Translate
ஞாயிறு, 28 அக்டோபர், 2018
கடலூர் மாவட்டச்சங்க செயற்குழுக்கூட்டமும்,சிதம்பரம் பகுதி மாதாந்திரக்கூட்டமும் 27-10-2018
சிதம்பரம் பகுதி மாதாந்திரக்கூட்டம் தோழர் தக்ஷிணாமூர்த்தி தலைமையில் துவங்கியது. மாவட்டச்சங்கத்தின் தலைவர் P.ஜெயராமன் முன்னுரையாக நமது நோக்கங்களையும்,சாதனைகளையும்,சிதம்பரம் பகுதி தோழர்களின் மிகமுக்கியமான பங்கினைப்பற்றி விளக்கி தனது மகிழ்ச்சியினை தெரிவித்து கூட்ட நிகழ்வுகளை ஆரம்பித்து துவக்கினார்.
மாவட்டசெயலர் தோழர் அசோகன் நமது உறுப்பினர்களின் மருத்துவ நிலுவைக்கான கணினி தகவல்களை நமது தோழர்கள் அசோகன்,காஜா கமாளுதின்,NT, சந்திரமோகன் ஆகியோர்களின் இடைவிடாத முயற்சியால் சரி செய்த நிகழ்வுகளை நினைவு படுத்தினார்.
அதாலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்னைகளில் நமது ஆக்க பூர்வமான நமது செயல் பாடுகளை கூறினார்.
நாம் நிகழ்காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியிருந்தாலும் நாம் நம் ஒன்றிணைந்த கூட்டு முயற்ச்சியால் எதையும் சாதிக்கும் ஒரு நிலைமையில் இருக்கிறோம் என்று கூறினார்.
தோழர் சந்திரமோகன் புதிய மாநில துணைத்தலைவர் இந்த கூட்டத்தில் பொன்னாடை போற்றி கவுரபடுத்தப்பட்டார்.நவம்பர்மாதம் 1 லிருந்து 10 தேதிக்குள் வாழ்விருத்தல் சான்றிதழ் (LIFE CERTIFICATE) வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் இல் கொடுத்து ஓய்வூதியம் மறுப்பதை தடுக்கவும் என்றும் வருமானவரி இருந்தால் செலுத்திவிடவும் என்றும் கூறினார்.
கடலூர் பகுதி செயலர் ரகோத்தமன் வாழ்த்துரை வழங்கினார் |
சிதம்பரம் கிளையின் புதிய உறுப்பினர் திரு ராமச்சந்திரன் DGM FINANCE ஒருசில கருத்துக்களை மருத்துவ செலவை ஈடுசெய்வதற்கான யோசனைகளை கூறினார் |
தோழர் NT சிதம்பரம் கிளையின் வளர்ச்சியையும்,மாதந்தோறும் தவறாமல் நடக்கும் கூட்டங்களையும்,உற்சாகமாக ஆக்க பூர்வமாக செயல்படும் தோழர்களை வாழ்த்திப் பேசினார். |
மாவட்ட நிர்வாகி இஸ்மாயில் மரைக்கார் நம்பிக்கையுடன் எல்லா நிகழ்வுகளிலும் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும் சிதம்பரம் உறுப்பினர்களைவாழ்த்திப்பேசினார். |
நமது தலைவர் PJ அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து ஓய்வூதியர்களும் குறிப்பாக தோழியர்களும் நமது அமைப்பில் உள்ள நம்பிக்கையையும் ,தோழமையுடன் செயல்படும் நமது தலைவர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். |
தோழியர் கல்யாணி ரெங்கநாதன் அவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். |
புதிய உறுப்பினர் தோழியர் உஷா அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த அமைப்பில் மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளார். |
சென்ற வருடம் இதே மாதத்தில் விபத்து ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையில் ஒரு வருடமாக வர முடியாததால் ,இனிமேல் எல்லா கூட்டங்களிலும் கலந்துக்கொள்வேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் தோழர் ராஜசேகரன் STS |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)