Translate

வியாழன், 8 டிசம்பர், 2016

எளிதான பண பரிவர்த்தனைக்கு கை கொடுக்கும் மொபைல் போன் செயலி:

Shared by Salem Ramani. Thanks to Dhinamalar ,Salem Ramani    
எந்தவித கட்டணமும் இன்றிமொபைல் போன் வாயிலாகபண பரிமாற்றத்துக்கு உதவும் செயலிகள்தற்போதுஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்துஏராளமான மக்களை காப்பாற்றியுள்ளனஉபயோகிக்க எளிதாக இருப்பதால்,சாமானியர்களும்இந்த வசதியை பயன்படுத்த துவங்கியுள்ளனர்

நிதி நெருக்கடி : பழைய, 500 - 1,000 ரூபாய் செல்லாது அறிவிப்பு வெளியான பின்வங்கிகளிலும்.டி.எம்.,களிலும்,கூட்டம் அலைமோதுகிறதுபணத்தை எடுக்கபல மணி நேரம் கால் வலிக்க நிற்க வேண்டியுள்ளதுஆனால்இந்தபிரச்னைகள் எதுவும் இன்றிஒரு தரப்பினர்இந்த நிதி நெருக்கடி நிலையை எளிதாக சமாளித்து வருகின்றனர்.
'
கிரெடிட் கார்டுடெபிட் கார்டு'கள் உதவினாலும்பெரும்பாலானோரின் தேர்வாக இருப்பதுமொபைல் போன் மூலம்நடைபெறும்ரொக்கமில்லா பரிவர்த்தனையேகாகித பணம் இல்லாத நாடாக மாறமத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறதுஇந்நிலையில், 120 கோடி மொபைல் போன் வாடிக்கையாளர்கள் உடைய நாட்டில்இது மிகச் சிறந்த தேர்வாகஇருக்கும் என்பதில்மாற்று கருத்து இல்லை

முதலிடம் : அதில்மின்சாரம்மளிகைமொபைல் போன் ரீசார்ஜ்இன்சூரன்ஸ்ஆட்டோடாக்சி கட்டணம்விமானம்,சினிமா டிக்கெட் எனநுாற்றுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை அலட்டாமல் மேற்கொள்ளலாம்அதனால்இந்தசெயலிக்கு மவுசு கூடி வருகிறது.
இதில்நாட்டில் முதலிடத்தை பிடித்திருப்பது'பேடிஎம்' ஆகும்இந்த செயலியை'ஆண்ட்ராய்டுபோனில்'பிளேஸ்டோரில்' எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்பின்உள்ளே சென்றால், 'ஆட்மணி' என்ற ஆப்ஷனை அழுத்தியதும்,உங்களுக்கு தேவையான தொகையை வங்கிக் கணக்கில் இருந்துபேடிஎம் கணக்கிற்கு மாற்றலாம்நீங்கள் மாற்றவிரும்பும் தொகையை, 'டைப்செய்ததும்உங்கள் டெபிட்கிரெடிட் கார்டு அல்லது 'நெட் பேங்கிங்ஆகிய ஏதேனும்ஒன்றின் விபரங்கள் கேட்கப்படும்அதில்உங்கள் தேர்வை பதிவு செய்ததும், 'பே நவ்என்ற ஆப்ஷன் வரும்அதைஅழுத்தியதும், 'வேலட்என்கிற உங்கள் பேடிஎம் கணக்கில் சேர்ந்து விடும்அதன்மூலம்நீங்கள் விரும்பியதைஎளிதில் வாங்க முடியும்அதற்குஎதிர்முனையில் இருப்பவரிடமும்பேடிஎம் வசதி இருப்பது அவசியம்.
காய்கறி முதல் கார் வரை : இன்றுபெட்ரோல் பங்க்மளிகை கடைகாய்கறி கடைகளிலும்இந்த வசதி உள்ளது.அங்கு சென்று பொருட்களை வாங்கியதும்செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்டுகடைக்காரரின் மொபைல்எண்ணை, 'டைப்செய்து, 'பே ஆர் சென்ட் மணிஎன்ற ஆப்ஷனை அழுத்த வேண்டும்உடனேஅந்த கடைக்காரருக்குபணம் போய் விடும்இருவரின் மொபைல் போன்களுக்கும்அந்த பரிவர்த்தனை பற்றிய எஸ்.எம்.எஸ்., வந்து விடும்

சற்று விபரம் உள்ளவர்கள்கடைக்காரரின், 'கியூ ஆர் கோட்' மொபைலில், 'ஸ்கேன்செய்து பணம் செலுத்துகின்றனர்.இதுசிரமம் என நினைத்தால்முதலில் கூறிய முறையை பயன்படுத்தலாம்.
 'பேடிஎம்' போலவே, 'வோடபோன்நிறுவனத்தின்'எம் பைசா' செயலியால்தொலைதுாரத்தில் வங்கிக் கணக்குஇல்லாத நண்பர்உறவினருக்குபணம் அனுப்ப முடியும்மேலும், 'ஏர்டெல் மணிஎஸ்.பி.., பட்டிமொபிக்விக்' என,பல செயலிகளும் பிரபலமாகி வருகின்றன

முதல் முறை பயன்படுத்தும்போதுசற்று சிரமம் தெரியும்பின்னர்காய்கறி முதல் கார் வரைரொக்கமின்றிஅனாயசமாக வாங்கலாம்ரொக்கமில்லா பொருளாதாரத்திற்குநாடு மாற முயற்சித்து வரும் நிலையில்நாமும்இதை பழகிக் கொண்டால்வரிசையில் முண்டியடிப்பதை தவிர்க்கலாம்.
நமது நிருபர் -

புதன், 7 டிசம்பர், 2016

அஞ்சலி-பன்முகத்தன்மையாளர் சோ     காலமானா‌ர்... shared from RB & BT



மனதில் சரி எனப்பட்டதை பயமின்றி பேசி, எழதி வந்த பத்திரிக்கையாளர்.
அரசியல் நாகரீகம் மிக்கவர் 
தனி வாழ்க்கை விமர்சனம் செய்யாதவர். 
நல்ல பண்பாளர்
காலமானா‌ர். 
இனி இப்படி ஒரு மனிதரை காண்பது அரிது. 
வாழ்க அவர் புகழ்.
நாடகாசிரியர்,
நடிகர்,
எழுத்தாளர்,
பத்திரிகை ஆசிரியர்
வழக்கறிஞர்,
அரசியல் விமரிசகர்,
பேச்சாளர்,
புத்தி சாதூர்யமிக்கவர்
பன் மொழிகள் அறிந்தவர்....
எல்லாவற்றிற்கும் மேலாக மகா தைரியசாலி.
தனக்கு சரியென்று தோன்றுவதை, எழுத சொல்ல தயங்காதவர்.
அவருடைய பதில்களில் இருக்கும் புத்திசாலித்தனமும், ப்ரஸன்ஸ் ஆஃப் மைண்டும் ரசிக்கக் கூடியவை.
அகில இந்திய அளவில் மிகப்பெரும் நபர்களுடன் தொடர்பில் இருந்தவர். அவர்கள் யாவரும் இவர் மேல் மிகப்பெரிய அளவில் மரியாதை கொண்டிருந்தனர்.
அரசியல் நிகழ்வுகளில் சோ என்ன சொல்கிறார் என்பதை அனைவரும் அறிய ஆவல் கொண்டிருந்தனர்.
அவரது ஆலோசனைகள் யாவும் பின்பற்றப்பட்டதோ இல்லையோ, உன்னிப்பாக கவனிக்கப்பட்டன.
அலாதியான நகைச்சுவை உணர்வு கொண்டவர்.
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பலருள் சோ முக்கியமானவவர்.
அவரது தொலைக்காட்சிக் காட்சி நாடகங்கள் யாவும் இன்றும் ரசிக்கக்கூடியவை.
இந்து மகா சமுத்திரம் போன்ற உன்னத புத்தகங்களை எழுதியவர்.
தமிழ்நாட்டில் அருகிப் போயிருந்த Satire கலையை முழுமையாக தனதாக்கிக் கொண்டவர்.
அனைத்து நிகழ்ச்சிகள் பற்றியும் துக்ளக் என்ன சொல்கிறது என்பதை அறிய அனைவரும் ஆவல் கொள்வர்.
அரசியல் சாணக்கியன்.
நாட்டில் ஏற்பட்ட பல்வேறு கூட்டணிகள்/மாற்றங்களுக்குப் பின்னால் அவரது மூளை, உழைப்பு இருந்திருக்கிறது.
அவருக்கு இருந்த ஆகப்பெரிய மனிதர்களின் தொடர்பை தனக்காக ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவர்.
நேர்மையாளர்.
இந்தியக் கலச்சாரத்தின் உயரிய மாண்புகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதவர். அவை போன்ற மனிதர்களை இனி காண்பதரிது.
தமிழகத்தைவிட்டு மற்றுமொரு மலர் உதிர்ந்துவிட்டது.
சிரம் தாழ்ந்த அஞ்சலி.


செவ்வாய், 6 டிசம்பர், 2016

அஞ்சலி

ஈடுகட்ட முடியாத இழப்பு. 
அவர் ஆன்மா இறைநிழலில் இளைப்பாறட்டும்.


..Shared by KVR.Source  Tamil Hindu 7-12-2016



1982 கடலூர் மாநாடு நடைபெற்றபோது மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு ஜெயலலிதா ஆகியோர் உணவு பொறுப்பை தலைவர் பண்ருட்டியார் சார்பில் நண்பர் திரு அமிர்தலிங்கமும் நானும் ஏற்று, உபசரிக்கும் பேற்றினை பெற்ற நினைவு மனதில் நிழலாடுகிறது.
2014 ஆம் ஆண்டு தலைமை கழக அலுவலகத்தில் திரு பண்ருட்டியார் கழகத்தில் இணைந்த நிகழ்வுக்குப்பின் கடலூர் நண்பர்களை அழைத்து முதல்வர் எங்களுடன் உரையாடிய நிகழ்வும் மறக்க முடியாத நிகழ்வு.

அம்மா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட 
அவரது ஆன்மா சாந்தியடைய  வேண்டுகிறோம்.
வாழ்க அவர் புகழ்....by B.Thirunavukkarasu.


நமது அரசியல் விமர்சன உலகம் அவரைப் பற்றி எதிர்மறையாகவே அதிகம் பேசியிருக்கிறது. ஆனால், அவரது மிக முக்கியமான சில பங்களிப்புகளைப் பற்றியும் நாம் பேச வேண்டும். இது அவருக்கான அஞ்சலி செலுத்தும் நேரம் என்பதால் மட்டும் அல்ல, அவரது மறைவுக்குப் பின்பு ஏற்பட வாய்ப்புள்ள ஓர் அபாயம் குறித்த கவலையாலும் இதைப் பற்றி இந்த நேரத்தில் நாம் பேச வேண்டியிருக்கிறது.
ஜெயலலிதாவைப் பற்றிய தன் இரங்கல் உரையில், திமுக எம்பி-யான கனிமொழி பேசியபோது, ஜெயலலிதா தமிழகத்தின் நலன்களை விட்டுக்கொடுக்காதவர் என்று கூறினார்
அவரது வாழ்வின் இறுதித் தருணம் வரை அவர் மத்திய - மாநில உறவுகள் குறித்த விஷயத்தில் ஒரு தொடர்ச்சியைப் பார்க்க முடிந்தது. அவர் விட்டுக்கொடுக்கிற விஷயங்கள் சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் சார்ந்து அமைகின்றன. ஆனால், அவர் விட்டுக்கொடுக்காத விஷயங்களில் தமிழ்நாட்டின் நெடுங்காலக் கோரிக்கைகள் அடங்கியிருக்கின்றன. 69% இடஒதுக்கீடு எந்த அளவுக்கு சமூகநீதிச் சிக்கலோ அதே அளவுக்கு மாநில உரிமைச் சிக்கலும்கூட. அதில் அவர் உறுதியாக இருந்தார். காவிரி, முல்லைப்பெரியாறு என எல்லாவற்றிலும் தமிழ்நாட்டின் பொதுக்குரலை அவர் ஒலித்தார்.
கடந்த சுதந்திர தின விழாவில் ஜெயலலிதா இவ்வாறு கூறினார்: "நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை நாம் இன்றைய தினம் நினைவுகூர்கிறோம். சுதந்திரம் என்றால் பேசுவதற்கும் எழுதுவதற்குமான உரிமை மட்டுமல்ல. உண்மையான சுதந்திரம் பொருளாதாரச் சுதந்திரம்தான்."

டெல்லியை நோக்கிச் சவாலான ஒரு பார்வையை வீசியதிலும் "நீ மகாராஜா என்றால், நான் மகாராணி" என்று அட்டகாசமாகச் சிரிப்பதிலும் பல மாநில முதல்வர்களிடையே மற்ற பல தமிழக முதல்வர்கள் உட்பட - அவர் வித்தியாசப்பட்டுதான் இருந்தார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அதனால், மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் நிச்சயம் அவருக்கு ஒரு இடம் இருக்கவே செய்யும்.
.Shared by K.R /Thanks to Source Tamil Hindu

திங்கள், 5 டிசம்பர், 2016

                                            காலாவதியான கேஸ் சிலிண்டர்கள்
Shared by Salem Ramani

அபாயம்
தனது திருமணத்திற்காக எடுத்த விடுமுறைகள் முடிந்து, தனது காவல் நிலையத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் வேலை செய்ய தொடங்கினார் அந்த சப் இன்ஸ்பெக்டர். காவல்நிலையத்திற்கு அருகே வீடு, இனி சரியான வேளையில், சரியான உணவை உண்ணலாம் என கனவில் மிதந்து கொண்டு இருக்கிற வேளையில், அவன் முன் இருந்த போன் அலற தொடங்கியது.

போனை எடுத்த சில நொடிகளில், பதற்றத்துடன் " உடனே அந்த இடத்துக்கு வந்துரேன் " எனக் கூறி இணைப்பினை தூண்டித்து, உடனே தடயவியல் நிபுணர் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அடுத்த 10 நிமிடத்தில் தீ சூழ்ந்த அந்த இடத்தை காவல் குழுவினரும், தடயவியல் நிபுணர் குழுவினரும் அடைந்த போது, அங்கே தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி கொண்டு இருந்தனர். சைரன் ஒலியுடன், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. சில நிமிட போரட்டத்திற்கு பிறகு அந்த வீட்டில் எரிந்த தீ அணைக்கப்பட்ட உடன், சப் இன்ஸ்பெக்டர், தடயவியல் நிபுணர் குழுவுடன், புகை மண்டலத்துடன், நிசப்தமாக இருந்த வீட்டினுள் நுழைந்தார்.

வீட்டினுள் யாரேனும் உள்ளனரா என கவனமாக பார்த்து கொண்டு இருக்கும் வேளையில், சமையலறை பகுதியில் இருந்து," என்னங்க, என்னங்க " என மெல்லிய குரல் கேட்க தொடங்கியது. பதற்றத்துடன் சப் இன்ஸ்பெக்டர், சமையல் அறை பகுதியை அடைந்ததும், அவரின் கை கால்கள் நடுங்கியது. முழுவதும் தீயினால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த கணவனின் உடலருகே, 90% தீயினால் பாதிக்கப்பட்ட மனைவி, கணவனை அழைத்தவாறு கிடந்தாள். அடுத்த சில நொடிகளிலே, இருவரும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் சப் இன்ஸ்பெக்டரும், ஆம்புலன்சில் ஏறினார். வாழ்வில் முதல் முறையாக, ஒருவர், உயிருக்கு போராடுவதை காண முடியாமல் தவித்தார். காவல் துறை வழக்கப்படி, வாக்குமூலம் பெற வேண்டிய கட்டாயத்தில், மனவேதனையுடன், உயிருக்கு போராடி கொண்டு இருந்த பெண்ணிடம், தீ விபத்து எப்படி நடந்தது, என கேட்க தொடங்கினார்.

அதற்கு அப்பெண், " எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகுது. நேத்து தான் இந்த வீட்டுக்கு குடி வந்தோம். நேத்து பால் காச்சுன போது, எதிர்பாரத விதமா, சூடான பால் என் கையில கொட்டிடுச்சு. எனக்கு சிரமம் கொடுக்க வேணாம்னு நெனச்ச என் கணவர், இன்னைக்கு சமையல, அவரே பண்ணுறேனு சொன்னாரு. நான் சமையலுக்கு தேவையான பொருள்களை வாங்கிட்டு வீட்டுக்குள்ள நூழையறப்ப தான் அந்த கோர சம்பவம் என் கண் முன்னாடி நடந்துச்சு. பெரிய வெடி சத்ததுடன் வந்த தீ, என் கணவர் மேல பட்டு எரிய ஆரம்பிச்சு. நான் அவர காப்பாத்த போனப்ப, என் மேலயும் தீ பரவிடுச்சு. எங்க வீட்டுல இருந்த கேஸ் ஸ்டவ்வு, கேஸ் ட்யூபு, ரெகுலேட்டரு எல்லாமே புதுசு தான். எல்லாமே சரிய இருந்தும் எப்படி வெடிச்சதுனு தெரியல. தயவு செஞ்சி என்னைய காப்பாத்திடாதீங்க. " என கூறிய சில நிமிடங்களில், அவள் தன்னுடைய கணவனை சொர்க்கத்தில் சந்தித்தாள். ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்தது. விபத்து தொடர்பாக, உயர் அதிகாரியை சந்திக்க, காவல் நிலையம் வந்த போது, சப் இன்ஸ்பெக்டர் மொபைலுக்கு, தடயவியல் நிபுணரிடம் இருந்து போன் கால் வந்தது. போனில் தடயவியல் நிபுணர், விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டதையும், எவ்வாறு நடந்தது என விவரித்ததும் பீதியுற்றார்.

காலண்டரில் தேதியைப் பார்த்தார். 10, அக்டோபர், 2016. உடனே தனது மனைவிக்கு கால் செய்தார். அவள் போனினை எடுக்கவில்லை. பதற்றத்துடன் வீட்டை நோக்கி ஓடினார். வீட்டை அடைந்ததும், சமையலறைக்குள் வேகமாக சென்று, சிலிண்டரின் மேல் பகுதியினை பார்த்தார். அதில் B-16 என எழுதப்பட்டு இருந்தது. உடனே, அந்த சிலிண்டரை அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், போன் செய்து, காலாவதியான சிலிண்டரை திரும்ப பெற்று கொள்ளுமாறு கூறி நிம்மதி அடைந்தார்.

நம் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர்களுக்கு Expiry Date உள்ளது. அது cylinder body ஐயும், Top ring பகுதியையும் இணைக்கும் மூன்று Metal strip இல், ஏதாவது ஒன்றில், உட்புறமாக, A to D எழுத்தில், ஏதேனும் ஒரு எழுத்தில், ஏதாவது ஒரு எண்ணுடன் சேர்க்கப்பட்டு, பெயின்டில் எழுதப்பட்டிருக்கும்.

அதை புரிந்து கொள்ளும் முறை.

A - January to March

B - April to June

C - July to September

D - October to December

எண்கள் - வருடத்தை குறிக்கும்

B-16 என்றால் June, 2016 கழித்து அந்த சிலிண்டரை நாம் உபயோகிக்க கூடாது.

ஒரு வேளை காலாவதியான கேஸ் சிலிண்டரை உபயோகித்தால், அந்த சிலிண்டரில் இருந்து, எந்த நேரத்திலும், கேஸ் கசிவு ஏற்பட்டு, நம் உயிரை அது பறிக்கும். கேஸ் சிலிண்டர் வாங்கும் போது Expiry date ஐ சரி பார்த்து வாங்கினால், சமையல் மட்டும் அல்ல , நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும். (  படத்தில் உள்ள சிலிண்டர், டிசம்பர் 2017ல் காலாவதியாகும். இன்றே உங்களது வீட்டில் உள்ள சிலிண்டரின் Expiry Date – ஐ சரி பார்த்துக் கொள்ளவும்)courtesyct
======================================================
-- 
with sincere regards,
u.thirumalaikumarsamy,
Coimbatore

 
சிந்திப்போம்  சிந்திக்க வைப்போம்                               
யாருக்கும் துன்பமளிக்காமலும் முடிந்தவரை
பிறர் துன்பம் போக்கியும் வாழ்தல்
இன்பமான எதிர்காலத்திற்கு  வழி

சனி, 3 டிசம்பர், 2016

AIBSNLPWA விழுப்புரம் பகுதி-கடலூர் மாவட்டம் 4-ம் ஆண்டு சிறப்புக்கூட்டம் அழைப்பிதழ்