Translate

செவ்வாய், 26 மார்ச், 2019

 கஜா புயல் இயற்கை பேரிடர் நிவாரண வேலைகளில் AIBSNLPWA தமிழ்நாடு சங்கத்தின் பங்களிப்பு ...மாநிலச்சங்க தலைவர் தோழர் v.ராமாராவ் அவர்களின் செய்தி








நமது சங்க 13000 உறுப்பினர்களின் ரூ14 லட்சம் நன்கொடையிலிருந்து 8.5 லட்சம் செலவில் வேதாரண்யம்,பட்டுக்கோட்டை,திருவாரூர்,திருத்துறைப்பூண்டி பகுதிகளில் 4-12-2018 அன்று உடைகள்,போர்வைகள்,4000 கிலோ அரிசி  கஜா புயல் நமது நமது பங்காக பாதிக்கப்பட்ட வர்களுக்கு  வழங்கினோம்.
5.5 லட்சம் செலவில் பாதிக்கப்பட்ட திருவள்ளுவர் அருள்நெறி பள்ளி குன்றக்குடி கொருக்கை நிர்மாண வேலைகளுக்காக நன்கொடையாக அளித்திட்டோம்.
புதிய  ஷீட்வேயப்பட்டு நிர்மாண வேலைகள் முடிந்த 2 பகுதிகளின் சாவிகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் 17-3-2019 அன்று தோழர்கள் v.ராமாராவ் மா.த, R.வெங்கடாசலம் மா.செ,K.முத்தியாலு மத்திய உதவிச்செயலர்  அளித்து நமது பணியை நிறைவுச்செய்தனர்.
நன்கொடை அளித்த சென்னை தொலைபேசி தோழர்களின் சார்பாக  தோழர்கள் கிருஷ்ணமூர்த்தி உதிவிசெயலர்,கண்ணப்பன் பொருளாளர் தோழர்கள் கலந்துக்கொண்டு நிகழ்வினை சிறப்புச்செய்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக