Translate

சனி, 7 ஜூலை, 2018

  சிதம்பரம் மாதாந்திர பகுதிக்கூட்டம் 7-7-2018
உறுப்பினர்களின் நலம் வருமுன் காப்பதில் முன்னணி வகிக்கும் பகுதி


இன்று 7.7.18 சிதம்பரம் பகுதி AIBSNLPWA _வின் மாதாந்திர கூட்டம் சிறப்பாக நடந்தது தலைமை தோழர் .தக்ஷிணாமூர்த்தி தோழர்கள் அசோகன் மாவட்ட செயலாளர் பா.ஜெயராமன் மாவட்ட தலைவர் தோழர் . என்.திருஞானம் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உரையாற்றினர். 
இன்றைய கூட்டத்தில் திரு ..ராமச்சந்திரன் DGM Fin. (Rtd ) சென்னை புதிய ஆயுள் சந்தா உறுப்பினராக நம் சங்கத்தில் இணைத்துக்கொண்டார். நமது ஓய்வூதியர்களின் துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண தான் உறுதியாக இருப்பதாக கூறி நமது சிதம்பரம் கிளையின் முன்னணி உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டதில் அனைவரும் மகிழ்ந்தனர்.
அவருக்கு தோழர். லட்சுமிநாராயணன் செயலாளர் கைத்தறி பொன்னாடை அணிவித்து கௌரவப் படுத்தினர் . 
அதுபோலவே இன்றைய கூட்ட செலவுகள் லஞ்ச் உட்பட தன் பொறுப்பில் செய்து கொடுத்த தோழியர். விமலாதேவியும் கௌரவப் படுத்தப் பட்டார். 
இன்றைய கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவு, மற்றும் இரத்த அழுத்த  அலகுகள்  அதற்குரிய புதிய கருவிகளுடன் நமது உறுப்பினர்களுக்கு  செய்யப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை தோழர் .ஜெயகுமார் & அண்ணாதுரை நல்லமுறையில் செய்து கொடுத்தது பாராட்டத்தக்கது.
நமது மாவட்டத்தில் சிதம்பரம் நமது உறுப்பினர்களின் நலன் வருமுன் காப்பதில் முன்னணி வகித்து மற்றவர்களுக்கும் எடுத்து காட்டாக திகழ்வதை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
இரத்த அழுத்த கருவி  தோழர் .ஜெயகுமார்  தன் சொந்த செலவில் வழங்கியமைக்கு பாராட்டப்பட்டார். 
தோழியர் .ராஜேஸ்வரி இரத்த சர்க்கரை அளவு கருவி தன் சொந்த செலவில் வழங்கியமைக்கு பாராட்டப்பட்டார். 
நன்றி .லட்சுமிநாராயணன்














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக