மலர் 5
புதுச்சேரியில் நமது அகில இந்திய செயலர் உரை
30-11-2012
அகில இந்திய பொதுச் செயலர் தோழர் நடராசன் பொறுப்பு ஏற்ற பிறகு முதன்முதலாக சென்னை நீங்கலாக தமிழகத்தில் புதுச்சேரியில் சிறப்பு கூட்டத்தில் கலந்துக்கொண்டுசிறப்பித்தது நமது தோழர்களுக்கு மனநிறைவாக இருந்தது.
இந்த கூட்டத்தில் அன்று ஒய்வு பெற்ற தோழர் உட்பட நமது அமைப்பில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்த 7 உறுப்பினர்களுக்கும் நமது பொது செயலர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
கைப்பேசி 9442228182,9442292582,9486868999
புதுச்சேரியில் 30-11-2012 அன்று பென்ஷன் அதாலத் நடைபெறுவதை ஒட்டி புதுவை
மாவட்டச் சங்கம் புதுச்சேரி தமிழ் சங்கத்தில் ஒரு சிறப்பு
கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அந்த சிறப்புக் கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் ஜானகிராமன் தலைமையில்,மாநில சங்க
நிர்வாகி தோழர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர் சதாசிவம்
அனைவரையும் வரவேற்றார். புதுச்சேரியின் முன்னணி தோழர்கள் அனைவரும்
கலந்துக் கொண்டனர்.கடலூர் கிளையின் சார்பாக நமது கிளையின் தலைவர்,செயலர்,உதவிச்செயலர்
முதலாக 14 தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாநில பொருளாளர் தோழர் கவுஸ் பாஷா,மாநில செயலர் தோழர் ராமராவ்,,மாநில தலைவர்
தோழர் முத்தியாலு,அகில இந்திய பொதுச் செயலர் தோழர் நடராசன், அகில இந்திய துணைத் தலைவர்
தோழர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டு
சிறப்புரை ஆற்றினர்.
கடலூர் கிளையின் சார்பாக நாம் சால்வை அணிவித்து
கவுரவித்தோம்.
பென்ஷன் அனாமலி, 78.2 பஞ்ச படி இணைப்பு, வவுச்சர் இல்லாமல் மெடிகல் அலவன்ஸ்,
ஆகிய தற்போதைய நிலைமை பற்றியும், அகில இந்திய மாநாட்டு தீர்மானங்களை பற்றியும், மற்றும்
நடுத்தர மக்களை பாதிக்கும் புதிய அரசு கொள்கைகளை பற்றியும் தலைவர்கள் விளக்கினர்.
இந்த கூட்டத்தில் அன்று ஒய்வு பெற்ற தோழர் உட்பட நமது அமைப்பில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்த 7 உறுப்பினர்களுக்கும் நமது பொது செயலர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக