எனக்கு வந்த பாராட்டுக்களையும்,புகழுரைகளையும் AIBSNLPWA களப்பணியாளர்கள் சார்பாக பெற்று அவர்களுக்கே உரித்தாக்குகின்றேன் ....தோழர் PS .ராமன்குட்டி
5-7-2016 அன்று பிரதமமந்திரி மாண்புமிகு திரு நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தி ல் 78.2 % IDA 10-6-2013 க்கு முன்பாக ஓய்வுபெற்ற அனைத்து BSNL ஓய்வூதியர்கள்கள் /அல்லது ,அவர்களின் வாரிசுகளுக்கும் சேவையில் உள்ள BSNL ஊழியர்களுக்கு இணையான IDA வை அளித்திட ஆணை வெளியிட்டுள்ளது.
BSNL ஓய்வூதியர்களும் , குடும்ப ஓய்வூதியர்களும் ஆக மொத்தம் 1,18,500 பயனாளிகள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.
BSNL ஓய்வூதியர்களுக்கு ரூ 129.63 கோடியும் ,குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ 24.93 கோடியும் ஒவ்வொரு வருடமும் அரசாங்கம் செலவழிக்கும்.
நிலுவைத்தொகை ரூ 239.92 +44.62 கோடியும் கொடுக்க இருக்கிறது.
விதி FR 116 ன் கீழ் பணியில் உள்ள BSNL ஊழியர்களுக்கு ஓய்வூதியத்துக்கான பங்களிப்பினை அளிக்கவேண்டும்.
10 ஆண்டுகளாக நம்மை மிரட்டி கொண்டு இருந்த விதி 37 A இன் 60%:40% அறவே நீக்கப்பட்டுள்ள து.
நமக்கு ஓய்வூதியம் முழுக்க அரசாங்கத்தில் இருந்து அளிக்கப்படுவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதால் BSNL இன் நிதி ஆதாரம் நமக்கு தடையாக இருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக