திண்டிவனத்தில் நமது பொதுக்குழுக் கூட்டம்
கைப்பேசி 9442228182,9442292582,9486868999
மாவட்ட தலைநகரிலேயே நடக்கும் கூட்டங்களை தோழர்களை அவர்கள் ஊரிலேயே சந்திக்கும் முகத்தான் நாம் திட்டமிட்ட படியே இந்த கூட்டம் 21-4-2012 அன்று திண்டிவனம் ராஜ் மஹால் திருமண மண்டபத்தில் நண்பகல் உணவுக்குப் பின் 104 தோழர்களுடன் கூட்டம் சிறப்பாக நடந்தது.மாவட்ட உதவி தலைவர் தோழர் S.துரைசாமி அவர்கள் தலைமையில் தோழர்கள் D.தளபதி தொல்காப்பியன் ,S.நாராயணசாமி,M. வடிவழகன் இவர்களைக் கொண்ட வரவேற்புக் குழு சிறப்பாக விழா ஏற்பாடுகளை செய்திருந்தது எல்லோருக்கும் மனநிறைவாக இருந்தது.மாவட்ட தலைவர் தோழர் K.ரவீந்திரன் தலைமை உரையாற்ற, தோழர் S.துரைசாமி வரவேற்பு உரை நிகழ்த்தினார்.மாவட்ட செயலர் தோழர் K.வெங்கடரமணன் சங்க செயல்பாடுகளை விவரித்துப் பேசினார்.
அகில இந்திய தலைவர் தோழர் K.முத்தியாலு, மாநிலச் செயலர் தோழர் V.ராமராவ் , மாநில பொருளர் தோழர் S.கவுஸ் பாஷா ஆகியோர் சங்க செயல்பாடுகளை விவரித்து நாம் ஒற்றுமையை கட்டிக் காக்க வேண்டும் என்றுக் கூறினர்.
நமது நன்கொடை பகுதிப்பணம் மத்திய, மாநில சங்கங்களுக்கு நமது மாவட்டச் சங்கதத்தின் சார்பாக அளிக்கப்பட்டது.
31-3-2012 இல் ஒய்வு பெற்ற நமது K.இளங்கோவன் அவர்கள் நம்மகத்தே ஆயுள் உறுப்பினராகவும், நமது பத்திரிக்கையின் ஆயுள் சந்தா உறுப்பினராகவும், சேர்ந்து இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.அவருக்கு மாவட்ட உதவி தலைவர் தோழர் S.துரைசாமி அவர்கள் பொன்னாடைப் போற்றிக் கவுரவித்தார்.
தோழர்கள் P.இளங்கோவன்,V.பார்த்தசாரதி அவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
மூத்த தோழர்கள் K.நீலகண்டன் ,சுப்பு அவர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
தோழர் N.T அவர்கள் மருத்துவ அலவன்சை பழைய முறையிலேயே நிர்வாகம் வழங்கிட வேண்டும் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக