Translate

திங்கள், 7 நவம்பர், 2016

AIBSNLPWA விழுப்புரம் பகுதி மாதாந்திரக்கூட்டம் 6-11-2016







தோழர் வீரராகவன் தலைமையில் AIBSNLPWA விழுப்புரம்  பகுதி மாதாந்திரக்கூட்டம் 6-11-2016 அன்று சிறப்பாக நடந்தேறியது.70 ஓய்வூதியர்கள் 15 மகளிர் கலந்துக் கொண்டனர்.

மறைந்த தோழர்கள் பரங்கிபேட்டை ஜலீல்,யசோதா அம்மாள் (திருமதி கோதையின் தாய்) EX.ARMY ராம்கிஷன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தோழர் வீரமணி  விழுப்புரம்  பகுதி செயலர்ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட சங்க செயலர் தோழர் NT நாம் எவ்வாறெல்லாம் நம் உறுப்பினர்களுக்கு காலத்தே சேவை செய்து அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நாம் எல்லோரும் இணைந்த கரங்கள் கொண்டு நமக்கு நாமே செயலாற்றுகிறோம் என்பதை எடுத்துரைத்தார்.

தோழியர் விசாலாட்சி கண்ணையன் அவர்களுக்கு 7th CPC – DOT நிலுவை பெற்று தந்ததை கூறினார்.

நமது உறுப்பினர்களின் எதிர்பாரா நிகழ்ச்சிகளின் போது குடும்ப ஓய்வூதியர்களின் குடும்பத்தினருடன் இருந்து நாம் நம் பங்களிப்பான குடும்ப நல நிதியை அளிப்பதையும்,மருத்துவ பில்களை முறையாக விண்ணபித்து அவர்களுக்கு உதவி செய்து வருவதையும்,குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கும் வருடாந்திர ஆயுள் ஆவணங்கள் செய்ய வேண்டியதை நினைவுறுத்தியும்,என நாம் பல்வேறு நிலைகளில் இடர்பாடு இல்லா வாழ்க்கைக்கு நாம் ஒரு கருவியாக இருப்பதை எடுத்துரைத்து உரையாற்றினார்.

ஆயுள் சந்தா செலுத்தி நம்மோடு இணைந்த தோழர்கள் 1. மரியசவுரி முகையூர்,
2.கலைவாணி சாமுவேல் விழுப்புரம்,3.இந்திரா மூர்த்தி விழுப்புரம்,மகாலட்சுமி வைத்திலிங்கம் விழுப்புரம்,4.அ.முனுசாமி விழுப்புரம், 5.C.ஆரோக்கிய தாஸ் அறம்கண்டநல்லூர் – இவர்களுக்கு பொன்னாடை போற்றி கவுரவிக்கப்பட்டனர்.

வரும் டிசம்பர் 5 அன்று விழுப்புரம் பகுதி நானாம் ஆண்டு விழா நடத்த இருப்பதையும், விழாவிற்கு தோழர் சுகுமாரன் STR மாநில உதவித்தலைவரை சிறப்பு பேச்சாளராக அழைக்க இருப்பதையும் தோழர் வீரமணி  விழுப்புரம்  பகுதி செயலர் கூறினார்.
விழா சிறப்பாக நடத்த வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.

மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S.செல்வரசுமேரி,P.கலிவரதன் விழா மண்டப வாடகையை தங்கள் சார்பில் எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர்.

தோழர் ராஜபத்மனாபன் விழாவிற்கு வரும் சிறப்பு உறுப்பினர்களுக்கான பொன்னாடை முழுச் செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

தோழர்கள் அரிக்கிருஷ்ணன் ஆண்டு விழா தேநீர் செலவை  ஏற்றுக்கொள்வதாகவும்,
நன்கொடையாக அண்ணாமலை ரூ 3000,வீராசாமி ரூ1000-யும் அளித்தனர்.

தோழர் துரைபாபு நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக