Translate

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மதிப்பிற்குரிய துணை பொதுமேலாளர் நிதி திரு
சாந்தகுமார்
    அவர்கள்   தலைமையில் நடந்த சிறப்பான பணிஓய்வுவிழா


31-10-2014 அன்று பணி ஒய்வு பெற்ற கடலூர் மாவட்டதோழர்கள்




தோழர் R.மதியழகன் TMவிழுப்புரம்

தோழர் R. சுப்ரமணியன் 
TM திண்டிவனம்

தோழர் R.  மனோகரன் TMசேத்தியாத்தோப்பு


மதிப்பிற்குரிய துணை பொதுமேலாளர் நிதி திரு சாந்தகுமார் அவர்கள் பணி ஒய்வு பெரும்

 இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு      கடிதங்களையும்,பரிசு பொருளையும்   

அளித்து வாழ்த்தினார்.



மதிப்பிற்குரிய BSNLEU மாவட்டச்செயலர் திருஞானசம்பந்தம் அவர்கள் JCM சார்பாக

சந்தனமாலை அணிவித்து வாழ்த்தி பேசினார்..


நமது சங்கம் சார்பாக மாவட்ட உதவித்தலைவர் P.ஜெயராமன், பொருளாளர்  திரு 

N.திருஞானம் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தனர்.





ஊழியர்களின் குறிப்புகள்,பணிசிறப்புக்களை அந்தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டி பாராட்டிப் 

பேசினார்கள்.

BSNLEU,NFTE,FNTO,SNEA,AIBSNLEA,AIBSNLPWA,BDPA தொழிற்சங்க நிர்வாகிகள் 

கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

திரு M.சேகர் AGM நிர்வாகம் கால நிர்வாகத்துடன் ,தொகுத்து வழங்கினார்.

ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு BSNL உடன் தாங்களும் வளர்ந்த நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டு ,பணியில் இருக்கும் ஊழியர்கள் தங்கள் பங்கினை ஆற்றி BSNL வளர்ச்சிக்கு பாடுபடவேண்டியதன் அவசியத்தினை எடுத்துரைத்தனர்.

திரு M.சேகர் AGM நிர்வாகம் எல்லோருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டுநீள் 

ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன் 

                            என்று வாழ்த்துகின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக