Translate

செவ்வாய், 24 டிசம்பர், 2013

கிருஸ்துமஸ் ,புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மலர் 34

                  Website: aibsnlpwacuddalore.blogspot.in  
Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999

LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai




இயேசுவும்,கிருஷ்ணரும் மேய்ப்பரே
எளிமையும்,அன்புமே உலகை ஆளும்.

பகிர்ந்துக்கொள்வது,அன்பு செலுத்துவது
தோள் கொடுப்பது, துயர் துடைப்பது,
உற்சாகம் கொள்வது,உயர்வில் மகிழ்வது,
தன் சுதந்திரத்தை இழக்காமல் ஏற்றமாய் இருப்பது 
நம்மை நெறிபடுத்துவதால்மற்றவரையும் மகிழ்விப்பதாகும்.

கிருஸ்துமஸ் ,புத்தாண்டு வாழ்த்துக்கள்.



திங்கள், 23 டிசம்பர், 2013

ஆழ்ந்த இரங்கல்-தோழர் S.  கேப்ரியல் STS கடலூர் மறைவு 

23-12-2013  -  மலர் 33

    Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                                   Email: aibsnlpwacuddalore@gmail.com
                                      Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

  LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI           STR   TVL    KOVAI  Madurai

ஆழ்ந்த இரங்கல்


நமது உறுப்பினர் தோழர்  S.  கேப்ரியல் STS கடலூர்   (வயது68)அவர்கள்  23-12-2013  அன்று உடல் நலம் சரியில்லாமல் கடலூர் அவரது இல்லத்தில்  அகால மரணம் அடைந்தார்.அன்னாரின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 23-12-2013  அன்று அன்று இறுதி காரியங்கள் அவரது இல்லம் சாமுபிள்ளை நகரில் நடக்க இருக்கின்றது.

இவர் ஒரு பொன்மனச்செம்மல்.
மனிதநேயம் மிக்கவர்.
இன்முகம் காட்டி நட்பு பாராட்டக்கூடியவர்.
இவர் இருந்த இடம் எல்லாம் கல கலப்பாக வைத்துக் கொண்டவர்.
இவர் கூட பணி செய்வது எல்லோருக்கும் பிடிக்கும்.
நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்று நல்ல பேரோடு வாழ்ந்தவர்.
சாமுபிள்ளை நகரின் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும்,வயதானனவர்களுக்கும் உதவும் பரோபகாரி.
கடந்த வருடத்தில் ஜெருசலம்,பெத்லேகம் புண்ணிய பயணம் செய்துவந்த இறை அருளாளர்.
நமது சங்கத்தின் ஆயுள் உறுப்பினர்.அவர் குடும்பத்திற்கும்,

நமக்கும் பேரிழப்பு.

    
அவர் ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திக்கின்றோம். 

புதன், 11 டிசம்பர், 2013

புதுச்சேரி  AIBSNLPWA இரண்டாவது மாவட்டமாநாடும்,
மாண்புமிகுதிருV.நாராயணசாமி  மத்திய இணை அமைச்சர் வாழ்த்துரையும்.

Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

மலர் 32
                  Website: aibsnlpwacuddalore.blogspot.in  
Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999

LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai




புதுச்சேரி  AIBSNLPWA இரண்டாவது மாவட்டமாநாடு 8-2-2013 அன்று காலை 9-30 மணிக்கு தேசியக்கொடி,சங்க கொடிஏற்றத்துடன் புதுச்சேரி நாடார் உறவின் முறைச்சங்க கட்டிடத்தில் 
  நமது புதுச்சேரி மாவட்டத்தின் அனைத்து பகுதி உறுப்பினர்களின் பங்கேற்புடன் வெகு சிறப்பாக தொடங்கியது.
       
தோழர் சி. ஜானகிராமன் SDE ஓய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார்.

நமது  மாண்புமிகு திருV.நாராயணசாமி  மத்திய இணை அமைச்சர்  மாவட்ட மாநாட்டில் கலந்துக் கொண்டது நமது உறுப்பினர்களுக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.முன்னதாக திரு முத்தியாலு தமிழ் மாநில தலைவர் நமது கோரிக்கைகளை அமைச்சர் முன்னிலையில் சுருக்கமாக எடுத்துரைத்தார்.78.2 % IDA,பென்ஷன் முரண்பாடுகளை தீர்த்தல் ,SCOVA அமைப்பில் நம்மையும் சேர்த்தல்,7 வது சம்பளக் குழுவில் BSNL ஒய்வூதியர்களையும் (TERMS OF REFERRENCE)இல் சேர்த்தல் முதலான  கோரிக்கை ஆவணத்தை திரு V.ராமாராவ் மாநிலசெயலர் அவர்களுடன் இணைந்து அளித்தனர்.அமைச்சர் நமக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தலை நகர் டில்லி சென்றபிறகு இவற்றை கவனிப்பதாக கூறினார்.


முது நிலை பொது மேலாளர் திரு மிகு R.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.கடலூர்,புதுச்சேரி  தொலைபேசி மாவட்டங்கள் நட்டத்தில் இருந்து மீண்டும் எவ்வாறு ஓரளவு நல்லநிலைக்கு திரும்புகிறது என்பதையும் எடுத்துரைத்தார். நமக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திரு  V.ராமாராவ் மாநிலசெயலர்  அவர்கள் நமது சங்கத்தின் செயல்பாடுகளையும்,1 லட்சம் உறுப்பினர் எண்ணிக்கையை நமது குறியீடாக கொண்டு ஒவ்வொருவரும் ஒரு புதிய உறுப்பினரை கொண்டு வரவேண்டும் என்றுக் கூறினார்.

 திரு முத்தியாலு தமிழ் மாநில தலைவர்  நமது பென்ஷன் வரலாற்றையும்,D.S.நக்ரா டிசெம்பர் 17,1982 இல் சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் அமைப்பு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க ஆணையையும்  நினைவு கூர்ந்தார்.


பென்ஷன்  ஒரு வெகுமதியோ,கொடையோ அல்ல.நாம் சம்பாதித்த கொடுபடா ஊதியம். ஓய்வுபெற்றவர்கள் சுய கௌரவத்துடன் வாழ வழி வகுத்த இந்த தீர்ப்பை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,நாம் ஓய்வுபெற்றோர்  நலச்சங்கத்தை பேணி பாதுகாக்கவேண்டும் 
-என்று நினைவுறுத்தினார்.

நமது மாவட்டத்திலிருந்து  15  உறுப்பினர்கள்  கலந்துக் கொண்டனர்.

தோழர் K.முருகன்  SSS ஒய்வு  கலந்துக்கொண்டு  சிறப்புரை ஆற்றி ஆயுட்கால உறுப்பினர்,சங்க பத்திரிகை  சந்தாவையும், செலுத்தினார்.

தோழர் ச.சதாசிவம் SSS (ஓய்வு)  மாவட்டச் செயலர்  வரவேற்று , சென்ற மாநாட்டிற்குப் பின் தற்போது 34 இலிருந்து 113 உறுப்பினர்களாக வளர்ந்துள்ளதை பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.
நமது மத்திய சங்கமும்,மாநிலச்சங்கமும்  நமக்கு பக்கபலமாக உள்ளதையும், BSNL ஓய்வுபெற்றோர்  அனைவரும் ஒரே சங்கமாக இருக்க வேண்டும்  என்ற என்ணத்தைக் கொண்டுள்ளதையும் நினைவு கூர்ந்தார். 
சிறந்த செயல்பாடு,பாகுபாடற்ற நடைமுறை, ஓய்வூதியர்கள் அனைவரும் பலன் பெற வேண்டும் என்ற ஒப்பற்றக் கொள்கை-இவற்றின் காரணமாகவே நிறைய புதிய உறுப்பினர்கள் நம்மோடு சேர்ந்து நம் சங்கத்தை பலபடுத்துகின்றனர்  என்றார்.

மதிய உணவுக்கு  பிறகு புதிய தலைவராக தோழர் அன்பழகன் ,செயலராக தோழர்  ச.சதாசிவம் அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநாட்டில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு அளிக்கப்பட்டது.

நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைந்தது.









ஞாயிறு, 8 டிசம்பர், 2013


விழுப்புரம் பொதுக்குழுக்கூட்டமும்,பென்ஷனர் தினமும் 



 LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI     STR   TVL    KOVAI

Website:-  aibsnlpwacuddalore.blogspot.in       Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

மலர் 31


                   
























சனி, 7 டிசம்பர், 2013


நெல்சன் மண்டேலா – தென் ஆப்ரிக்கா தேச தந்தை மறைவு

அஞ்சலி
Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

மலர் 30
                    LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI     STR   TVL    KOVAI



தோற்றம்:18-7- 1918           மறைவு:6-12-2013

இவர்
தென் ஆப்ரிக்காவின் தேசிய இனங்களில் ஒன்றில் அரச குடும்பத்தில் இருந்தவர்.
முறையான கல்வி பெற்று நாட்டின் சூழ்நிலைகளை புரிந்துக்கொண்டார்.

இனவெறி ஆதிக்கத்தை எதிர்த்து தேசிய இனங்களின் மக்களை திரட்டி 

 பொதுஉடைமை கட்சி ஊழியர்களுடன் சேர்ந்து ஆதிக்க வாதிகளை எதிர்த்து போராடியவர்.

MK (SPEAR OF THE NATION) என்ற ஒரு மக்கட்  படைக்கு தளபதியாய் ஈட்டி முனைபோல்  

செயல் பட்டார்.

ஆரம்பத்தில் ஆயுதமேந்தி போராடவேண்டிய சூழ்நிலை இருந்தபோதும் அமைதி வழியே 

இறுதியில் சமூகத்திற்கு நலன் பயக்கும் என்று  அண்ணல் காந்தி அடிகளை பின்பற்றினார்.

27 வருடங்கள் கடும் சிறையில் வாடியும் தனது குறிக்கோளில் பின்வாங்கவில்லை.

ANC என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் தனிப்பெரும் தலைவராய் திகழ்ந்தார்

மனிதநேயம் கொண்டு  அனைத்து மக்களுடன் சமாதானமாக இருந்து நாட்டின் 

வளர்ச்சியே தனது குறிக்கோளாக கொண்டார்.

இறுதியாக 1994 இல் நாட்டின் தலைமை பதவியையும் பெற்று நல்லாட்சி தந்தார்.

தேசிய இனங்களையும்,வெள்ளையரையும் ஒற்றுமை படுத்தினார்.

நமது நாட்டின் பாரதரத்னாவையும்,சமாதனத்திற்கான 1993 இல் நோபல்பரிசையும் சேர்த்து 

250 பரிசுகளை பெற்றார்.

தேசிய இனங்களின் பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களுக்கே திரும்ப வாங்கிகொடுத்தார்.

நாட்டின் கல்வி,சுகாதாரம்,சமூக நீதியை நிலை படுத்தி மேம்படுத்தினார்.

அடிமைப்பட்ட மண்ணின் மைந்தர்களை கௌரவமாக வாழ வகைச் செய்தவர்.

அவர் மறைந்தாலும், அவரது எண்ணங்கள்,செயல்பாடுகள் நல்லோரை உருவாக்கும்.

வாழ்க நெல்சன் மண்டேலா

அவரது படைப்புக்கள்:
  Long Walk to Freedom" (autobiography) (English)

"The Struggle Is My Life" (English)

"Nelson Mandela Speaks: Forging a Democratic, Nonracial South Africa" (English) 

புதன், 4 டிசம்பர், 2013

பணி ஒய்வு பாராட்டுவிழா 30-11-2013


Website: aibsnlpwacuddalore.blogspot.in  Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999

LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai

நமது  GM BSNL கடலூர் கான்பரன்ஸ் அரங்கத்தில் பாராட்டுவிழா
தோழர் N.நாகராஜன் SDE அவர்களுக்கு நமது பொருளாளர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தோழர் உஸ்மான்  SDE அவர்களுக்கு நமது மூத்தத்தோழர்  நீலகண்டன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தோழர்  கணேசன் அவர்களுக்கு  நமது தோழர்  R.வேலாயுதம்  பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

நீள் ஆயுளும் நிறைசெல்வமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.