Translate

சனி, 11 பிப்ரவரி, 2017

 தைப்பூசப் பெருவிழா
*******
வடலூர் வள்ளலார் தைப்பூசப் பெருவிழாவை ஒட்டி கடலூர் வணிக வைசியர் சங்கத்தின் சார்பில் சன்மார்க்கச் சொற்பொழிவு,ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது.
சங்கத்தின் செயலாளர் நமது BSNL ஓய்வூதியர் தோழர் திருஞானம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார்.NFTE இன் ஒரு முக்கிய தலைவரும் நமது உறுப்பினரான G.ஜெயராமன் அவர்கள்  வா ழும் வள்ளலார் விரும்பிய சமுதாயம் குறித்து  சிறப்புரை செய்தார்..
இன்றைய தமிழ்ச்சூழலில் சாதி,மதம்,சமயங்கள்,சடங்குகள் தவிர்க்க,ஆன்மநேய ஒருமைப்பாடு காக்க,ஏழ்மை பணக்காரப் பாகுபாடு களைய,கருணையிலா ஆட்சி கடுகி ஒழிய,எம்மதமும் சம்மதம் என்ற சன்மார்க்கம் தழைக்க,ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எல்லாரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வள்ளலார் காட்டிய வழிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
நல்லக் கூட்டம்.
காலத்துக்குறிய தலைப்பும்,கருத்தும் பொருந்தி இருந்ததால்  அவரும் நாமும் மகிழ்ச்சியடைந்தோம்.
தோழர் G.ஜெயராமன் அவர்களுக்கு நன்றியையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு,மேன்மேலும் நல்ல கருத்துக்களை விதைககுமாறு வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக