Translate

சனி, 28 டிசம்பர், 2013



AIBSNLPWA தமிழ்நாடு மாநிலச்சங்க செயற்குழுக் கூட்டம்

.மலர் 36
                  Website: aibsnlpwacuddalore.blogspot.in  
Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999


LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai


     AIBSNLPWA தமிழ்நாடு மாநிலச்சங்க செயற்குழுக் கூட்டம் AITUC சங்க கட்டிடம் சென்னை சிந்தாதிரிபேட்டையில் K.முத்தியாலு தலைமையில் 19-12-2013 அன்று காலை 9 மணி அளவில் தொடங்கியது.நமது சங்கத்தலைவர்கள் தோழர் DG,நடராஜன் பொதுச்செயலர்,ராமாராவ் மாநிலச்செயலர் ,மாநில பொருளாளர், மாநிலஉதவித்தலைவர் தோழர் சுகுமாரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றி நமது நிலைமையும்,எதிர்கால திட்டங்களையும் விரிவாக எடுத்துரைத்தனர்.முதல் நாள் எல்லா மாவட்டச் செயலர்களும் தங்களது செயல்பாடுகளையும் உறுப்பினர் எண்ணிக்கை 2011 இருந்து தற்போது வரை தெரிவித்து,வருடாவருடம் செலுத்திய மத்திய மாநில பங்கு சந்தா முதலியவற்றை எடுத்துரைத்தனர்.  



உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய மாநில பங்கு சந்தா இல்லை 

என்பதை தலைமை சுட்டிக் காட்டியது.எல்லாம் சரிசெய்யப்பட்டு 

உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும் 

என்று மாவட்ட செயலர்கள் உறுதி அளித்தனர். பென்ஷன் முரண்பாடுகளை 

தீர்க்க கோரியும்,  78.2% IDA இணைப்பை பென்ஷனர்களுக்கும் அளிக்க கோரியும் நமது 

தலைவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தனர்.

  
     20.12.2013 அன்று காலை 0900 மணியளவில் செயற்குழு கூடியது.எல்லா மாவட்ட நிர்வாகிகளுக்கும் கருத்துரைகள் வழங்க வாய்ப்புக்கள் தரப்பட்ட து.எல்லா மாவட்டங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.அகில இந்திய ரீதியில் 1,00,000 உறுப்பினர் இணைப்பை குறியீடு இலக்காகக்கொண்டு,ஒவ்வொருவரும் ஒரு புதிய உறுப்பினரை சேர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் WFTU விற்கு செல்ல இருக்கும் தலைவர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு,உலக அரங்கில் ஓய்வூதியர்களின் பிரச்னைகளை விவாதிக்க கிடைத்த வாய்ப்பிற்கு எல்லோரும் மகிழ்ச்சித் தெரிவித்தனர். மதியம் 0200 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.

         20.12.2013 அன்று மதியம்  0300 மணிக்கு சென்னையில்  CIRCLE PENSION   ADALATH நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக