வெள்ளிக்கிழமை, 2014 அக்டோபர் 10
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற
இந்தியாவின் கைலாஷ் சட்யார்தி ,
பாகிஸ்தான் மலாலா யூசப்ஜாய்
குழந்தை உரிமை ஆர்வலர்கள் இந்தியாவின் கைலாஷ் சட்யார்தி பாகிஸ்தான் மலாலா யூசப்ஜாய் இருவருக்கும் வெள்ளிக்கிழமை
அமைதிக்கான நோபல் பரிசு வழங்க அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் கைலாஷ் சட்யார்திஅவர்கள் குழந்தை கடத்தல் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிந்து , போராடி, சுமார் 80,000 குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தார்.
பாகிஸ்தான் மலாலா யூசப்ஜாய் 17 வயதான பள்ளியில் படிக்கும் இளம்பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தலிபானால் தலையில் சுடப்பட்டார். பாகிஸ்தானில் இளம்பெண்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று முற்போக்கு கொள்கைகளை கொண்ட ஒரு ஆர்வலராக திகழ்ந்தார்.
"கல்வி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் மதம்,நாட்டு எல்லைகளை கடந்து போராடிய ஒரு 60 வயது இளைஞரையும்,பள்ளியில் படிக்கும் 17 வயது இளம்பெண்ணையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்தது நல் இதயங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.
மனித சமுதாயத்திற்கு நற்செயல் புரிந்த இவர்கள்
நீடுழி வாழ்க !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக