மகளிர் தின விழா,விருப்ப ஒய்வு 2020 ஒய்வூதியர்கள் வரவேற்பு,மற்றும்
கடலூர் பகுதி ஆண்டுவிழா
தலைவர்.P. சாந்த குமார் தலைமையில் மிக சிறப்பாக
கடலூர் BSNL வாடிக்கையாளர் சேவை மைய வளாகத்தில்
08.03.2020 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 200க்கும் அதிகமான தோழர்கள்,தோழியர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மகளிர் தின விழா தோழியர் N.S .லட்சுமி ,தலைமையில் நடைபெற்றது. தோழியர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தோழியர்கள். V.விஜயலட்சுமி ,செல்வரசு மேரி ,ராஜேஸ்வரி, P.கமலா , ஜானகி,
சாவித்திரி,S.லலிதா,Tகமலா.,மற்றும் பல தோழியர்கள் சமூகத்தில் மகளிர் பங்கினை பற்றி உரையாற்றினார்கள்.
விருப்ப ஓய்வு 2019 ஓய்வூதியர்கள்அனைவரையும் வரவேற்று
கைத்தறி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டதலைவர் P. ஜெயராமன் மாவட்ட செயலாளர் .R. அசோகன் மாநில துணைத்தலைவர் K.சந்திரமோகன்,K.இளங்கோவன், சிறப்புரை ஆற்றினார்கள்.
S.ஹாஜாகமாலுதீன் மாவட்ட பொருளாளர் தன்னுடைய சிறப்புரையில் மார்ச் 8 வரை 979 ஓய்வூ தியர்களை கொண்டு பீடு நடை போடும் கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சி நம்மை மகிழ்விக்கின்றது என்று கூறினார்.நம்பிக்கையுடன் இணைந்திருக்கின்ற ஓய்வூதியர்கள் அனைவருக்கும் நன்றி கூறி ,சில நாட்களில் 1000 ஓய்வூ தியர்களை கடந்து வளர போகின்ற நிகழ்வினை பெருமையுடன் பகிர்ந்துக் கொண்டார். சொன்னதை செய்வோம்,செய்வதை சொல்வோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
தோழர்கள் K.ரவீந்திரன் ,S.ரஹோத்தமன், N.திருஞானம் ,K.வெங்கடரமணன் ,A.ஜெயக்குமார்.K.வீரராகவன்,A.ராஜலிங்கம்
,S.பொன்மலை , S.நாராயணசாமி ,P.ஏழுமலை, ,G.S .குமார் ஆகியோர் நாம் கடந்து வந்த பாதையையும்,தற்போதய நிகழ்வுகளையும் ,மாநில,அகிலஇந்திய சங்கமும் நமக்கு அரணாக விளங்கி நமது ஓய்வூ தியர்களின் பிரச்னைகளை சாதித்த நமது முயற்சியை நம்பி நம்முடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் நமது சங்கம் மீண்டும் ஓய்வூ தியர்களின் எதிர்ப்பார்ப்பினை நிநிறைவேற்றும் என்பதனை எடுத்துரைத்தனர்.மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்த ன ர்.
புதிய நிர்வாகிகளாக தோழர்.P. சாந்த குமார் தலைவராகவும் தோழர்.G..அசோகன் செயலராகவும், தோழர் N.செல்வராசு பொருளாளராகவும், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நன்றி உரை தோழர் G.அசோகன் கூறிட விழா இனிதே நிறைவுற்றது
கடலூர் பகுதி ஆண்டுவிழாவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்ட புதிய நிர்வாகிகள்
செல்வரசு மேரி
|
|
அனைத்து உறுப்பினர்களும் புதிய நிர்வாகிகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் மாவட்ட,மாநில சங்க முடிவுகளை ஓரணியில் நின்று வெற்றி பெற உறுதி ஏற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக