Translate

செவ்வாய், 1 அக்டோபர், 2013

பணி ஓய்வு 30-9-2013

மலர் 25


30-9-2013 அன்று பணிஓய்வு பெறும் நமது தோழர்கள் M.L.ராஜா  C.A.O,N.முனுசாமி SSS
  இருவரும் புன்னகைப் பூத்த இனிய குணம் கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள். பொறுப்பாக பணியாற்றி நல்லபெயர் பெற்றவர்கள். குறிப்பாக திரு M.L.ராஜா  C.A.O பொது மேலாளர் அலுவலகம் கடலூர் 2008 இல் நமது குடும்ப ஓய்வூதிர்களின் 2007 வரையிலான மருத்துவ நிலுவைகளை தானே முன்னின்று தீர்த்து வைத்து நமக்கு பேருதவி செய்தவர்.

M.L.ராஜா  C.A.O பொது மேலாளர் அலுவலகம் கடலூர்


N.முனுசாமி SSS. விழுப்புரம்

திரு முனுசாமியுடன் நமது உதவிச்செயலர்கள் P.ஜெயராமன் ,N.திருஞானம்,திரு நீலகண்டன்

     M.L.ராஜா  C.A.O,N.முனுசாமி SSS   இவர்களது  பணி ஒய்வு காலம் சிறக்க

 நமது ஓய்வுபெற்றோர்  நலச்சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களை   
தெரிவித்துக் கொள்கிறது.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013




மலர்  24

கடலூர் GM  BSNL அலுவலகம் முன்பாக  23-9-2013 அன்று  ஆர்ப்பாட்டம் 


Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                                          Email: aibsnlpwacuddalore@gmail.com
                                          Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

  LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai





நமது மத்திய சங்க அறைகூவலுக்கு இணங்க 

(1) பென்ஷன் முரண்பாடுகளை தீர்க்க கோரியும், 


(2) 78.2% IDA 
இணைப்பை பென்ஷனர்களுக்கும் 

அளிக்க கோரியும்
 

நமது தொலைபேசி மாவட்ட தலைநகர் கடலூரில் GM  BSNL அலுவலகம் முன்பாக  23-9-2013 அன்று  மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. நமது உறுப்பினர்கள் 100 பேர் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.SNEA சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துரை வழங்கினர்.






உணவு இடைவெளிக்குப் பிறகு கடலூர் டவுன் ஹாலில் K.ரவீந்திரன் மாவட்டத் தலைவர் தலைமையில் பொதுக்குழுக்கூட்டம் நடந்தது.


தோழர் P.ஜெயராமன் உதவிச்செயலர் தலைநகர் டில்லியில் 23-10-2013 அன்று நடக்க இருக்கும் தர்ணாவுக்கு கலந்துக் கொள்ள பயண சீட்டுகள் முன்பதிவு செய்துள்ள  நமது உறுப்பினர்கள் 40 பேரின் பெயர்களை வாசித்தார்.  SNEA சங்க நிர்வாகிகள் தோழர் N.பாலகிருஷ்ணன்,R.அசோகன்,C.பாண்டுரங்கன் நமக்கு அளித்து வரும் ஒத்துழைப்பினை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
 
நமது கவுரவ தலைவர் தோழர் N.பாலகிருஷ்ணன் தொடர்ச்சியான நிகழ்வுகளையும் நமது கோரிக்கைகள் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
 
தோழர் R.அசோகன் SNEA அவரது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தோழர் C.பாண்டுரங்கன்  மாவட்ட செயலர் SNEA அவர்களது பொதுச்செயலர் 78.2% IDA இணைப்பை பென்ஷனர்களுக்கும்  அளிக்க DOT க்கு அளித்த கடிதத்தையும் நினைவு கூர்ந்து நமது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.

தோழர் N.திருஞானம் உதவிச்செயலர் நமது மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.

தோழர் துரைசாமி திண்டிவனம் உதவிச்செயலர் ஒவ்வொரு மாதமும்  பவுர்ணமியன்று செஞ்சி, திண்டிவனம் தோழர்கள் திண்டிவனத்தில்  நடத்தும் கூட்டங்கள் பற்றியும், விரிவாக எடுத்துரைத்து மாவட்டச்சங்க நிர்வாகிகள் கலந்துக்கொள்ள கூறினார்.

தோழர் ஸ்ரீநிவாசன் SDE திருக்கோவிலூர் அவர்களிடம் அந்த பகுதி உறுப்பினர்களை ஒன்றிணைத்து அவர்களின் பிரச்னைகளுக்கு உதவிடுமாறு வேண்டுகோள் விடப்பட்டது.
 
தோழர் L.ஜகன்னாதன் TTA உளுந்தூர்பேட்டை அவர்களிடம் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை பகுதி உறுப்பினர்களுக்காக ஒன்றிணைத்து ஒரு கூட்டம் நடத்த வேண்டுகோள் விடப்பட்டது.

தோழர் A.ஜெயக்குமார் SDE சிதம்பரம் அவர்கள் பேசும்போது திரும்பவும் ஒரு கூட்டம் சிதம்பரம்,காட்டுமன்னார்கோயில் பகுதிக்காக நடத்த திட்டம் இருப்பதாக கூறினார்.


விழுப்புரம் தோழர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ந்தேதி நடத்தும் கூட்டங்கள் பற்றியும், எவ்வாறு எல்லா உறுப்பினர்களும் உற்சாகமாக கலந்துக்கொண்டு தங்கள் பிரச்னைகளை தீர்த்து கொள்வதைப் பற்றியும் தெரிவித்தனர்.

தோழர் R. பூபாலன் மாவட்ட நிதிநிலையைப் பற்றியும், 12-9-13 வரை மத்திய,மாநில பங்கு நிதியை அனுப்பியதைப் பற்றி கூறினார்.

தோழர் K.வெங்கடரமணன் மாவட்ட செயலர்  அவர்கள் எல்லா செய்திகளையும் ஒருங்கிணைத்து நமது செயல்பாடுகளையும், நமது 138 ஆயுள் உறுப்பினர் சந்தாவைப் பற்றியும் நினைவு கூர்ந்து, சந்தா,குடும்ப நல நிதி,பென்ஷன் பத்திரிகா சந்தா  செலுத்தாதவர்களை செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். 

பொதுவாக தோழர்கள் மாவட்டத்தின் ஒரு இதழை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது தமிழில் செய்திகளை தாங்கி வெளியிட வேண்டுகோள் விடுத்தனர்.

தோழர் G.அசோகன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.


ஒன்றுபடுவோம் ! போராடுவோம் !  வெற்றி பெறுவோம். 

திங்கள், 23 செப்டம்பர், 2013


மலர் 23
சஷ்டியப்தபூர்த்தி

Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                    Email: aibsnlpwacuddalore@gmail.com
                                   Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

  LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai 


நமது உறுப்பினர் திரு  D.தியாகராஜனின்  சஷ்டியப்தபூர்த்தி


நமது உறுப்பினர் திரு  D.தியாகராஜனின்  சஷ்டியப்தபூர்த்தி 10-9-2013 அன்று பால கண்ணைய படையாட்சி  திருமணமண்டபத்தில்  விமரிசையாக நடந்தது.நமது உறுப்பினர்களும்,நண்பர்களும் மகிழ்ச்சியுடன் கலந்துக்கொண்டு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.நீள் ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

பணி ஓய்வு

31-8-2013 அன்று பணிஓய்வு பெறும் நமது தோழர்கள்

K.தக்ஷிணாமூர்த்தி  T.M கடலூர்

A.சுப்ரமணியன் S.D.E விழுப்புரம்


ஆகியோரின் பணி ஒய்வு காலம் சிறக்க நமது ஓய்வுபெற்றோர் 

நலச்சங்கம் தனது நெஞ்சு நிறை 

வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது

திங்கள், 26 ஆகஸ்ட், 2013


 கடலூரில்ஆர்ப்பாட்டம் 23-9-2013 -அன்றும் 
டில்லியில் தர்ணா போராட்டம் 23-10-2013அன்றும்
 மலர் 21


Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                    Email: aibsnlpwacuddalore@gmail.com
                                   Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

  LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai

நமது மத்திய சங்க அறைகூவலுக்கு இணங்க 


(1) பென்ஷன் முரண்பாடுகளை தீர்க்க கோரியும், 




(2) 78.2% DA இணைப்பை பென்ஷனர்களுக்கும் 



அளிக்க கோரியும் 




மாநில,தொலைபேசி மாவட்ட தலைநகர்களில்  



23-9-2013 அன்று  ஆர்ப்பாட்டமும்,





தலைநகர் டில்லியில் 23-10-2013 அன்று தர்ணாவும் 





நடக்க இருக்கின்றது.



நமது உறுப்பனர்கள் பெருந்திரளாக 



கலந்துக்கொண்டு 




வெற்றி பெற அழைக்கின்றோம்.




விவரமான அறிக்கை விரைவில் நமது அகில 



இந்திய பொதுச்செயலர் 




தோழர் G .நடராஜன் அவர்களால் 



வெளியிடப்பட உள்ளது.