கடலூர் தோழர்கள் திரு.அசோகன் AGM(Transmission), N.பாலகிருஷ்ணன் (பால்கி) இருவருக்கும் GM.BSNL அலுவலகத்தில் 24-3-2017 அன்று நடந்த பாராட்டுவிழா.
கடலூர் தோழர்கள் திரு.அசோகன் AGM(Transmission) அவர்களும், N.பாலகிருஷ்ணன் (பால்கி) அவர்களும் இந்த மாதம்
இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறுவதையொட்டி 24-3-2017 அன்று அவருடைய பணியை பாராட்டும் வகையில் அவர் பணிபுரியும்
கடலூர் பொதுமேலாளர் அலுவலக அதிகாரிகள் /ஊழியர்கள் சார்பில் பாராட்டு விழா மாலை
பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் திருமதி D.கலைவாணி AGM(Admn) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தோழியர் V.வசந்திஅவர்கள்
வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
நட்புறவுடன் பழகும் திரு அசோகன்
அவர்களின் பணியையும்,ஒரு சிறந்த மனிதநேயபண்பாளராக திகழ்ந்ததையும் பாராட்டி
மகிழ்ந்தார்.
கடலூர் முதன்மைப் பொதுமேலாளர் திரு மார்ஷல்
ஆண்டனி லியோ அவர்கள் கலந்து கொண்டு திரு.அசோகன் அவர்களுக்கு நினவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார்.
திரு அசோகன் அவர்கள் கடலூரில் தொடங்கி
தில்லி,குன்னூர்,பெங்களூர்,
சென்னை, திரும்பவும் கடலூர் என்ற ஒரு
சேவை பயணத்தின் காரணமாக பல்வேறு அனுபவங்களை பெற்று ஒரு விசாலாமான அறிவுத்திறன்
கொண்டு பல்வேறு பிரிவுகளின் நட்புறவு குழாமினை வளர்த்து அதை நமது துறையின்
வளர்ச்சிக்காகவே பயன்படுத்தினார் என்பதைப்பற்றி பாராட்டி நினைவு கூர்ந்தார்.
BSNL துறையின் முகமான வாடிக்கையாளர்
சேவை மையங்களின் இவரது சிறப்பான எடுத்துக் காட்டான கடுமையான
உழைப்பினையும்,துறையின் உயிர்நாடியான தொலைத்தொடர்பு சாதனங்களையும் OFC
கேபிள்களையும் இயற்கை பேரிடர் காலங்களிலும் அல்லும் பகலும் இயங்க வைத்த இவரின்
சீரிய தலைமை பண்பையும் புகழ்ந்து எடுத்துரைத்தார்.
தோழர் பால்கி அவர்களின்
நற்பண்புகளையும்,அவர் வாசிப்போர் இயக்கத்தில் திறம்பட செயலாற்றுவதையும் சில நல்ல
நூல்களை தமக்கு அறிமுக படுத்தியைதையும் கூறி பணி ஒய்வு பெறப்போகின்ற அவருக்கும்
வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மேலும்
திரு K.சமுத்திரவேலு DGM(NWP-CFA), அவர்கள் தானும்,,இவரும் SNEAசங்க கோட்ட செயலாராக பணியாற்றிய
அனுபவங்களையும் 2015 நவம்பர்மாதம் பெருவெள்ளத்தின் போது வெள்ளத்தால் சூழப்பட்ட
ஊர்களில் தொடர்பு துண்டிக்கப்பட்ட நமது சேவையினை 24 மணிக்குள் இவரது பிரிவு
குழுக்களால் சரி செய்யப்பட்டு சிறப்பான சேவை அளித்த ஒரே நிறுவனம் BSNL என்பதை மக்களின்
மனதில் நிலை நிறுத்திய இவரின் தலைமை பண்பையும் சிலாகித்துப் பேசினார்.. தோழர் பால்கி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.
திருமதி ஜெயந்தி அபர்ணா DGM(CM), திரு அசோகன் தில்லி
தொலைபேசியில் படித்து முடித்தவுடனேயே JE ஆக வேலை கிடைத்ததையும்,இடைப்பட்ட காலத்தில்
எழுத்தராக கடலூரில் 1981 இல் பணியில்
சேர்ந்ததையும்,இந்திய கிராஸ் பார் தொலைபேசி கடலூரில் கடுமையாக பணி ஆற்றி திறம்பட
நிர்வகித்ததையும் நினைவு கூர்ந்தார். 2015 நவம்பர்மாதம் பெருவெள்ளத்தில் இவரது
பெரும் பங்கினை போற்றினார். தான் பட்ட அல்லல்கள் யாரும் படக்கூடாது என்று
எல்லோருக்கும் ஒரு சமாரிட்டன் ஆக திகழ்ந்தார். தோழர் பால்கி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறினார்
AIBSNLEA மாவட்ட செயலர் திரு S.ஆனந்த் AGM
(NWP/CM), . 2015
நவம்பர்மாதம் தொடர்பு துண்டிக்கப்பட்ட காட்டுமன்னார்கோயில் சேவை அனுபவங்களை
பகிர்ந்துக்கொண்டார்.
திரு K.தனசேகர் AO Plg, திரு R.S.வேதராமன் SDE
(Transmission) திரு S.ராமநாதன் SDE, திருமதி சித்ரா நாகராஜன் A.O, திரு ஹரிஹரன் JAO, தோழர் R.ஜெயபாலன் ,FNTOமாவட்ட செயலர்,திரு. கோபால்சாமி-BSNLEU அனைவரும் அவரின் சீரிய பண்பினை கூறி சிறந்த மனிதநேயபண்பாளராக
விளங்கினார் என்றார்கள்.
செயலர்
தோழர் P.சுப்ரமணியன் தான் இவருடன் எழுத்தரிலிருந்து ஒன்றாக மதுரையில்
பயிற்சியிலிருந்து பழகிய மலரும் நினைவுகளையும் ,
மனிதநேயபன்பாளராக திகழ்ந்த அவரின் குணநலன்களையும் மகிழ்ச்சியாக பகிர்ந்துக்
கொண்டார்.
NFTE மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் வாழ்த்தி பேசினார்.பொதுமேலாளர்
திரு அசோகனை பாராட்டி பேசியது போலவே அவர் கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் துறைக்கு
கடுமையாக உழைத்த அவரின் குணநலன்களையும் ,அவரின் கீழ் பணிபுரியும் கடைநிலை
ஊழியர்களுக்கும் செய்த உதவிகளையும் பாராட்டினார்.சிகப்புதான் புரட்சி செய்யும்
என்றில்லாமல் அவர் சக மனிதர்களை மதித்து அவர்களிடம் ஒரு சகோதரத்துவம் பாராட்டி
வந்த அவரின் குணத்தை புகழ்ந்துரைத்தார்.ஒரு
சீரிய ஊழியனுக்கு கடமையும்,உரிமைகளும் பிரிக்க முடியாது என்பதை அவர் நிரூபித்துக்
காட்டினார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்தார்.அவ்வமயம் அதே நாளில் ஓய்வு பெறும்
திரு K.பாலகிருஷ்ணன் (தோழர் பால்கி) AGM CM அவர்களும் பொதுமேலாளர் அலுவலகம்
சார்பில் கெளரவிக்கப்பட்டார். வந்திருந்து வாழ்த்தியவர்களுக்கும், விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும்
திரு R.வரதராஜன் SDE(Admn)அவர்கள் நன்றியுரைத்தார்.
நமது
ஓய்வூதியர்கள் சார்பாக N.T, P.J, நீலகண்டன்,K.R,பக்கிரி,காஜாகமாலுதீன்மற்றும் பலரும்
கலந்துக்கொண்டனர்.
விழாவினை
சிறப்பாக ஏற்பாடுகள் செய்த நமது தோழர்களையும்,