கடலூர் தோழர்கள் மாதாந்திர கூட்டம்
மலர் 39
29-12-2013
Website:-
aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
தலைவர் K.ரவீந்திரன் |
கவிஞர் பாலகிருஷ்ணன்(பால்கி) |
29-12-2013 அன்று மாலை 03-00 மணி அளவில் நமது கடலூர் தோழர்கள் சார்பாக முதல் மாதாந்திர
கூட்டம் வெகு சிறப்பாக நடந்தது. கடலூர் பகுதி தோழர்கள் பெருவாரியாகவும்
,மொத்தம் 60 தோழர்கள் விழுப்புரம்,சிதம்பரம்,திண்டிவனம்,புதுச்சேரி
ஆகிய பகுதிகளில் இருந்தும் கலந்துக்கொண்டனர்.
மூத்ததோழர் K. நீலகண்டன் தலைமை தாங்கினார்.
தோழர்N. திருஞானம் தொகுத்து வழங்கினார்.
தோழர் அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முதலில்
அஞ்சலி கீழ்கண்டவர்களுக்கு செலுத்தப்பட்டது.
1.தென்னாப்ரிகாவின் மாபெரும்
தலைவர் நெல்சன் மாண்டேலா
2.முன்னாள் T III உதவிச்செயலர் T,S ராஜன்.
3. நமது மத்திய அமைச்சர் திரு
நாராயணசாமி அவர்களின் துணைவியார்.
4.கடலூர் தோழர் s.கேப்ரியேல்
5.செஞ்சி தோழர் வடிவழகனின் மகள்.
6.பெண்ணாடம் தோழர் ராதாகிருஷ்ணன் அவர்களின் துணைவியார்.
7.கடலூர் தோழர் பலராமன் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி.
புதுச்சேரியில் இருந்து நமது
சங்கத்தின் புதிய தலைவர் அன்பழகன் நமது அழைப்பை ஏற்று சிறப்பித்து நாம் ஏன் இந்த சங்கத்தில்
இருக்க வேண்டும்,தான் ஏன் சேவையில் இருந்தபோது இருந்த சங்கத்தில் இருந்து நம்
சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பதினை விளக்கினார். தோழர்கள் B.துரைபாபு விழுப்புரம், பகுதியில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி ஓராண்டாக வெற்றிகரமாக நடப்பதையும், உறுப்பினர்களுக்கு எவ்வாறு உதவிகரமாக உள்ளது என்பதினை விளக்கி கூறினார்.
வெளியூர் தோழர்களுக்கு கடலூர் தோழர்கள் சார்பாக பொன்னாடைப் போற்றி கவுரவிக்கப்பட்டது.
செயலர்
தோழர் K.வெங்கடரமணன்,தலைவர் ரவீந்திரன்,தோழர் P.ஜெயராமன் உதவிச்செயலர்,தோழர்N. திருஞானம் ,S.துரைசாமி மாவட்ட உதவித்தலைவர்,சிதம்பரம் ஜெயகுமார்,வெங்கடாசலம்,N.செல்வராஜ்,வள்ளிநாயகம்,T.பொன்னுசாமி,வேணுகோபால்,ராமநாதன்,G.வேலாயுதம் எல்லோரும் நிகழ்வுகளையும்,இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறையாவது பார்த்துக்கொள்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது என்பதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.
மூத்தமுதுபெரும் போஸ்டல் ஓய்வூதியர் தோழர் G.வெங்கடாசலம் நம்மை வாழ்த்தி பேசினார்.
தோழியர் விஜயலட்சுமி அமைப்பு சாரா வறுமை கோட்டிற்கு கீழ் வரும் தகுதிக்குட்பட்ட ஏழை எளியவர்களுக்கு தமிழகம்,ஒரிசா இவற்றில் மட்டும் ரூபாய்2000 உதவித்தொகையாக வழங்கபடுகின்றது, மற்ற மாநிலங்களில் ரூ 1000 திற்கு கீழ் மட்டுமே வழங்க படும் அவல நிலையினை எடுத்துரைத்து,நமது பென்ஷன் பாதுகாப்பிற்கு நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று படவேண்டும் என்றுரைத்தார்.
கவிஞர் பாலகிருஷ்ணன்(பால்கி) மாபெரும் தலைவர் மாண்டேலா,நமது T.S ராஜன் முன்னாள் T3 தலைவர் இவர்கள் எவ்வாறு எல்லாம் தியாகம் செய்து சமூகத்திற்கு உழைத்தனர் என்பதை எடுத்து கூறி, தற்கால அரசியல்,சமூக நிகழ்வுகளை சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாதாந்திர கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெறும் என்று கூறி இதற்காக 10 பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது.
ஓய்வூதிய மகளிரை அணுகும் ஒரு மகளிர் குழு தோழியர் விஜயலட்சுமி தலைமையில் தோழியர் ஸ்ரீமதி,ராஜேஸ்வரி இவர்களை கொண்டு இனி இயங்கும்.
நன்றியுரை திரு அம்மா சந்திரசேகர் கூற கூட்டம் இனிய நினைவுகளுடன் இனிதே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக