Translate

வியாழன், 16 மே, 2013


மலர் 10 

22-5-2013 இல்   நடக்க   இருக்கும்    தர்ணாவும்   

முக்கிய   நிகழ்வுகளும்


                                  Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
Email: aibsnlpwacuddalore@gmail.com
Website:-  aibsnlpwacuddalore.blogspot.in  LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE   PTI     STR    TVL    KOVAI


22-5-2013 அன்று காலை 10 மணிக்கு தர்ணா, BSNL பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக கீழ்கண்ட கோரிக்ககைகளுக்காக நமது அனைத்திந்திய சங்கத்தின் அறைகூவலுக்கு இணங்க நடக்க இருக்கின்றது..அனைத்து உறுப்பினர்களும் கலந்துக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கின்றோம்.

கோரிக்ககைகள்

1.பென்ஷன் முரண்பாடுகளை தீர்க்கக்கோரி
2.ரசீது இன்றி பழைய முறையில் மருத்துவ படி அளிக்கக்கோரி-

உறுப்பினர்கள் வரும்போது PPO,வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கின்  ஜெராக்ஸ் நகல் எடுத்துக் கொண்டு வந்து சரியான  பென்ஷன் போடப்படுகிறதா ? என்பதை உறுதி செய்துக் கொண்டு செல்லவும்.DOT ஓய்வூ தியர்கள்களுக்கு குறைந்த பட்ச சம்பள விகிதத்தில் உள்ளவர்களுக்கு சற்று அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது.அதை நாம் கேட்காமலேயே எல்லோருக்கும் சரியாக போடப்படும் என்று CCA TN இல் கூறியுள்ளனர்.ராணுவத்திலும், சிவிலிலும் பணி புரிந்த  குடும்ப ஓய்வூதியர்கள்களுக்கு இரண்டு பென்ஷன் கிடைக்கும்.அவர்களை சைனிக் அலுவலகம் வழியாக அனுப்ப சொல்லியிருக்கின்றனர்.எல்லாவற்றையும் நேரில் தெளிவாக புரிந்துக் கொண்டு மற்றவர்களுக்கும் உதவுமாறு வேண்டுகின்றோம்.


ஜனவரி.2013.முதல் அரசு.ஊழியர்கள், ஓய்வுதியர்கள்களுக்கு. 8%. CDA. வழங்க. மத்திய.ஒப்புதல்.அளித்துள்ளது ஜனவரி.2013. முதல் CDA. 72%.ல்.இருந்து.80%.,ஆகும்.

நமக்கு 1/4/2013 முதல் உயர்ந்த IDA 3.4%  வை சேர்த்து IDA 74.9%  ஆகிறது.

 நமது மாநிலச் செயலர் தோழர் ராமாராவ் அவர்களுக்கு விருது

லட்சுமி நகர் நலச் சங்கத்தில் சிறந்த சமூக சேவை செய்தர்க்கான விருதும்,நங்கை கல்வி அறக்கட்டளை சேவைக்காகவும்,அகில இந்திய ஒய்வு பெற்றோர் நலச்சங்க சேவைக்காகவும் நமது மாநிலச் செயலர் தோழர் ராமாராவ் அவர்களுக்கு 20-1-2013 அன்று வாணி மகாலில் விருது வழங்கி வாழ்த்தினர்.நமது சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

மத்திய.சங்கத்திற்கு.கிடைத்த.வெற்றி.


மத்திய.பிரதேச.மாநிலம்.ஜபல்பூரில்.1976.ல்.

SSTT.ஓய்வு.பெற்றார்.1981.ல்.காலமானார்.

பின்பு.மனைவிக்கு.குடும்ப.ஓய்வூதியம்.வழங்கப்பட்டது.
அவரும்.2007.ல்.காலமானார்.

அவர்களுக்கு.கல்யானமாகாத.3.பெண்.குழந்தைகள்.
மூத்தவருக்கு.வயது.67.

புதிய.பென்ஷன்.விதிப்படி.அவர்.குடும்ப.பென்ஷன்.
கேட்டு.விண்ணப்பித்தார்.

மத்திய.பிரதேச.CCA .ஓய்வு.பெற்று.36.ஆண்டுகள்.ஆனவரது.
SERVICE.BOOK.வேண்டும்.என.முடிவெடுக்காமல்.இருந்தது.

நமது.சங்கம்.CAT.ல்.முறையிட்டது.
CCA...2.மாதத்தில்.குடும்பபென்சன். வழங்கவேண்டும்.எனவும்,
காலதாமதத்திற்க்கு.12%.வட்டி.வழங்க.வேண்டுமென.தீர்ப்பளித்தது.

இறுதியில்.CCA.புதிய.PPO.வழங்கி.நிலுவை.தொகை.
Rs.4.32.லட்சம்.வழங்கியது.

ஆனால்.பென்ஷன்.Rs.7560.க்கு.பதில்.Rs.4796.தான்.வழங்கியது.

நமது.சங்கம்.சரியான.பென்ஷன்.கிடைக்க.முயற்சிக்கிறது.

போபாலில்.
குடும்பஓய்வூதியருக்கு.Rs.3.95.லட்சம்.
நிலுவை.தொகை.நமது.சங்கத்தின்.முயற்சியால்.
வழங்கப்பட்டது.

சதிஸ்கர்.
பிடித்தம்.செயயப்பட்ட.COMMUTATAION.தொகையை.
நமது.சங்கம்.முயற்சித்து.Rs.11128.00.வழங்க.உதவியது.

உஜ்ஜயின்.
நமது.சங்கம்.முயற்சித்து.14.குடும்ப.ஓய்வுதியருக்கு.
மறுக்கப்பட்ட.மருத்துவ.படி.வழங்க.உத்திரவிட்டது.

 நன்றி-நெல்லை.மாவட்ட.சங்கம்.
                           

.

எளிய தமிழில் முக்கிய விளக்கங்கள்                   
வருங்காலத்தில் மேலும் சில மத்திய அரசின்   துறைகளை நிறுவனமாகவும் தன்னாட்சிமிக்க அமைப்பாகவும் ஆக்கும் நோக்கோடு மத்திய அரசு பென்சன் திருத்த விதிகளை உருவாக்கி 21-12-2012 அன்று அரசு கெஜட்டில் வெளியிட்டு உள்ளது.


இதன் மூலம் பென்சன் விதிகள் 1972ல் கீழ்க்கண்ட முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விதி 5 துணை விதி  (2) நீக்கப்படுகிறது.
அதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள்/அதிகாரிகள்  VRSல் செல்லுகின்ற  நாள் இனி  வேலை நாளாக (Working Day ) கருதப்படும்.(இது நாள் வரை வேலை நாளாக கருதப்படாததால் அன்று காலையில்( Forenoon) relieve செய்யப்பட்டனர்.)

விதி 29 நீக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு அரசுத் துறை, நிறுவனமாக மாற்றப்படும்போது, அந்த அரசுத் துறையிலேயே தொடர விருப்பம் கொடுப்பவர்கள்  (ITS அதிகாரிகள் DOTக்கு Option தருவது போல)  surplusஆக கருதப்படுவதால்,அவர்கள் விருப்ப ஓய்வில் (Voluntary Retirement) சென்றால்  5 ஆண்டுகள் கூடுதல் சேவையாக கணக்கில் கொள்ளப்பட்டது.  தற்பொது 
அது நீக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, ( ITS அதிகாரிகள்  BSNLக்கு   Option தராமல் DOT க்கு Option தருவது போல)  புதிய நிறுவனத்திற்கு Option தராமல், அரசு சேவையில் தொடர விருப்பம் கொடுப்பவர்களுக்கு  புதிய சலுகை வழங்கப்படுகிறது.அரசு பென்சன் வழங்கப்படுவதோடு புதியதாக சிறப்பு விருப்ப ஓய்வுத் திட்டம் Special VRS அமலாக்கப்படும். Ex-gratia வழங்கப்படும்.

BSNL போல   Doordharshan  ஊழியர்க்கும் பென்சன் பாதுகாப்பு ! கார்ப்பரேஷன் ஆகும்போது மற்ற அரசு நிறுவனங்களுக்கு Pension Fund உருவாக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படும்.ஆனால்   BSNL ஊழியர்க்கு மட்டும், மத்திய அரசே, தனது Consolidated Fundலிருந்து பென்சன் வழங்கும் என்ற பாதுகாப்பு, பென்சன் ரூல்ஸ் 37A sub Rule 22 மூலம் உறுதி செய்யப்பட்டது.

அதேபோலஅரசுத் துறை  (Autonomous Body)  தன்னாட்சிமிக்க அமைப்பாக மாற்றப்பட்டால் அதன் ஊழியர்க்கு Pension Fund  உருவாக்கப்பட்டு              அதிலிருந்து பென்சன் வழங்கப்படும் என்ற பொதுவான  விதி  Rule 37B மூலம் உருவாக்கப்பட்டு 21-12-12 அன்று அரசு கெஜட்டில் வெளியாகி உள்ளது
இதில் BSNL ஊழியர்போல ஆகாஷ்வாணி, தூர்தர்ஷன் ஊழியர்க்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. (அந்த பகுதி ஊழியர்களின் சமரசமற்ற போராட்டம் காரணமாக)   

நன்றி.கோவை.NFTE -BSNL.இணையதளம்.    


நமது மாநிலச் செயலர் தோழர் ராமாராவ் அவர்கள், உதவிச் செயலர் S .காளிதாஸ் அவர்களுடன் தலைமை தபால் பொது மேலாளர் சென்னை அலுவலகத்தில் Director HQ, ஐ சந்தித்து IDA போடுவதில் இருந்த தாமதத்தை நீக்க கோரினர்.மதிப்பிற்குரிய சாந்தா நாயர் CPMG  விடுமுறையில் இருந்ததால், CPMG கர்நாடகா (தற்காலிக பொறுப்பு) முன்னமே அனுப்பியிருந்த DPE  உத்தரவினால் விரைவில் கிடைக்கும் என்று கூறினார்.உடனே கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்த மாநிலச் சங்கத்திற்கு நன்றி.
பென்ஷன் அதாலத்
பென்ஷன் அதாலத் சென்னையில் 14.6.13 at 14.00 PM  அன்று நடக்க இருக்கின்றது.நமது கடலூர் மாவட்டச் சங்கத்திலிருந்து நீண்ட காலமாக தீர்க்கபடாத  உறுப்பினர்களின் பிரச்சனைகளை நமது உறுப்பினர்கள் நமது ஆலோசனைகளின் பேரில் அனுப்பியுள்ளனர்.இந்த அதாலத்தில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

BON VOYAGE 
நமது தலைவர் தோழர் முத்தியாலு அவர்களும் தோழர்  நரசிம்மன் அவர்களும்  ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று உள்ளனர். 5 ஜுன்   2013 அன்று சென்னை திரும்ப உள்ளனர்.மகிழ்ச்சியான அனுபவங்களுக்கு நமது வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக