கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழுகூட்டமும்,
78.2 % IDA வெற்றிவிழா கூட்டமும்
9-7-2016 அன்று கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழுகூட்டமும்,
78.2 % IDA வெற்றிவிழா கூட்டமும் தோழர் K.இளங்கோவன் அவர்களின் தலைமையில் மா வட்டத்தின் அனைத்து பகுதிகளின் 100 உறுப்பினர்களின் பங்கேற் புடன் வெகு சிறப்பாக நடந்தது.
13-6-2016 அன்று AIBSNLPWA கடலூர் 5 வது மாவட்ட மாநாட்டில்
சிறப்பாக பணி செய்தவர்களுக்கும்,மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டது.
மதிய உணவும், 78.2 % IDA வெற்றிவிழாவிற்கான 3 இனிப்புகளும் எல்லோருக்கும் வழங்கப்பட்டது.
தோழர் P.ஜெயராமன் 78.2 % IDA -இன் தோற்றமும்,தற்போதைய வெற்றி,நிலுவை தொகை எவ்வளவு கிடைக்கும் என்பதைப்பற்றி பேசினார்.
செயலர் தோழர் N.திருஞானம் நிதி நிலைமை பற்றியும்,தற்போது 500 ஆயுட்கால உறுப்பினர்களை தாண்டி பீடு நடை போட்டுக்கொண்டு வளர்ந்து வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக