Translate

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

AIBSNLPWA  விழுப்புரம் பகுதி  புதிய அலுவலகம் திறப்பும்,மாதாந்திரக்கூட்டமும் 4-2-2018
புதிய அலுவலக பெயர்பலகையை தோழர் ஜெயபால் திறந்து வைத்தார்
CTTC சென்னையில் ஒய்வுபெறப்போகும் தோழர் செல்வராஜ் அவர்கள் 5500 ரூபாய் செலவில் தான் அளித்த அழகான நிலை அலமாரியை திறந்து வைத்தார்.


தோழர் செல்வராஜ்  அவர்களுக்கு பொன்னாடை போற்றி,பரிசளித்து கவுரவிக்கப்பட்டார்.

கூட்டத்தினை தோழர் ஜெயபால் அவர்கள் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார். விழுப்புரம்பகுதி  செயலர் தோழர்  வீரமணி இந்தபுதிய அலுவலக திறப்புக்கு பங்களித்த தோழர்களை பாராட்டி பேசினார்.தோழர்கள் துரைபாபு ,ஜோவெற்றி  அவர்களும்   சிறப்புரை ஆற்றினர்.முன்னணி தோழர்களும் தற்போதைய பிரச்னைகளின் தாக்கத்தையும்,சந்தகேகங்களையும் விவாதித்தனர். மாநிலச்  சங்கத்தின் சார்பாக K.ரவீந்திரன் கலந்துக்கொண்டு தற்போதைய நிகழ்வுகளையும்,நமது தலைமை எடுத்துவரும் முயற்ச்சிகளையும்,உழைப்பினையும்  எடுத்துக் காட்டி பேசினார்.






இந்த நாள்  வெகுவான கல்யாணநாளாக இருந்தாலும் பல்வேறு வேலைக்கிடையிலும் நிறைய தோழர்களும்,தோழியர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக