மலர் 15
விழுப்புரம் தோழர்கள் மாதாந்திர கூட்டம்
5-7-2013
Website:- aibsnlpwacuddalore.blogspot.in
Email: aibsnlpwacuddalore@gmail.com
Mobile 9442228182,9442292582,9486868999,9443222310
5-7-2013 அன்று காலை 10-30 மணி அளவில் நமது விழுப்புரம் தோழர்கள் சார்பாக மாதாந்திர கூட்டம் வெகு சிறப்பாக நடந்தது. விழுப்புரம் பகுதி தோழர்கள் 42 பேரில் 30 தோழர்கள் கலந்து கொண்டனர்.
70 அகவை முதிர்வு செய்த தோழர்கள் B.துரைபாபு,J.வெற்றி (JOE),K.நீலகண்டன், A.அண்ணாமலை, C.வடிவேலு அவர்களுக்கு -தோழர் M.கிருஷ்ணன் சார்பாக பொன்னாடைப் போற்றி கவுரவிக்கப்பட்டது.
செயலர் தோழர் K.வெங்கடரமணன் 78.2 DA ,ஊதிய முரண்பாடு இவைகளைப் பற்றி நமது சங்க நிலைப்பாடுகளையும்,தோழர் P.ஜெயராமன் உதவிச்செயலர் நமது ஓய்வூதிர்களின் விடுப்பட்ட நிலுவைகளை எல்லாம் எப்படி பல்வேறு நிலைகளில் நின்று கடுமையாக தொடர்ந்து பெற்றோம் என்பதையும்,தோழர்N. திருஞானம் மருத்துவ நிலுவைகளை சரியான விண்ணப்பங்களுடன் எப்படி பெறுவது என்பதையும்,தோழர் D. சண்முகசுந்தரம் சிக்கனம்,சேமிப்பு,வருமான வரி பற்றியும் எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக எடுத்துரைத்தனர்.
இன்றைய கூட்ட செலவினை தோழர் B.துரைபாபு ஏற்றுக்கொண்டார்.நன்றி அறிவிப்புடன் மீண்டும் 5-8-13 அன்று கூடுவோம் என்று கூற இனிதே முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக