Translate
ஞாயிறு, 8 டிசம்பர், 2013
சனி, 7 டிசம்பர், 2013
நெல்சன் மண்டேலா – தென் ஆப்ரிக்கா தேச தந்தை மறைவு
அஞ்சலி
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
மலர் 30
தோற்றம்:18-7- 1918 மறைவு:6-12-2013
இவர்
தென் ஆப்ரிக்காவின் தேசிய இனங்களில்
ஒன்றில் அரச குடும்பத்தில் இருந்தவர்.
முறையான கல்வி பெற்று நாட்டின் சூழ்நிலைகளை புரிந்துக்கொண்டார்.
இனவெறி ஆதிக்கத்தை எதிர்த்து தேசிய இனங்களின் மக்களை திரட்டி
பொதுஉடைமை கட்சி ஊழியர்களுடன் சேர்ந்து ஆதிக்க வாதிகளை எதிர்த்து போராடியவர்.
MK (SPEAR OF THE NATION) என்ற ஒரு மக்கட்
படைக்கு தளபதியாய் ஈட்டி முனைபோல்
செயல் பட்டார்.
ஆரம்பத்தில் ஆயுதமேந்தி போராடவேண்டிய சூழ்நிலை இருந்தபோதும் அமைதி வழியே
இறுதியில் சமூகத்திற்கு நலன் பயக்கும் என்று அண்ணல் காந்தி அடிகளை பின்பற்றினார்.
27 வருடங்கள் கடும் சிறையில் வாடியும் தனது குறிக்கோளில் பின்வாங்கவில்லை.
ANC என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் தனிப்பெரும் தலைவராய் திகழ்ந்தார்
மனிதநேயம் கொண்டு அனைத்து மக்களுடன் சமாதானமாக இருந்து நாட்டின்
வளர்ச்சியே தனது குறிக்கோளாக கொண்டார்.
இறுதியாக 1994 இல் நாட்டின் தலைமை பதவியையும் பெற்று நல்லாட்சி தந்தார்.
தேசிய இனங்களையும்,வெள்ளையரையும் ஒற்றுமை படுத்தினார்.
நமது நாட்டின் பாரதரத்னாவையும்,சமாதனத்திற்கான 1993 இல் நோபல்பரிசையும்
சேர்த்து
250 பரிசுகளை பெற்றார்.
தேசிய இனங்களின் பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களுக்கே திரும்ப வாங்கிகொடுத்தார்.
நாட்டின் கல்வி,சுகாதாரம்,சமூக நீதியை நிலை படுத்தி மேம்படுத்தினார்.
அடிமைப்பட்ட மண்ணின் மைந்தர்களை கௌரவமாக வாழ வகைச் செய்தவர்.
அவர் மறைந்தாலும், அவரது எண்ணங்கள்,செயல்பாடுகள் நல்லோரை உருவாக்கும்.
வாழ்க நெல்சன் மண்டேலா
அவரது படைப்புக்கள்:
Long Walk to Freedom" (autobiography) (English)
"Nelson Mandela
Speaks: Forging a Democratic, Nonracial South Africa" (English)
புதன், 4 டிசம்பர், 2013
பணி ஒய்வு பாராட்டுவிழா 30-11-2013
|
Website: aibsnlpwacuddalore.blogspot.in Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999
|
| நமது GM BSNL கடலூர் கான்பரன்ஸ் அரங்கத்தில் பாராட்டுவிழா |
| தோழர் N.நாகராஜன் SDE அவர்களுக்கு நமது பொருளாளர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். |
| தோழர் உஸ்மான் SDE அவர்களுக்கு நமது மூத்தத்தோழர் நீலகண்டன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். |
நீள் ஆயுளும் நிறைசெல்வமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.
குழந்தைகள் தின விழா 2013
குழந்தைகள் தினத்தை ஒட்டி கடலூர் பாரதிதாசன் இலக்கிய மன்றம் மற்றும் அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி அருங்காட்சியகத்தில் 21-11-2013 அன்று நடந்தது.6 பள்ளிகளில் இருந்து 80 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.திரு கடல் நாகராஜன் தலைவர் கடலூர் பாரதிதாசன் இலக்கிய மன்றம் தலைமை தாங்கினார்.அருங்காட்சியகம் காப்பாட்சியர் பிராபகரன் வரவேற்றார்.நமது நிர்வாகிகள் N.திருஞானம்,திருநீலகண்டன் ,K.ரவீந்திரன் மற்றும் கணபதி அவர்களும் வாழ்த்திப் பேசினர். வெற்றி பெற்ற 20 மாணவர்களுக்கு நமது சங்கத்தின் தலைவர் K.ரவீந்திரன் பரிசளித்து கௌரவித்தார்.அரசு அருங்காட்சியக மாதிரி கலைஞர் நன்றி கூறினார்.
விருத்தாசலம் பொதுக்குழுக்கூட்டமும்
24-11-2013
Website: aibsnlpwacuddalore.blogspot.in Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999
நமது மாவட்ட செய்தி மலர் கடலூர் கதிர் வெளியீடும் .விருத்தாசலம் பொதுக்குழுக் கூட்டமும்24-11-2013 அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் மக்கள் மன்றம்,பாத்திமா
அன்னை ஆலய வளாகத்தில் நமது மாவட்டத்தின் அனைத்து பகுதி உறுப்பினர்களின் பங்கேற்புடன் வெகு சிறப்பாக தொடங்கியது.
| நமது விழுப்புரம் தோழர் வெற்றி நமது மாநில செயலர் K.முத்தியாலு அவரிடம் நமது கடலூர் கதிர் முதல் இதழை அளிக்க ,அவர் வெளியிட்டார |
| தேசிய, சங்க கொடியேற்றம் |
| ஆர்வமுடன் கலந்துகொண்ட முன்னணி தோழர்கள் |
| விருத்தாசலம் விழாக்குழுவினர் தோழர்கள் கலியன்,நாராயணசாமி,ஜெகன்னாதன் நமது மக்கட்தலைவர் P.ஜெயராமன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர். |
தோழர் N.திருஞானம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர்.
| தோழர் N.பாலகிருஷ்ணன்( கவிஞர் பால்கி) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர். |
முன்னணி தோழர் லாரன்ஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
நமது மாநில செயலருடன் முன்னணி தோழர் கள்.
| தினகரன் 26-11-13 செவ்வாய் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

