AIBSNLPWA கள்ளக்குறிச்சி பகுதி
சிறப்புக்கூட்டம்
தியாக துர்கம் , இளவனாசர்கொட்டை,சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை , வடக்க நங்கல்,முரார்பாத்,பொட்டியம், ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய
கள்ளக்குறிச்சியில் ஒரு மாபெரும் கூட்டம் 26-01-2017 வெள்ளிக்கிழமை காலை , தொலைபேசி
நிலையத்தில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.25 தோழியர்களும்,100 தோழர்களும் மகிழ்ச்சியுடன்
கலந்துக் கொண்டு தங்கள் ஆர்வத்தினை வெளிபடுத்தினர்.
கடலூர்,சிதம்பரம்,விழுப்புரம்,திண்டிவனம்,செஞ்சி,விருத்தாசலம்,
முதலிய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னணி தோழர்கள்
கலந்துக்கொண்டனர்.
தோழர் L .ஜெகந்நாதன் தலைமை வகித்தார். தோழர் நஸீர் பாஷா முன்னிலை வகித்தார்.
தோழர் P .அழகிரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தோழர் இளங்கோவன் ,மாவட்ட
தலைவர் ,
தோழர் P.ஜெயராமன் மாவட்டத் துணைத்தலைவர்
தோழர் K .வெங்கட்டரமணன் மாவட்ட துணை தலைவர் ,
தோழர் N .திருஞானம்.மாவட்ட செயலர்,
தோழர் K.சந்திரமோஹன் மாவட்ட அமைப்புச்செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தோழர் K .வெங்கட்டரமணன் மாவட்ட துணை தலைவர் ,
தோழர் N .திருஞானம்.மாவட்ட செயலர்,
தோழர் K.சந்திரமோஹன் மாவட்ட அமைப்புச்செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தோழர். K .முத்தியாலு தமிழ்மாநில செயலர் ,
தோழர் K .இரவீந்திரன் மாவட்ட துணைத்தலைவர் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
இந்த சிறப்பு கூட்டத்தில் தோழர்
முத்தியாலு அவர்கள் நம் சங்கத்தின்
செயல்பாடுகளை தெளிவாக ஆற்றிய உரை மிக சிறப்பாக அமைந்தது.
தோழர் N .திருஞானம்.மாவட்ட செயலர் நமது
மாவட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளையும் தற்போது உள்ள 600 உறுப்பினர்களில் 553 தோழர்கள் ஆயுட்கால சந்தா தோழர்கள் என்பதையும்,. மாதாமாதம்
உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
கள்ளகுறிச்சி பகுதியில் ஏற்கனவே இருந்த 20
ஆயுள் கால உறுப்பினர்களோடு, இன்றும்11 புதிய ஆயுள் கால உறுப்பினர்கள் இணைந்துள்ளது
தனக்கு ஒரு புதிய உத்வேகத்தையும்,நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக இயம்பினார்.
நமது நீண்டநாள் குறிக்கோளாக இருந்த
கள்ளகுறிச்சி பகுதி நிறுவபட்டதற்கு இந்த பகுதி முன்னணி தோழர்களுக்கு நன்றியையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
கள்ளக்குறிச்சியின் ஒருங்கிணைப்பு குழுவில்
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய
நிர்வாகிகளாகளின் பெயர்கள்.
தலைவர்: தோழர் R.பாலசுப்ரமணியன் ( DE ஒய்வு )
செயலர் : தோழர் K .செல்லையா
செயலர் : தோழர் K .செல்லையா
உதவிச்செயலர்:P.இன்பராஜன்
பொருளாளர் : தோழர் R. ராஜேந்திரன்
அமைப்பு செயலர்: தோழர் அர்ச்சுணன் .
செயற்குழு உறுப்பினர்கள்: 1.A.மாயவன்
2. G. ராஜேந்திரன்
3.S.தேசிங்கு
4.G.மதியழகன்
5.B.பக்கிரிசாமி
6.R.இந்திராணி
7.V.ராஜாக்கண்ணு
8.P.அழகிரி
முத்தாய்ப்பாக மதியம் மிகவும் சுவையான
உணவு முக மலர்ச்சியுடன் எல்லோருக்கும் அளித்து தங்களின் விருந்தோம்பலை வெளிபடுத்தியது
எல்லோரையும் மகிழ்வித்தது.
தோழர் K .செல்லையா நன்றி கூற
சிறப்புக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக