Translate

புதன், 1 ஜூன், 2016

                                       RETIREMENT ON 31-5-2016

                      Com.J. Vasuki, SS, Cdl ( Retired to day on ( VRS)

OTHER PHOTOS....Thank you Sri RVJ































திங்கள், 2 மே, 2016

கண்ணீர்  அஞ்சலி
கடலூரின் மூத்த தொழிற்சங்கத்தலைவர் D.ரெங்கநாதன் மறைவுக்கு AIBSNLPWA நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் அஞ்சலி



நமது உறுப்பினர்களுடன் DR




தமிழ் மாநில NFTE சங்கத்தின் வித்து தோழர் சிரில் அவர்களின் அணுக்க வாரிசாக திகழ்ந்தவர்.துறை,தொழிற்சங்கம் இரண்டு 
பணிகளிலும் துல்லியத்தைப் போதித்தவர்.எதிலும் கறார்தன்மை 

என்பது அவரது பண்பு.நேர்மையாளர்.ஒழுக்கச்சீலர்.லைன் ஸ்டாப் 

ஊழியர்களின் பாதுகாவலர்.கடலூர் மாவட்டத்தில் நமது அமைப்பை பேரமைப்பாய் உருவாக்கியதில் தோழர் ரகுவுடன் இணைந்து 

செயலாற்றியதில் இருவரும் இரட்டையர் என போற்றப்பட்டனர்.

...தோழர் ஜெயராமன் nfte தலைவர்


தோழர் ரங்கநாதன் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 
என்னுடன் நீண்ட வருடங்கள் நட்பு பாராட்டியவர். 
தொழிற்சங்க கருத்துக்கள் எங்களிடையே சண்டை மூட்டிய காலமும் உண்டு.  சண்டை சங்கத்தில். நட்பு மாறியது இல்லை. 
அந்த அளவுக்கு எங்கள் நட்பு இருந்தது. 
அந்த நண்பர் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 
வாழ்க அவர் புகழ்
...தோழர் B.திருநாவுக்கரசு AIBSNLPWA கடலூர்


செவ்வாய், 12 ஏப்ரல், 2016

கடலூர் AIBSNLPWA  மாவட்டச்செயற்குழுக்கூட்டம் 9-4-2016
செயற்குழு உறுப்பினர்கள் கடலூர் பகுதி தோழர்கள் கலந்துக் கொண்டனர்.
தோழர் KVR தலைமை தாங்கி கூட்டத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
தோழர் சந்திரமோகன் செயலர் மாவட்டத்தின் தற்போதைய நிலைமையை   எடுத்துரைத்தார்.ஆயுள் சந்தா தற்போது 460 உறுப்பினர்களை கொண்டுள்ளதையும்,ஓரிரு மாதங்களில் 500 இலக்கு நிர்ணயித்து செயல் படுவதையும் நமது உறுப்பினர்களின் பங்களிப்போடு இது நிறைவேறும் என்றுரைத்தார்.
ஜூன் 13-இல் நமது ஐந்தாவது மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.ரூ 300 குறைந்த பட்ச கொடையாக ஒவ்வொரு உறுப்பினறிடமிருந்தும் வசூல் செய்ய வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

தோழர் NT நிதி நிலைமை பற்றி தெரிவித்தார்.
மாவட்ட மாநாடு வரவேற்பு குழு தலைவராக KVR, செயலராக KCM அவர்களும்,உறுப்பினர்களாக G.அசோகன்,N.செல்வராஜ்,S.ஹாஜா கமாலுதீன்,D.தியாகராஜன்,J.வெற்றி,H.இஸ்மாயில் மரைக்காயர்,S.துரைசாமி,S.நாராயணசாமி,M.வடிவழகன்,L.ஜெகன்னாதன் இவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட மாநாடு உணவுக்குழு தலைவராக NT , உறுப்பினர்களாக  T.ராமலிங்கம்,P.நாராயணன்  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட மாநாடு பரிசு குழு G.அசோகன்,S.ஹாஜா கமாலுதீன் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர் NT அவர்கள் நன்றிக் கூறினார்.
மாலை கடலூர் பகுதி மாதாந்திர கூட்டம் சிறப்பாக நடந்தேறியது.






சனி, 26 மார்ச், 2016

              2016 - மாரச் மாதத்தில் பணி ஒய்வு பெற்ற  நமது தோழர்கள்