Translate

சனி, 7 ஜூலை, 2018

  சிதம்பரம் மாதாந்திர பகுதிக்கூட்டம் 7-7-2018
உறுப்பினர்களின் நலம் வருமுன் காப்பதில் முன்னணி வகிக்கும் பகுதி


இன்று 7.7.18 சிதம்பரம் பகுதி AIBSNLPWA _வின் மாதாந்திர கூட்டம் சிறப்பாக நடந்தது தலைமை தோழர் .தக்ஷிணாமூர்த்தி தோழர்கள் அசோகன் மாவட்ட செயலாளர் பா.ஜெயராமன் மாவட்ட தலைவர் தோழர் . என்.திருஞானம் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உரையாற்றினர். 
இன்றைய கூட்டத்தில் திரு ..ராமச்சந்திரன் DGM Fin. (Rtd ) சென்னை புதிய ஆயுள் சந்தா உறுப்பினராக நம் சங்கத்தில் இணைத்துக்கொண்டார். நமது ஓய்வூதியர்களின் துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண தான் உறுதியாக இருப்பதாக கூறி நமது சிதம்பரம் கிளையின் முன்னணி உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டதில் அனைவரும் மகிழ்ந்தனர்.
அவருக்கு தோழர். லட்சுமிநாராயணன் செயலாளர் கைத்தறி பொன்னாடை அணிவித்து கௌரவப் படுத்தினர் . 
அதுபோலவே இன்றைய கூட்ட செலவுகள் லஞ்ச் உட்பட தன் பொறுப்பில் செய்து கொடுத்த தோழியர். விமலாதேவியும் கௌரவப் படுத்தப் பட்டார். 
இன்றைய கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவு, மற்றும் இரத்த அழுத்த  அலகுகள்  அதற்குரிய புதிய கருவிகளுடன் நமது உறுப்பினர்களுக்கு  செய்யப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை தோழர் .ஜெயகுமார் & அண்ணாதுரை நல்லமுறையில் செய்து கொடுத்தது பாராட்டத்தக்கது.
நமது மாவட்டத்தில் சிதம்பரம் நமது உறுப்பினர்களின் நலன் வருமுன் காப்பதில் முன்னணி வகித்து மற்றவர்களுக்கும் எடுத்து காட்டாக திகழ்வதை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
இரத்த அழுத்த கருவி  தோழர் .ஜெயகுமார்  தன் சொந்த செலவில் வழங்கியமைக்கு பாராட்டப்பட்டார். 
தோழியர் .ராஜேஸ்வரி இரத்த சர்க்கரை அளவு கருவி தன் சொந்த செலவில் வழங்கியமைக்கு பாராட்டப்பட்டார். 
நன்றி .லட்சுமிநாராயணன்














கடலூரில் 18-7-2018 அன்று AIBSNLPWA தர்ணா


சென்னையில் நடைபெற்ற மத்திய செயற்குழு முடிவின் படி ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று ஏழாவது சம்பள குழுவின் பரிந்துரை அடிப்படையில் நம் ஓய்வூதிய மாற்றத்திற்காக  மாபெரும் தர்ணா நாடு முழுவதும் மிக எழுச்சியாக நடைபெற உள்ளது.

கடலூரில் நடைபெற உள்ள மாபெரும் தர்ணாவில் நமது மாவட்டச்சங்க தலைவர்களும்,பகுதி பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு நமது நோக்க எழுச்சி உரை ஆற்ற உள்ளனர்.


எல்லா உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுதர்ணா பெருவெற்றி பெற  வேண்டுகிறோம்.



ஞாயிறு, 1 ஜூலை, 2018

          கடலூர்  AIBSNLPWA  மாவட்டத்தின்  விழுப்புரம் ஜூலை  மாதாந்திர கூட்டமும்,பண்ருட்டி ஓய்வூதிய பணிநிறைவு பாராட்டுக் கூட்டம்
 1-7-2018




பண்ருட்டி பணிஓய்வு பாராட்டுவிழா



நமது மாநிலச்செயலர் தோழர் முத்தியாலு அவர்களின் ஆயுள் கால சாதனையையும்,தஞ்சை சங்கத்தின் மாவட்டச் செயலர் 
தோழர் V.சாமிநாதன்   அவர்களின்ஆயுட்கால சமூக சேவையையும், பாராட்டிய திருநெல்வேலி மாவட்டச்சங்கம்.


                                                     
நமது மாநிலச்செயலர் தோழர் முத்தியாலு அவர்களின் ஆயுள் கால சாதனைகளை பாராட்டி 26--2018 அன்றுநடைபெற்ற  நெல்லை மாவட்ட  BSNL ஓய்வூதியர்கள் நலசங்கமாவட்ட மாநாட்டில் ஆயுட்காலச்சாதனையாளர் விருதுவழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்
  தஞ்சை AIBSNLPWA சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் V.சாமிநாதன்  அவர்களின் 40 ஆண்டுகால தொடர்சமூக சேவையினைப் பாராட்டி சமூக சேவை சாதனையாளர் விருதுவழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்பிறகு தோழர் சாமிநாதன் ஏற்புரைஆற்றினாரஅதில் தனது தொடர் 40 ஆண்டுகால சமூக சேவையின்நினைவலைகளை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்
          கடலூர் மாவட்ட BSNL  ஓய்வூதியர்கள் நல சங்கம் நமது மாநிலச்செயலர் தோழர் முத்தியாலு அவர்களுக்கும், மாவட்டச்
 செயலர் தோழர் V. சுவாமிநாதன்அவர்களுக்கும் மனப்பூர்வமான 
வாழ்த்துக்களையும் இன்னும் அவர்களது  பணி தொடரவும்,மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாகவும் திகழ்ந்து கொண்டிருப்பதை  வாழ்த்துகிறது.

சனி, 30 ஜூன், 2018


30.6.2018  அன்று பணி ஓய்வு பெற்றதோழர்கள்




























பணி ஓய்வு பெற்றதோழர்கள் நீள் ஆயுளும் 
 நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கவளமுடன்  பல்லாண்டுகள் என நாம் 
வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்

சனி, 23 ஜூன், 2018

அகிலஇந்திய bsnl ஓய்வூதியர் நலச்சங்கம் அறைகூவலுக்கிணங்க கடலூரில் நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டம்



















20-6-2018 அன்று மாலை 5 மணிக்கு  மத்தியச்சங்க  அறைகூவலுக்கு இணங்க கடலூர் BSNL பொது மேலாளர் அலுவலக கட்டிடத்திற்கு முன்பாக கடலூர்  BSNL  மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும்  அனைத்து  ஓய்வூதியர்களும் பேரெழுச்சியுடன் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
           ஆர்பாட்டத்தை நமது கடலூர் மாவட்டத்தின்  தலைவர் தோழர் P.ஜெயராமன் தொடங்கி வைத்து ஏன் இந்த ஆர்பாட்டம் என்ற செய்தியினை முன்குறிப்பாக எடுத்துரைத்தார்.
         நமது மாவட்டச்செயலர்  தோழர்  அசோகன் அவர்கள் ஆர்பாட்டத்தின் காரணிகளையும் ,நமது  நோக்கங்களையும்,நிகழ்கால நிகழ்வுகளையும்  விளக்கி பேசினார்.
         தோழர்கள் K.வெங்கடரமணன் கடலூர்,நாராயணசாமி திண்டிவனம்,சந்திரசேகர்  கடலூர்  கோரிக்கை முழக்கங்களை தொடர்ச்சியாக முழக்க நமது உறுப்பினர்களும் தொடர்ந்தனர்.
          மாநிலச் சங்கத்தின் சார்பாக தோழர்கள்  ரவீந்திரன்  மாநில து.த.,அன்பழகன்   மாநில து.செ.அவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
          அன்பழகன்   மாநில து .செயலர். நிகழ்வுகளை தொடர்ச்சியாக விளக்கி பேசினார்.
               கடலூர் BSNL மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும்  100 தோழர்கள்,தோழியர்களும் கலந்துக்கொண்டனர்.
நமது தலைவர்களின் சென்னை உரையினை கேட்க 
கீழே கடைசியாக உள்ள  நீல வாக்கியத்தில் கிளிக் செய்யவும்.












































நமது தலைவர்களின் சென்னை உரையினை கேட்க 
கீழேயுள்ள நீல வாக்கியத்தில் கிளிக் செய்யவும்.

மாநிலத்தலைவர் அவர்களின் உரை

மாநிலச்செயலர் உரை

அகில இந்தியச்செயலரின் உரை

தோழர் DG அவர்களின் உரை

தோழர் சுகுமாரன் அவர்களின் உரை