உண்ணாவிரத போராட்டம் 22-11-2018 
ஏழாவது   ஊதியக்குழு பரிந்துரைத்த
ஊதிய மாற்றத்தை BSNL 
ஓய்வூதியர்களுக்கு  1 -1-  2017 முதல் அளித்திட கோரி உண்ணாவிரத 
போராட்டம் 22-11-2018  அன்று  கடலூர் BSNL  வாடிக்கையாளர்  
சேவைமையம் எதிரில் காலை 10 மணியிலிருந்து  மாலை 5 
மணிவரை கடலூர் மாவட்ட 
அனைத்து பகுதிகளில் இருந்து மகளிர் 20 பேர் உட்பட 200 
உறுப்பினர்கள்,சங்க நிர்வாகிகள்  
கலந்துக் கொண்டனர்.தோழர் P.ஜெயராமன் மாவட்டத்தலைவர் தலைமை தாங்கி கூட்ட நிகழ்வுகளை துவக்கினார்.
NFTE,BSNLEU,SNEA,FNTO முதலிய அனைத்து சகோதர சங்கங்களும் 
கலந்துக்கொண்டு வாழ்த்துரைகளை வழங்கி எல்லோரும் 
ஒற்றுமையுடன் போராடி நமது 
நோக்கங்களை வெல்வோம் என்று சொற்பொழிவு ஆற்றினர்.
தோழர் கோவிந்தராஜ் DGMF ஒய்வு உண்ணாவிரத
போராட்ட தோழர்களுக்கு  குளிர் பானம் அளித்தார்.
தோழர் காஜா கமாலுதீன் நன்றி கூறி கூட்ட நிகழ்வுகளை நிறைவு செய்தார்.
தோழர் கோவிந்தராஜ் DGMF ஒய்வு உண்ணாவிரத
தோழர் காஜா கமாலுதீன் நன்றி கூறி கூட்ட நிகழ்வுகளை நிறைவு செய்தார்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக