விழுப்புரம்
பகுதி மாதாந்திரக கூட்டம் 5-2-2017
5-2-2017 அன்று தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் தோழர் வீரராகவன் தலைமை வகிக்க ,பகுதி செயலர் தோழர் வீரமணி
வரவேற்புரை நல்கினார்.
மௌன
அஞ்சலி
விழுப்புரம் தோழர் கதிர்வேல் தாயார், தோழர் ஜெயராம்குமார் AGM
மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வுகள்
ஜனவரி மாத பணிஒய்வுக்குப்பின் நமது சங்கத்தில் இணைத்துக் கொண்ட தோழர்
தேவநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
தோழர்கள் J.K.கண்ணன்,ஜெயபால்,செல்வம் அமைப்புநிலை விவாதத்தின்போது
78.2 IDA நிலுவை விரைவாக கிடைத்திட நம் அமைப்பு சார்பாக இயக்கம் நடத்திட வேண்டும்
என கூறினர்.
தோழர் D.ஷண்முக சுந்தரம் அவர்கள் நாம் வருமான வரி பிடித்தம் விலக்கு
பெற நமது சேமிப்பு விவரங்களை பென்ஷன் வழங்கும் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்
என்று கூறினார்..
தோழர் மகாலிங்கம் ஜூலையில் தனக்கு நேர்ந்த உயிருக்கு ஆபத்தான ரோடு விபத்தில்
நமது தோழர்கள் காலத்தே செய்த பேருதவியால் நலம் பெற்று திரும்பியதை நினைவு கூறி வாழ்க்கையில்
மறக்க முடியாது என்றுக்கூறி அனைவருக்கும் நன்றி கூறினார்.
தோழர் CTS மணி தன இருதய அறுவை சிகிச்சை மருத்துவ பில் கிடைப்பதற்கு
உதவிச்செய்த மாவட்ட சங்கத்திற்கு நன்றி கூறினார்.
78.2 IDA நிலுவை கிடைக்க பெற்ற தோழர்கள் B.துரைபாபு, J.K.கண்ணன், ஜெயபால்ஜெயலக்ஷ்மி,ராஜகோபால்,விஜயலட்சுமி
சுந்தரேசன் தலா ரூபாய் 1000 சங்கத்திற்கு நன்கொடை அளித்தனர்.
தோழியர் செல்வரசு மேரி அனைவருக்கும் தன வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தோழர் N.T மாவட்டச்செயலர் இதுகாரும் நிலுவைகள் பெற்ற 17
பெயர்களையும்,மற்றும் ஆணைகள் பெறப்பட்டு இன்னும் நிலுவை பெறப்படாதவர்களுக்காக
தபால்/வங்கி அலுவகங்களுக்கு சென்று விரைவாக கிடைப்பதற்காக நமது குழுவுடன் அணுகிய
விவரங்களையும் தெரிவித்தார்.மருத்துவ பில் பட்டுவாடாவிற்காக நாம் செய்த
முயற்ச்சிகளை எடுத்துக்கூறினார்.நமது 600 உறுப்பினர்களில் 555 ஆயள் சந்தா
உறுப்பினர்களாக இருப்பது நமது சங்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்று மகிழ்ச்சியாக
கூறி,விரைவில் எல்லோரையும் ஆயள் சந்தா உறுப்பினர்களாக
மாற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையும் தெரிவித்தார்.செயற்குழுகூட்ட முடிவுகளையும்,விவரங்களையும்
தெரிவித்தார்.கள்ளகுறிச்சி சிறப்புக் கூட்டம் பற்றியும் எடுத்துரைத்தார்.
தோழர் PJ அதாலத் கூட்டங்களில் நாம் ஓய்வூதியர்களின் பிரச்னைகளில் நாம்
எவ்வாறு பல்வேறு காலங்களில் செயல் பட்டு ஓய்வூதியர்களின் நலன் காத்தோம் என்பதை
விளக்கினார்.
மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் J.வெற்றி புதிய கணினிவாங்குவதற்காக
ரூ500 முதல் நன்கொடையாக அளித்தார்.
50 உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
தோழர் B.துரைபாபு நன்றி நவிர்ந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக