Translate

திங்கள், 29 ஜூலை, 2013

மலர் 17


ஆழ்ந்த இரங்கல்

Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                    Email: aibsnlpwacuddalore@gmail.com
                                   Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

  LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI           STR   TVL    KOVAI 


ஆழ்ந்த இரங்கல்

நமது உறுப்பினர் தோழர் S.N.பிள்ளை கடலூர்  அவர்கள்  8-7-2013 அன்று உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சைக்குப்பின் அகால மரணம் அடைந்தார்.அன்னாரின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 8-7-2013 அன்றே தோழர்கள் K.ரவீந்திரன்,P.ஜெயராமன்,N.திருஞானம்,K.கோவிந்தராஜன் அவர்கள் அவரது வீட்டிற்கு சென்று நமது இரங்கலைத் தெரிவித்து அவரின் குடும்ப நலநிதி ரூபாய் 2000 ஐ அவரின் துணைவியாரிடம் அளித்து வந்தனர்.

புதன், 24 ஜூலை, 2013

மலர் 16

24-7-2013

மலரும் நினைவுகள்- நிழற் படங்கள் 

Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                    Email: aibsnlpwacuddalore@gmail.com
                                   Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

  LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI           STR   TVL    KOVAI



ஒன்றிணைந்த தபால் தந்தி ஒரே சங்கமாக இருந்த போது எடுத்த பழைய படங்களை இத்துடன்இணைத்துஉள்ளோம்.தோழர்கள் தொழிற்சங்கதலைவர்கள் நமது பெருமதிர்ப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய  ஜகன்,பாண்டுரங்கன்,ரகுநாதன்,ரெங்கநாதன்,தமிழ்மணி,கோபாலன் ஆகியோரின் பழைய படங்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இன்னும் பழைய படங்களை எதிர்பார்க்கின்றோம்-மலரும் நினைவுகளாக வெளியிட

























ஞாயிறு, 14 ஜூலை, 2013

மலர் 15
விழுப்புரம் தோழர்கள் மாதாந்திர கூட்டம் 
5-7-2013

Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                    Email: aibsnlpwacuddalore@gmail.com
                                   Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

  LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI           STR   TVL    KOVAI


             5-7-2013  அன்று காலை 10-30 மணி அளவில் நமது விழுப்புரம் தோழர்கள் சார்பாக மாதாந்திர கூட்டம் வெகு சிறப்பாக நடந்தது. விழுப்புரம் பகுதி தோழர்கள் 42 பேரில் 30 தோழர்கள் கலந்து கொண்டனர்.
             
70 அகவை முதிர்வு செய்த  தோழர்கள் B.துரைபாபு,J.வெற்றி (JOE),K.நீலகண்டன், A.அண்ணாமலை, C.வடிவேலு அவர்களுக்கு -தோழர் M.கிருஷ்ணன் சார்பாக பொன்னாடைப் போற்றி கவுரவிக்கப்பட்டது.

             செயலர் தோழர் K.வெங்கடரமணன் 78.2 DA ,ஊதிய முரண்பாடு  இவைகளைப் பற்றி நமது சங்க நிலைப்பாடுகளையும்,தோழர் P.ஜெயராமன் உதவிச்செயலர் நமது ஓய்வூதிர்களின் விடுப்பட்ட நிலுவைகளை எல்லாம் எப்படி பல்வேறு நிலைகளில் நின்று கடுமையாக தொடர்ந்து பெற்றோம் என்பதையும்,தோழர்N. திருஞானம் மருத்துவ நிலுவைகளை சரியான விண்ணப்பங்களுடன் எப்படி பெறுவது என்பதையும்,தோழர் D. சண்முகசுந்தரம் சிக்கனம்,சேமிப்பு,வருமான வரி பற்றியும் எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக எடுத்துரைத்தனர்.

           இன்றைய கூட்ட செலவினை தோழர் B.துரைபாபு ஏற்றுக்கொண்டார்.நன்றி அறிவிப்புடன் மீண்டும் 5-8-13 அன்று கூடுவோம் என்று கூற இனிதே முடிந்தது.

சனி, 13 ஜூலை, 2013

மலர் 14
52 வது ஆண்டு திருமண நிறைவு பாராட்டு விழா
28-6-2013


Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                    Email: aibsnlpwacuddalore@gmail.com
                                    Mobile 9442228182,9442292582,9486868999,9443222310

  LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI           STR   TVL    KOVAI

திருK. நீலகண்டன் அவர்களும் அவர் துணைவியாரும்
                       52 வது ஆண்டு திருமண நிறைவு பெற்று ,75 வயது முதிர்ந்த நமது மூத்த தோழர் திருK.நீலகண்டன் அவர்களுக்கு சிறப்பு செய்து,ஆசி பெரும் முகத்தான்  நமது கிளையின்சார்பாக தலைவர்,செயலர் ,P.ஜெயராமன் உதவிச்செயலர்  ,N.திருஞானம் உதவிச்செயலர் ,B.ஸ்ரீநிவாசன் செயற்குழு உறுப்பினர்  முதலியோர்  28-6-2013 அன்று காலையில்  அவரது இல்லத்திற்கு சென்று ஆசி பெற்று அன்னாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடை போற்றி கவவுரவித்து மகிழ்ந்தோம்.நீள் ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று பல்லாண்டு ,பல்லாண்டு ,மக்கள் செல்வங்களோடு மகிழ்ச்சியாக வாழ நமது உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நமது கிளையின் சார்பாக சிறிய பரிசு 

தலைவர்,செயலர் ,P.ஜெயராமன்,N.திருஞானம்,B.ஸ்ரீநிவாசன் திரு,திருமதி  நீலகண்டன் அவர்களுடன்
வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்,செயலர் ,N.திருஞானம்

ஆசி பெற்று ,பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தும்  நமது தோழர்கள்



திங்கள், 8 ஜூலை, 2013

மலர் 13
இலாகா பணிஓய்வு பாராட்டு விழா


30-6-2013

Website:-  aibsnlpwacuddalore.blogspot.in
                                                    Email: aibsnlpwacuddalore@gmail.com
                                     Mobile 9442228182,9442292582,9486868999,9443222310


                    LINKS:-      CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI     STR   TVL    KOVAI



1) M.பாலச்சந்தர் MD கடலூர் 2)  சுபாஷ் TM சிதம்பரம்  3)S.சந்திரசேகர்  STS கடலூர்  
4) கிருஷ்ணமூர்த்தி TM  பண்ருட்டி

              30-6-2013 பணிநிறைவு பெற்று 4 ஊழியர்களும்  ஓய்வு பெற்றனர்.தொலைபேசிஅலுவலக கான்பரன்ஸ் அரங்கத்தில் பொது மேலாளர்தலைமையில் உதவிபொது  மேலாளர்கள் நிர்வாகம்,திட்டம்,நிதி முன்னிலையில் ,எல்லா சங்க பிரதிநிதிகளின் பங்களிப்போடு,குடும்ப உறுப்பினர்களோடு வெகு விமரிசையாக நடந்தேறியது. நமது சங்க ஊழியர்களும் கலந்து கொண்டு பொன்னாடை போற்றி கவுரவித்து வாழ்த்தி பேசினர்.