Translate

வெள்ளி, 1 ஜூலை, 2016

30-6-2016 அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்


துணை பொதுமேலாளர் CM திருமதி ஜெயந்தி அபர்ணா அவர்கள் 

 தலைமையில்  திருமதி D.கலைவாணி   AGM  நிர்வாகம்  தொகுத்து

வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது.


  பணிகுறிப்புகள்














BSNL நிர்வாகம்,தொழிற்சங்கங்கள்  சார்பாக  ஓய்வுபெற்றவர்களின்  பணிகுறிப்புகள் படிக்கப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நமது மாவட்டச் சங்கத்தின் சார்பாக பொன்னாடை ஓய்வுபெற்ற அனைவருக்கும் போர்த்தி கௌரவிக்கப்பட்டு,கடலூர் கதிரும், ஓய்வுபெற்றவர்களின்  தொலைபேசி டைரக்டரியும் அளித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.















நமது சார்பாக தோழர் P.ஜெயராமன் ஓய்வுபெற்ற அனைவரையும் 

வாழ்த்திப் பேசினார்.

SDE R.சங்கரின் அம்மா தனது 85 வயதில் மகனின் பணிநிறைவு விழாவிற்கு வந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.நமது சார்பாக பொன்னாடை அணிவித்து அவரை கௌரவித்தோம்.


ஓய்வுபெற்ற அனைவரும் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி பிரியாவிடைப் பெற்றனர்.














ஓய்வுப் பெற்ற இவர்கள் நீள் ஆயுளும் நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக