Translate

புதன், 11 டிசம்பர், 2013

புதுச்சேரி  AIBSNLPWA இரண்டாவது மாவட்டமாநாடும்,
மாண்புமிகுதிருV.நாராயணசாமி  மத்திய இணை அமைச்சர் வாழ்த்துரையும்.

Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

மலர் 32
                  Website: aibsnlpwacuddalore.blogspot.in  
Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999

LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai
புதுச்சேரி  AIBSNLPWA இரண்டாவது மாவட்டமாநாடு 8-2-2013 அன்று காலை 9-30 மணிக்கு தேசியக்கொடி,சங்க கொடிஏற்றத்துடன் புதுச்சேரி நாடார் உறவின் முறைச்சங்க கட்டிடத்தில் 
  நமது புதுச்சேரி மாவட்டத்தின் அனைத்து பகுதி உறுப்பினர்களின் பங்கேற்புடன் வெகு சிறப்பாக தொடங்கியது.
       
தோழர் சி. ஜானகிராமன் SDE ஓய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார்.

நமது  மாண்புமிகு திருV.நாராயணசாமி  மத்திய இணை அமைச்சர்  மாவட்ட மாநாட்டில் கலந்துக் கொண்டது நமது உறுப்பினர்களுக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.முன்னதாக திரு முத்தியாலு தமிழ் மாநில தலைவர் நமது கோரிக்கைகளை அமைச்சர் முன்னிலையில் சுருக்கமாக எடுத்துரைத்தார்.78.2 % IDA,பென்ஷன் முரண்பாடுகளை தீர்த்தல் ,SCOVA அமைப்பில் நம்மையும் சேர்த்தல்,7 வது சம்பளக் குழுவில் BSNL ஒய்வூதியர்களையும் (TERMS OF REFERRENCE)இல் சேர்த்தல் முதலான  கோரிக்கை ஆவணத்தை திரு V.ராமாராவ் மாநிலசெயலர் அவர்களுடன் இணைந்து அளித்தனர்.அமைச்சர் நமக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தலை நகர் டில்லி சென்றபிறகு இவற்றை கவனிப்பதாக கூறினார்.


முது நிலை பொது மேலாளர் திரு மிகு R.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.கடலூர்,புதுச்சேரி  தொலைபேசி மாவட்டங்கள் நட்டத்தில் இருந்து மீண்டும் எவ்வாறு ஓரளவு நல்லநிலைக்கு திரும்புகிறது என்பதையும் எடுத்துரைத்தார். நமக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திரு  V.ராமாராவ் மாநிலசெயலர்  அவர்கள் நமது சங்கத்தின் செயல்பாடுகளையும்,1 லட்சம் உறுப்பினர் எண்ணிக்கையை நமது குறியீடாக கொண்டு ஒவ்வொருவரும் ஒரு புதிய உறுப்பினரை கொண்டு வரவேண்டும் என்றுக் கூறினார்.

 திரு முத்தியாலு தமிழ் மாநில தலைவர்  நமது பென்ஷன் வரலாற்றையும்,D.S.நக்ரா டிசெம்பர் 17,1982 இல் சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் அமைப்பு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க ஆணையையும்  நினைவு கூர்ந்தார்.


பென்ஷன்  ஒரு வெகுமதியோ,கொடையோ அல்ல.நாம் சம்பாதித்த கொடுபடா ஊதியம். ஓய்வுபெற்றவர்கள் சுய கௌரவத்துடன் வாழ வழி வகுத்த இந்த தீர்ப்பை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,நாம் ஓய்வுபெற்றோர்  நலச்சங்கத்தை பேணி பாதுகாக்கவேண்டும் 
-என்று நினைவுறுத்தினார்.

நமது மாவட்டத்திலிருந்து  15  உறுப்பினர்கள்  கலந்துக் கொண்டனர்.

தோழர் K.முருகன்  SSS ஒய்வு  கலந்துக்கொண்டு  சிறப்புரை ஆற்றி ஆயுட்கால உறுப்பினர்,சங்க பத்திரிகை  சந்தாவையும், செலுத்தினார்.

தோழர் ச.சதாசிவம் SSS (ஓய்வு)  மாவட்டச் செயலர்  வரவேற்று , சென்ற மாநாட்டிற்குப் பின் தற்போது 34 இலிருந்து 113 உறுப்பினர்களாக வளர்ந்துள்ளதை பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.
நமது மத்திய சங்கமும்,மாநிலச்சங்கமும்  நமக்கு பக்கபலமாக உள்ளதையும், BSNL ஓய்வுபெற்றோர்  அனைவரும் ஒரே சங்கமாக இருக்க வேண்டும்  என்ற என்ணத்தைக் கொண்டுள்ளதையும் நினைவு கூர்ந்தார். 
சிறந்த செயல்பாடு,பாகுபாடற்ற நடைமுறை, ஓய்வூதியர்கள் அனைவரும் பலன் பெற வேண்டும் என்ற ஒப்பற்றக் கொள்கை-இவற்றின் காரணமாகவே நிறைய புதிய உறுப்பினர்கள் நம்மோடு சேர்ந்து நம் சங்கத்தை பலபடுத்துகின்றனர்  என்றார்.

மதிய உணவுக்கு  பிறகு புதிய தலைவராக தோழர் அன்பழகன் ,செயலராக தோழர்  ச.சதாசிவம் அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநாட்டில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு அளிக்கப்பட்டது.

நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைந்தது.

1 கருத்து:

  1. Nadar Matrimony is a part of Winmatrimony.com. The largest Nadar Matrimonial website with lakh of Nadar Matrimony profiles, Win matrimony is trusted by over 20 million for matrimony. Find Nadar Matches through email join Free! Nadar Matrimony Chennai

    பதிலளிநீக்கு