31-12-2014 அன்று பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்
1.R.ஜெகன்னாதன் உதவி பொதுமேலாளர்
2.P.மீனா சீனியர் டெலிபோன் சூபர்வைசர்
3.R. ஹரிசிங் தொலைபேசி இயக்குனர்
இவர்களுக்கு பணிஓய்வு பாராட்டு விழா திரு சாந்தகுமார் துணை பொதுமேலாளர்-நிதி தலைமையில் ஆலோசனை கூட்ட அரங்கு கடலூர் மைய தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடந்தது,
திரு மகேஷ் உதவி பொதுமேலாளர்-நிர்வாகம் தொகுத்து வழங்கி சிறப்பாக நடத்துவித்தார்.
திருமதி அபர்ணா துணை பொதுமேலாளர்-நிர்வாகம், திரு ஞானசேகரன் துணை பொதுமேலாளர்- CM கலந்துக்கொண்டு வாழ்த்தினர்.
உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார்.
ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டுநீள்
ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன்
என்று வாழ்த்துகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக