Translate

வியாழன், 16 மார்ச், 2017

மகளிர் தினவிழா  AIBSNLPWA சிதம்பரம்,கடலூர்

சிதம்பரம்


சிதம்பரம் பகுதி மாதாந்திரக் கூட்டம் 7-3-2017 அன்று மகளிர் தினவிழாவாக AIBSNLPWA ஓய்வூதியர்  சிதம்பரம் அலுவலகத்தில் தோழர் இஸ்மாயில் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது
சிதம்பரம் பகுதி பொறுப்பாளர் தோழர் ஜெயக்குமார்வரவேற்புரை நிகழ்த்தினார்.. 20தோழியர்கள் ,25 தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
மகளிர் தின முக்கிய நிகழ்வாக தோழர் K.சந்திரமோகன் (மா.து.த), P.ஜெயராமன் (மா.உ.செ.) கடலூர் இருவரும் பெண்ணின் பெருமையையும்,அவர்களை சரி நிகர் சமானமாக நடத்த வேண்டும் என்பதையும் பெண் உரிமை,அவர்களின் வளர்ச்சி ஒரு உன்னதமான சமுதாயத்தை உருவாக்கும் என்றுக்கூறி உரை ஆற்றினர். சங்க  அண்மை நிகழ்வுகளையும்,78.2 நிலுவை சம்பந்தமான செய்திகளையும் விவரித்தனர்.
78.2 நிலுவை விரைவாக கிடைக்க நமக்கு உதவியாய் இருந்த தலைமை தபால் அலுவலக தபால் அதிகாரி செந்தில்குமார் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.
70 அகவை முழுமை அடைந்த தோழர் தட்சிணாமூர்த்தி அவர்களை வாழ்த்தி, பாராட்டி பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.

தோழியர்கள் சார்பாக பத்து நாற்காலிகள் AIBSNLPWA ஓய்வூதியர்  சிதம்பரம் அலுவலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. தோழியர்களுக்கு நன்றி.

கடலூர்



 கடலூர் பகுதி மாதாந்திரக் கூட்டம் 11-3-2017 அன்று மகளிர் தினவிழாவாக கடலூர் BSNL வாடிக்கையாளர் சேவைமைய வளாகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது

கடலூர்  மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைமை தோழியர் V.விஜயலட்சுமி தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார்.

கடலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் G.அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.





மகளிர் தின முக்கிய நிகழ்வாக தோழியர் ஷபினா B.A B.L மற்றும் தோழியர் ஆதிலட்சுமி சிறப்புரை ஆற்றி மகிழ்வித்தது குறிப்பிட தக்கது.
தோழர்கள்,  சாந்தகுமார் (DGM FIN) கடலூர் பகுதி தலைவர்,
            K.இளங்கோவன் (மா.த.) கடலூர்
            N.திருஞானம்  (மா.செ.) கடலூர்
            P.ஜெயராமன் (மா.உ.செ.) கடலூர்
ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.

தோழியர்கள்,    செல்வரசுமேரி,
                சுல்தாபிவி (AGM RETD)
                ராஜம் SDE நெய்வேலி (RETD)
ஆகியோர் மகளிர் தின சிறப்பு பற்றியும்,ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதனை படைத்துவரும் மகளிரின் திறமையினை போற்றி அவர்களை வீட்டிலும்,வெளியிலும் கவுரமாக நடத்தி பாரதி கண்ட பெண்ணாக வளர்க்கவேண்டும் என்று உரையாற்றினர்.

20தோழியர்கள் ,55 தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்திற்கு வந்த அனைத்து மகளிருக்கும்  பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.





பிப்ரவரியில் பணிஓய்வு பெற்ற இளங்கோவன் SDE நெல்லிக்குப்பம் ஆயுள் சந்தா அளித்து முதன் முதலாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் கைத்தறி ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

இந்த கூட்டத்தின் உணவு செலவுகளை ஏற்றுக்கொண்ட தோழியர் சரோஜா பிச்சபிள்ளை அவர்களை மாவட்ட சங்கம் வாழ்த்தி கைத்தறி ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

நிறைவாக தோழியர் ஜானகி தண்டபாணி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
                




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக