Translate

செவ்வாய், 31 டிசம்பர், 2013

Retired but not Tired

மலர் 40

Retired To-day  31-12-2013

P.Jayaraman  SDE O/o GM BSNL Cuddalore

Chandra Swaminathan SSS O/o GM BSNL Cuddalore


Participants who honour and wish

Family of kith and kin of Retiree
GM BSNL Cuddalore along with officers ,Trade union Leaders,Employees and Retirees' family joined
 together honoured and greeted the retirees.Distinguished  participants spoke their services till now and wish them for ever lasting happiness ,prosperity,peace ,and good health.Retirees remembered their happy moments in BSNL and thanked all .AIBSNLPWA Cuddalore honoured them.

AIBSNLPWA Cuddalore  wishes a long, happy and healthy life to all the retirees.

Com.Abhimanyu General Secretary of BSNLEU also retiring today and all friends are greeting at Pondicherry and arranged a meeting.
Abhi worked in our Cuddalore District initially and started his carrier.Happy moments are remembered by the friends who were with him at his youth.
AIBSNLPWA Cuddalore  wishes a long, happy and healthy life .


கடலூர் தோழர்கள் மாதாந்திர கூட்டம் 
மலர் 39
29-12-2013
Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
                                            Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

  LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI           STR   TVL    KOVAI


தலைவர் K.ரவீந்திரன்

கவிஞர் பாலகிருஷ்ணன்(பால்கி)

             29-12-2013 அன்று மாலை 03-00 மணி அளவில் நமது  கடலூர் தோழர்கள் சார்பாக முதல் மாதாந்திர கூட்டம் வெகு சிறப்பாக நடந்தது. கடலூர் பகுதி தோழர்கள் பெருவாரியாகவும் ,மொத்தம்  60 தோழர்கள் விழுப்புரம்,சிதம்பரம்,திண்டிவனம்,புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்தும்  கலந்துக்கொண்டனர்.
மூத்ததோழர் K. நீலகண்டன் தலைமை தாங்கினார். 
தோழர்N. திருஞானம் தொகுத்து வழங்கினார்.
தோழர் அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முதலில் அஞ்சலி கீழ்கண்டவர்களுக்கு செலுத்தப்பட்டது.

1.தென்னாப்ரிகாவின் மாபெரும் தலைவர் நெல்சன் மாண்டேலா
2.முன்னாள் T III உதவிச்செயலர் T,S ராஜன்.
3. நமது மத்திய அமைச்சர் திரு நாராயணசாமி அவர்களின் துணைவியார்.
4.கடலூர் தோழர் s.கேப்ரியேல்
5.செஞ்சி தோழர்  வடிவழகனின் மகள்.
6.பெண்ணாடம் தோழர் ராதாகிருஷ்ணன் அவர்களின் துணைவியார்.
7.கடலூர் தோழர் பலராமன் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி.

புதுச்சேரியில் இருந்து நமது சங்கத்தின் புதிய தலைவர் அன்பழகன் நமது அழைப்பை ஏற்று சிறப்பித்து நாம் ஏன் இந்த சங்கத்தில் இருக்க வேண்டும்,தான் ஏன் சேவையில் இருந்தபோது இருந்த சங்கத்தில் இருந்து நம் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பதினை விளக்கினார். தோழர்கள் B.துரைபாபு  விழுப்புரம், பகுதியில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி ஓராண்டாக வெற்றிகரமாக நடப்பதையும், உறுப்பினர்களுக்கு எவ்வாறு உதவிகரமாக உள்ளது என்பதினை விளக்கி கூறினார்.  

வெளியூர் தோழர்களுக்கு கடலூர் தோழர்கள்  சார்பாக பொன்னாடைப் போற்றி கவுரவிக்கப்பட்டது.

             செயலர் தோழர் K.வெங்கடரமணன்,தலைவர் ரவீந்திரன்,தோழர் P.ஜெயராமன் உதவிச்செயலர்,தோழர்N. திருஞானம் ,S.துரைசாமி மாவட்ட உதவித்தலைவர்,சிதம்பரம் ஜெயகுமார்,வெங்கடாசலம்,N.செல்வராஜ்,வள்ளிநாயகம்,T.பொன்னுசாமி,வேணுகோபால்,ராமநாதன்,G.வேலாயுதம் எல்லோரும் நிகழ்வுகளையும்,இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறையாவது பார்த்துக்கொள்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது என்பதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.
 மூத்தமுதுபெரும் போஸ்டல் ஓய்வூதியர் தோழர் G.வெங்கடாசலம் நம்மை வாழ்த்தி பேசினார்.  
தோழியர் விஜயலட்சுமி அமைப்பு சாரா வறுமை கோட்டிற்கு கீழ் வரும் தகுதிக்குட்பட்ட ஏழை எளியவர்களுக்கு தமிழகம்,ஒரிசா இவற்றில் மட்டும் ரூபாய்2000 உதவித்தொகையாக வழங்கபடுகின்றது, மற்ற மாநிலங்களில் ரூ 1000 திற்கு கீழ்  மட்டுமே வழங்க படும் அவல நிலையினை எடுத்துரைத்து,நமது பென்ஷன் பாதுகாப்பிற்கு நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று படவேண்டும் என்றுரைத்தார்.
கவிஞர் பாலகிருஷ்ணன்(பால்கி) மாபெரும் தலைவர் மாண்டேலா,நமது T.S ராஜன் முன்னாள் T3 தலைவர் இவர்கள் எவ்வாறு எல்லாம் தியாகம் செய்து சமூகத்திற்கு உழைத்தனர் என்பதை எடுத்து கூறி, தற்கால அரசியல்,சமூக நிகழ்வுகளை சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாதாந்திர கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெறும் என்று கூறி இதற்காக 10 பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது. 
ஓய்வூதிய மகளிரை அணுகும் ஒரு மகளிர் குழு தோழியர் விஜயலட்சுமி தலைமையில் தோழியர் ஸ்ரீமதி,ராஜேஸ்வரி இவர்களை கொண்டு இனி இயங்கும்.

நன்றியுரை திரு அம்மா சந்திரசேகர் கூற கூட்டம் இனிய நினைவுகளுடன் இனிதே நிறைவுற்றது.


சனி, 28 டிசம்பர், 2013

COM. T S RAJAN IS NO MORE
  


Com.T.S.Rajan   passed away on 28-12-2013 morning at 7-15 hours in Bombay at the age of 78.

We  feel  sad  for the  sudden  demise of Com.T.S.Rajan  veteran leader of  P&T  union T III.

He was admitted in hospital on 21-12-2013 in a critical condition.

Com.T.S.Rajan struggled throughout  his  life for good causes and principles.

He was having a vast knowledge and eloquent orator.

He was maintaining  a magazine “Triumph” mouth piece of his valuable thoughts.

He was a good leader not affected  by  either praise or abuse.


We AIBSNLPWA members convey our heartfelt condolences to his family and well wishers.
டிசெம்பர் மாத இறுதியில் நிகழ்வுகள்
மலர் 37

                  Website: aibsnlpwacuddalore.blogspot.in  
Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999

LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai


20-12-13 நமது மத்திய அமைச்சர் மாண்புமிகு V.நாராயணசாமி அவர்களின் துணைவியார் இறைவனடி சேர்ந்தார்.பிரிவால் வாடும் குடும்பத்திற்கு நம் ஆழ்ந்த நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

23.12.13 நமது ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம்  DOT & CCA விலிருந்து நேரிடையாக அந்தந்த வங்கி / தபால் அலுவலக ஓய்வூதியரின் கணக்கிற்கு செலுத்தும் புதிய மென்பொருள் படிப்படியாக நிறைவேற்றப்பட இருக்கின்றது.பரீட்சார்த்தமாக இரு CCA அலுவகங்களில் செயல் படுத்தபடுகின்றது.பணி 2014 இறுதியில் முடியும். PPO ஒரு நகல் வங்கிக்கு அனுப்புவது நிறுத்தப்படும். DA, பென்ஷன் காலத்தில் சரியாக  உடனுக்குடன் கிடைக்கும். நமது பெரும்பான்மையான குறைகேட்புக்கள் முற்றிலும் முடிவுக்கு வரும்.   – செய்தி  டியோகிருஷ்ணா, Jt.CCA


IDA 78.2%

24-12-13  DOP&PW,  IDA 78.2% ஒய்வூதியருக்கும் நீட்டிக்க DOT வின் பரிந்துரையை ஏற்று DOT க்கு அனுப்பியுள்ளது. மத்திய அரசின் DEPT OF EXPENDITURE க்கு DOT அனுப்பவேண்டும்.
செய்தி – தோழர் சித்து சிங் அகிலஇந்திய உதவிச் செயலர்.


BSNL நட்டத்தில் தற்போது இருந்தாலும் மீண்டும்

BSNL நட்டத்தில் தற்போது இருந்தாலும் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் நிறைய 

உள்ளன.பகுத்தாய்வு காரணிகளை தெரிந்துக் கொள்ள கீழ்கண்ட 23.12.13 சேட்டன்.S 

தொடர்பினை சொடுக்கவும்.



AIBSNLPWA தமிழ்நாடு மாநிலச்சங்க செயற்குழுக் கூட்டம்

.மலர் 36
                  Website: aibsnlpwacuddalore.blogspot.in  
Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999


LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai


     AIBSNLPWA தமிழ்நாடு மாநிலச்சங்க செயற்குழுக் கூட்டம் AITUC சங்க கட்டிடம் சென்னை சிந்தாதிரிபேட்டையில் K.முத்தியாலு தலைமையில் 19-12-2013 அன்று காலை 9 மணி அளவில் தொடங்கியது.நமது சங்கத்தலைவர்கள் தோழர் DG,நடராஜன் பொதுச்செயலர்,ராமாராவ் மாநிலச்செயலர் ,மாநில பொருளாளர், மாநிலஉதவித்தலைவர் தோழர் சுகுமாரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றி நமது நிலைமையும்,எதிர்கால திட்டங்களையும் விரிவாக எடுத்துரைத்தனர்.முதல் நாள் எல்லா மாவட்டச் செயலர்களும் தங்களது செயல்பாடுகளையும் உறுப்பினர் எண்ணிக்கை 2011 இருந்து தற்போது வரை தெரிவித்து,வருடாவருடம் செலுத்திய மத்திய மாநில பங்கு சந்தா முதலியவற்றை எடுத்துரைத்தனர்.  



உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப மத்திய மாநில பங்கு சந்தா இல்லை 

என்பதை தலைமை சுட்டிக் காட்டியது.எல்லாம் சரிசெய்யப்பட்டு 

உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும் 

என்று மாவட்ட செயலர்கள் உறுதி அளித்தனர். பென்ஷன் முரண்பாடுகளை 

தீர்க்க கோரியும்,  78.2% IDA இணைப்பை பென்ஷனர்களுக்கும் அளிக்க கோரியும் நமது 

தலைவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தனர்.

  
     20.12.2013 அன்று காலை 0900 மணியளவில் செயற்குழு கூடியது.எல்லா மாவட்ட நிர்வாகிகளுக்கும் கருத்துரைகள் வழங்க வாய்ப்புக்கள் தரப்பட்ட து.எல்லா மாவட்டங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.அகில இந்திய ரீதியில் 1,00,000 உறுப்பினர் இணைப்பை குறியீடு இலக்காகக்கொண்டு,ஒவ்வொருவரும் ஒரு புதிய உறுப்பினரை சேர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் WFTU விற்கு செல்ல இருக்கும் தலைவர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு,உலக அரங்கில் ஓய்வூதியர்களின் பிரச்னைகளை விவாதிக்க கிடைத்த வாய்ப்பிற்கு எல்லோரும் மகிழ்ச்சித் தெரிவித்தனர். மதியம் 0200 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.

         20.12.2013 அன்று மதியம்  0300 மணிக்கு சென்னையில்  CIRCLE PENSION   ADALATH நடைபெற்றது.

கண்ணீர் அஞ்சலி- தோழர் டி.எஸ்.ராஜன் 
முன்னாள் உதவிச்செயலர் T-3  இன்று மறைவு

மலர் 35
                  Website: aibsnlpwacuddalore.blogspot.in  
Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999

LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai

23-12-13 அன்று தோழர் டி.எஸ்.ராஜன் முன்னாள் உதவிச்செயலர் T-3 ஜாய் மருத்துவமனை செம்பூரில் அபாய நிலையில் சேர்க்கப்பட்டார்.தோழர்கள் DG,ராமாராவ்,ரங்கநாதன்,சம்பத்குமார்,கனகராஜ் அவர்கள் அவரை பார்க்க சென்றனர்.அன்னார் இன்று 28-12-2013 காலை 7.15 மணியளவில் மறைந்துவிட்டார்.நமக்கும்,அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பு.

இவர்

ஒரு அறிவு ஜீவி

எளிமையானவர்.

போற்றுவார் போற்றட்டும்,புழுதி வாரி தூற்றுவார் வாழட்டும் என ஓடும்,பொன்னும் ஒக்கவே நோக்கும் திண்ணிய மனத்தினர்.

சங்கத்திற்காக தனது வாழ்நாள் முழுமையும் போராட்டங்களில் கழித்த தியாகச்செம்மல்.

T-3சங்கத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர்.

ஆங்கிலத்தில் எழுவதில் வல்லவர்.டிரயம்ப் என்ற பத்திரிக்கையை நடத்தி முன்னேற்ற கருத்துக்களை பரப்பியவர்.
        
நமது ஓய்வூதியர்கள் சங்கம் அவரது மறைவிற்கு கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறது.