Translate

புதன், 12 டிசம்பர், 2018


தஞ்சையில் முப்பெரும் விழா 10-12-2018

    



  10-12-2018 திங்கட்கிழமை அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள்நல சங்கத்தின் 
முப்பெரும் விழா வான ஏழாவது மாவட்ட மாநாடுஓய்வூதியர்கள் தின விழா 15வது ஆண்டு தொடக்க விழா மற்றும்பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் தஞ்சை கல்லு குளம்நாஞ்சிக்கோட்டை சாலையில்  அமைந்துள்ள திரு இருதயமறைமாவட்ட பேராலய மக்கள் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.தோழர் சந்திர பிரகாஷ் நினைவரங்கத்தில் காலை 10 மணிக்குதொடங்கிய மாநாடு மாலை ஆறு மணிக்கு நிறைவுற்றதுகிட்டத்தட்ட400  தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக தோழர் ஜி நடராஜன் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் டி ராமாராவ் தமிழ் மாநிலத் தலைவர் தோழர்வெங்கடாசலம் தமிழ் மாநில செயலர் ஆகியோர் அழைக்கப்பட்டுபங்குபெற்று சிறப்பித்தனர்.

தோழர் சாமிநாதன் தலைமையில் ஒரு குடும்பமாக சமூக செயல்களில் சாதனைகள் புரியும் ஒருமித்த ஒத்திசைவுக்குழு அனைத்து நல் உள்ளங்களுக்கும்  கடலூர் தோழர்களின் நெஞ்சு நிறை வாழ்த்துக்கள்.
























தோழர் சாமிநாதன் மாவட்ட செயலர் தன்னுடைய வரவேற்புரையில்மாவட்ட சங்க செயல்பாடுகள் பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறிஅனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று தனது வரவேற்பு உரையைநிறைவு செய்தார்பிறகு 71 வயதை அடைந்துள்ள தோழர்கள்வெங்கடாசலம் மாநில செயலர் , சந்தானகோபாலன் மாவட்டதுணைத்தலைவர் கல்யாணசுந்தரம் உறுப்பினர் ஆகியோருடைய பீமரதசாந்தி விழா தம்பதியருக்கு ஆளுயர ரோஜா மலர் மாலைஅணிவிக்கப்பட்டு கேக் வெட்டி உறுப்பினர்கள் அனைவரதுவாழ்த்துக்களுடனும்  சிறப்பாக கொண்டாடப்பட்டது .தவிரவும் இந்தமாதம் பிறந்த தினம் வாய்க்கப்பெற்ற தோழர் தோழியர்கள் அனைவரும்கேக் வெட்டி வாழ்த்துக்களுடன் பிறந்தநாளை சிறப்பாககொண்டாடினார்கள்.







அடுத்து தோழர்கள் ஜி நடராஜன் அகில இந்திய துணைத் தலைவர்தோழர் ராமாராவ் மாநிலத்தலைவர் தோழர் வெங்கடாசலம் மாநிலசெயலர் ஆகியோரை சிறப்பித்து பொன்னாடை ஆள் உயர ரோஜாமாலை அளிக்கப்பட்டு தஞ்சை பெரியகோயிலின் உருவம் கொண்டநினைவுப் பரிசு மற்றும் தஞ்சை தலையாட்டி பொம்மை இனிப்புவகைகள்  தஞ்சை முந்திரி ஆகியவை உறுப்பினர்களின் ஆரவாரத்துடன்அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர.

தோழர் கே எஸ் கே தோழர்  கே டி அவர்களது சங்கப் பணியின் பொன்விழா மற்றும் பிஎஸ்என்எல் உதவும் உள்ளங்கள் தஞ்சை சார்பில்தோழர் சாமிநாதன் சமுதாய பணிக்கான பெரும் கொடையாளர்தோழியர் சந்திரகுமாரி அவர்கள் விழாவில் பொன்னாடைஅணிவிக்கப்பட்டு ஆளுயர ரோஜா மலர் மாலை அணிவிக்கப்பட்டுநினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு அனைவரதுஉறுப்பினர்களின் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டு தங்களதுஏற்புரையில் உரையாற்றி மகிழ்ந்தனர.

நமது மாநாட்டினை மதுரை மாவட்ட செயலர் தோழர் வீராசாமி மதுரைமாவட்ட செயலர் பட்டுக்கோட்டை தோழர்C.V. தங்கையன்தோழர் princeதோழியர் பத்மினி மற்றும் தோழர்கள் கேகிள்ளிவளவன் NFTE, A.இருதயராஜ்,BSNLEU, பிரபாகரன் AIBSNLEA,A.M.F. ஜெயசீலன்,FNTOமுருகையன்,SEWA,அரியலூர் ஆறுமுகம் ,எஸ் ராஜா ராமன் ஆர்விவேகானந்தன் ஆர் மணிவண்ணன் ஆகிய பணியில் உள்ள தஞ்சைபிஎஸ்என்எல் துணைப் பொது மேலாளர்கள் ஆகியோர் தங்களதுசிறப்பான வாழ்த்துக்களை கூறியதோடு மட்டுமல்லாமல் தங்களதுகருத்துக்களையும் நமது சங்கத்தின் பெருமைகளையும் போற்றிப்புகழ்ந்து சிறப்பானதொரு வாழ்த்துக்கள் கூறி உரையை நிறைவுசெய்தனர் முதலாவதாக தஞ்சை மாவட்ட சங்கத்தின் வலைதளத்தைபட்டுக்கோட்டை தோழர் சிவசிதம்பரம் அவர்கள் சிறப்பான முறையிலேவலைதள பொறுப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டு நமது தோழர் ஜிநடராஜன் மத்திய சங்க துணைத் தலைவர் வலைத்தளத்தினை பெருத்தஆரவாரத்துடன் மன்றத்தில் அனைவரது மகிழ்ச்சியுடன்கரவொலிக்கிடையே தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தனது சிறப்புரை மற்றும் ஏற்புரையில் தஞ்சை மாவட்டத்தின்சமுதாய தொண்டினையும் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்தஞ்சை மாவட்டம் ஆற்றிய சேவையினையும் சிறப்பித்து வாழ்த்திஉரையாற்றினார் இன்றைய நிலையில் எம் ஆர் எஸ் பற்றியும் அதற்குவருங்காலத்தில் நாம் வேறு விதமாக எவ்வாறு பயன்படுவது என்பதுபற்றி மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஓய்வு ஊதியம் உயர்வுகுறித்தும் ஒவ்வொரு உறுப்பினரும் நமது சங்கத்திற்காக இரண்டுஉறுப்பினர்களை சேர்க்க முயற்சி எடுக்கக்கோரியும் சிறப்பானதொருஉரை நிகழ்த்தி நிறைவு செய்தார் தோழர் ராமாராவ் மாநில தலைவர்தஞ்சை மாவட்ட சங்கத்தின் சமுதாய பணியினையும் நாம் அறிவிப்பு செய்து நடத்தப்படுகின்ற பொன்விழா மணிவிழா பீமரத சாந்தி விழாசதாபிஷேக விழா மற்றும் பிறந்த விழா காட்சிகளை கண்டு மகிழ்ந்துபிற மாவட்ட சங்கங்களிலும் மாநில சங்கத்திலும் இதுபோன்றவிழாக்கள் நடத்தப்பட வேண்டுமென்று ஒவ்வொரு மாவட்டசங்கங்களில் உரை நிகழ்த்தும் போது அறிவுறுத்துவதாகவும் கூறிமகிழ்ந்தார்.

தோழர் வெங்கடாசலம் மாநில செயலர் பொருள் ஆய்வுக் குழுவினைதொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் தனது சிறப்பு மற்றும்ஏற்புரையில் இது ஒரு மிக திருப்திகரமான மாநாடு பணியில்இருக்கின்ற சங்கங்கள் கூட நடத்த முடியாத அளவிற்கு சிறப்பாக இந்தமாநில மாநாடு நடைபெறுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது  நம்முடைய78.2 நிலுவை பெற்று 60 40 முறையையும் நீக்கியது பற்றியும் தற்போதுநமது pension உயர்வு மாற்றத்திற்கும் மூன்றாவது பி ஆர் சி கும் எந்தசம்பந்தமும் இல்லை தற்பொழுது உள்ள நிலையில் நாம் எவ்வாறு மற்றஓய்வூதிய தங்களுடன் சேர்ந்து இந்த ஓய்வு ஊதியத்தை உயர்த்தி பெறப்போகிறோம் என்பது பற்றியும் நமது ஓய்வூதிய மாதாந்திர பட்டுவாடாஅந்த அந்த சிசி   அலுவலகங்களிலிருந்து இனி பெற போவதின் சாதகபாதங்களை பற்றியும் தற்போது நடைபெற இருக்கின்ற பட்டுவாடாசிறந்தது என்றும் தனது 71 வது வயதிலும் சங்கப்பணி ஆற்றுவதுபற்றியும் நமது தமிழ் மாநிலம் இந்திய அளவிலே அதிகமானஉறுப்பினர்களை கொண்ட மாநிலம் தமிழ் மாநிலம் என்றும் சிறப்பித்துகூறி தனது உரையை  நிறைவு செய்தார்.
 வாழ்க வளர்க  பிஎஸ்என்எல்  ஓய்வூதியர்  நல சங்கம் . நன்றி.
இப்படிக்குதோழமை உணர்வு மற்றும்  வாழ்த்துக்களுடன்  
தஞ்சைமாவட்ட  பிஎஸ்என்எல்  ஓய்வூதியர்கள் நல சங்கம் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக