Translate

சனி, 7 டிசம்பர், 2013


நெல்சன் மண்டேலா – தென் ஆப்ரிக்கா தேச தந்தை மறைவு

அஞ்சலி
Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

மலர் 30
                    LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI     STR   TVL    KOVAI



தோற்றம்:18-7- 1918           மறைவு:6-12-2013

இவர்
தென் ஆப்ரிக்காவின் தேசிய இனங்களில் ஒன்றில் அரச குடும்பத்தில் இருந்தவர்.
முறையான கல்வி பெற்று நாட்டின் சூழ்நிலைகளை புரிந்துக்கொண்டார்.

இனவெறி ஆதிக்கத்தை எதிர்த்து தேசிய இனங்களின் மக்களை திரட்டி 

 பொதுஉடைமை கட்சி ஊழியர்களுடன் சேர்ந்து ஆதிக்க வாதிகளை எதிர்த்து போராடியவர்.

MK (SPEAR OF THE NATION) என்ற ஒரு மக்கட்  படைக்கு தளபதியாய் ஈட்டி முனைபோல்  

செயல் பட்டார்.

ஆரம்பத்தில் ஆயுதமேந்தி போராடவேண்டிய சூழ்நிலை இருந்தபோதும் அமைதி வழியே 

இறுதியில் சமூகத்திற்கு நலன் பயக்கும் என்று  அண்ணல் காந்தி அடிகளை பின்பற்றினார்.

27 வருடங்கள் கடும் சிறையில் வாடியும் தனது குறிக்கோளில் பின்வாங்கவில்லை.

ANC என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் தனிப்பெரும் தலைவராய் திகழ்ந்தார்

மனிதநேயம் கொண்டு  அனைத்து மக்களுடன் சமாதானமாக இருந்து நாட்டின் 

வளர்ச்சியே தனது குறிக்கோளாக கொண்டார்.

இறுதியாக 1994 இல் நாட்டின் தலைமை பதவியையும் பெற்று நல்லாட்சி தந்தார்.

தேசிய இனங்களையும்,வெள்ளையரையும் ஒற்றுமை படுத்தினார்.

நமது நாட்டின் பாரதரத்னாவையும்,சமாதனத்திற்கான 1993 இல் நோபல்பரிசையும் சேர்த்து 

250 பரிசுகளை பெற்றார்.

தேசிய இனங்களின் பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களுக்கே திரும்ப வாங்கிகொடுத்தார்.

நாட்டின் கல்வி,சுகாதாரம்,சமூக நீதியை நிலை படுத்தி மேம்படுத்தினார்.

அடிமைப்பட்ட மண்ணின் மைந்தர்களை கௌரவமாக வாழ வகைச் செய்தவர்.

அவர் மறைந்தாலும், அவரது எண்ணங்கள்,செயல்பாடுகள் நல்லோரை உருவாக்கும்.

வாழ்க நெல்சன் மண்டேலா

அவரது படைப்புக்கள்:
  Long Walk to Freedom" (autobiography) (English)

"The Struggle Is My Life" (English)

"Nelson Mandela Speaks: Forging a Democratic, Nonracial South Africa" (English) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக