகள் கனவு காண்கின்றன
               இலட்சியங்கள் சாதிக்கின்ற

நாடு விட்டு, மனைவி மக்களை துறந்து
காடு சென்று கடுந்தவம் செய்து தான் 
இறைவனை அடையலாம் என்பது இல்லை
மக்கட் தொண்டு செய்தாலே அந்நிலைக் கிட்டும் -குணங்குடி மஸ்தான்
பைபிளின் சமாரிடன்,அன்பே சிவம் மூலக்கருத்தும் இதுவே.

மறைந்த சித்து சிங் முதல் சம கால தலைவர்கள் டில்லியிலிருந்து உள்ளூர் வரை முடியாததை எல்லாம் ஒன்று பட்ட நமது ஓய்வூதியர்களின் துணை கொண்டு வெற்றி கரமாக செயலாக்கி இருக்கின்றார்கள்.பிரதி உபகாரம் எதிர் பார்க்காத இந்த செயலுக்கு நமது குடும்ப ஓய்வூதியர்களின் மகிழ்ச்சியான புன்முறுவலே சாட்சி.

நமது தலைவர்களின் நாங்கள் உங்களால், நாங்கள் உங்களுக்காக என்ற உண்மையான கோட்பாடுகளை முன்னிறுத்தி செயலாக்கி வெற்றிகரமாக சாதித்து இருக்கின்றனர்.

 எந்த ஞானம் குரலெழுப்பி  கூவவில்லையோ
அதனிடமிருந்து என்னை தூர விலக்கி வை.
எந்த மேன்மை,கம்பீரம் குழந்தைகளுக்கு முன்
தலை வணங்க வில்லையோ அவற்றிடமிருந்து 
எண்ணை விலக்கி வை          -கலீல் கிப்ரான்   
வரிகளை நினைவிற் கொண்டு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ,
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே 
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தபின் வேறன்ன வேண்டும்- 
பாரதியின் வழி நடப்போம்.
                       அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக