நமது தலைவர்கள் தோழர்கள்
D.கோபாலகிருஷ்ணன்,
G.நடராஜன் அவர்களுக்கு
சென்னையில் பாராட்டு விழா - 15-2-2014
Website:- aibsnlpwacuddalore.blogspot.in Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310 மலர் 52
நமது தலைவர்கள் D.கோபாலகிருஷ்ணன்,G.நடராஜன் அவர்களுக்கு
சென்னையில் 15—2-2014 அன்று மாலை 3 மணியிலிருந்து , 7 மணி வரை மிக சிறப்பான பாராட்டுக் கூட்டம் நாயக் பவனில்
நடத்தப்பட்டது.நமது மாநிலத்தலைவர் தோழர் K.முத்தியாலு , தோழர் மூர்த்தி சென்னை
தொலைபேசி தலைவர் இருவரும் இணைந்து தலைமை தாங்கி கூட்டத்தினை நடத்திக் கொடுத்தனர். சென்னை தொலைபேசி செயலர் தோழர்
M.கோவிந்தராஜன், நமது மாநிலச்செயலர் தோழர் V.ராமாராவ் இருவரும் நமது ஓய்வூதியர்
சங்கம் செய்துக் கொண்டிருக்கும் சேவைகளை நினைவு கூர்ந்து உலக ஓய்வூதியர்களுக்கும்,
60
வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களுக்குமான ஒரு பலமான கட்டமைப்பினை WFTU அமைக்க நமதுச்
சங்கத்திற்கு ஆசியாவிற்கான செயலர் பதவி கொடுக்கப்பட்டதை பெருமையுடன் எடுத்து
உரைத்தார்கள்.
நமது
மாநில பொருளாளர் திரு கவுஸ்பாட்சா நமது தலைவர்கள் D.கோபாலகிருஷ்ணன்,G.நடராஜன் அவர்களுக்கு
சென்னை விமான நிலையத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பின் சிறப்பை
மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.K.ரவீந்திரன்
தலைவர் கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொண்டார்.தோழர்கள்
கண்ணப்பன்,விட்டோபன்(சென்னை தொலைபேசி)மற்றும் தோழர் J.ரங்கநாதன் மகிழ்ச்சியுடன்
வாழ்த்துக்களை தெரிவித்தனர். தலைவர்கள் D.கோபாலகிருஷ்ணன்,G.நடராஜன் இருவரும் தங்கள் அனுபவங்களை மகிழ்சியுடன்
பகிர்ந்துக்கொண்டனர். தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்கள் WFTU உலக
ஓய்வூதிர்களின் நலனுக்காக பார்சிலோனாவில் நடந்த விவாதங்களையும்,முடிவுகளையும்,நமது
பொறுப்புக்களை பற்றியும் விரைவில் ஒரு புத்தகம் வெளியிடபோவதாக அறிவித்தார்.
பொதுவாக பெருபாலோர் நாம் துறையில் அலுவல் செய்தபோது நமது மக்கட் செல்வங்களை நேரமின்மையால் சரியாக கவனிக்காமல் விட்டவர்கள் இன்று பேரப்பிள்ளைகளையும்,வாழ்க்கை துணையையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்திலும்,பொறுப்பிலும் இருப்பதை நமது மாநிலத்தலைவர் தோழர் K.முத்தியாலு அவர்கள் சுட்டிக் காட்டினார்.
இரு
தலைவர்களும் அவர்களது குடும்ப பளுவினால் செயலர் பதவியை எடுக்க தயங்கிய போதும் தோழர்
ராமன் குட்டி தொடங்கி எல்லா தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏகோபித்த முடிவாக தோழர்
D.கோபாலகிருஷ்ணன் ஆசியாவின்
செயலராக சம்மதம் தெரிவித்த செய்தியை எல்லோரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்
கொண்டனர்.
அவை
நிரம்பிய கூட்டம் உற்சாகத்துடன் கூட்டம் முடியும் வரை காத்திருந்து தங்களது
மகிழ்ச்சியையும்,பாராட்டுக்களையும்
தலைவர்களுக்கு தெரிவித்தனர்.சமீபத்தில் நடந்த கூட்டங்களில் வெகு சிறப்பான கூட்டம் என்றால் சற்றும் மிகையாகாது.
நன்றி
கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக