ஆழ்ந்த இரங்கல்
புதுவைத் தோழர் எஸ்.பிச்சுமணி
மறைவு...
புதுவை NFTE தொழிற்சங்கத்தின்
மூத்த தோழர் எஸ்.பிச்சுமணி நேற்று இரவு சென்னையில்
நம்மை விட்டுப்
பிரிந்து விட்டார்.
நமது கடலூர் தோழர் PJ அவர்களின் ஒரே நேரத்தில் நமது துறையில் சேர்ந்தவர்கள்.PJ அவர்களை விட இரு ஆண்டுகள் மூத்தவர்.கடலூர் முதல் தமிழக bsnl ஓய்வூதியர் நலச்சங்க ஆரம்ப முதல் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்.
சேலம் கோட்ட
மகளிர் மய எதிர்ப்புப் போராட்டத்தில் முன் நின்றவர்.
1968 வேலைநிறுத்தத்தில்
பங்கேற்று
பழிவாங்கப் பட்டவர்.
வேல நீக்கம்
செய்யப் பட்டவர்.
புதுவை
கோட்டத்தின் முதல்
கோட்டத் தலைவர்.
புதுவை
பொது
இயக்கங்களில் அவரில்லாமல் எதுவும் இல்லை
என்கிற அளவில்
தன்னை இணைத்துக் கொண்டவர்.
NFPTE தொலைபேசி இயக்கப் புதுவை தந்த தலைவர்தோழர் பிச்சுமணி மறைந்தார்.
எப்போதும் சிரிப்பும் கேலியும் கிண்டலும் உற்சாகம் நிரம்பிய உறுதியான தோழர். பல
இளம் தோழர்களை உருவாக்கியவர்.
இன்று சென்னை தாம்பரத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.
மறைந்த தோழருக்குச் செவ்வஞ்சலி!
சிறந்த
கம்யூனிஸ்ட். அவரது
இழப்பு
இயக்கத்திற்குப்
பேரிழப்பாகும்.
மறைந்த தோழருக்கு நமது கொடி தாழ்த்திய
அஞ்சலி.
செவ்வணக்கம்.
தொடர்புக்கு:
044-22281067
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக