Translate

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

நமது அகிலஇந்திய  தலைவர் P.S.ராமன்குட்டி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி..

நன்றி.தமிழில் நமது திருநெல்வேலி இணையம்


மத்திய ஓய்வூதிய இலாகா
நமது கோரிக்கையான
ஓய்வூதிய மாற்றத்தை
இதுவரை மறுதலிக்கவில்லை

ஓய்வூதிய மாற்றமும்
ஊதிய மாற்றமும்
ஒன்றுக்கொன்று தொடர்புடையதல்ல.
இரண்டும் வெவ்வேறானவை
வெவ்வேறு மட்டத்தில்
முடிவுசெய்யப்பட வேண்டியவை
என்பதை ஓய்வூதிய இலாகா
ஒத்துக்கொண்டுள்ளது.

அதனால்தான் ஓய்வூதிய இலாகா
DOT அனுப்பிய கடிதத்தை
திருப்பி அனுப்பி வைத்தது.

ஓய்வூதிய மாற்றத்திற்கான
உறுதியான திட்டத்தை
அனுப்பிவைக்க DOT-ஐ
கோரியிருந்தது அந்தக்கடிதத்தில்.

தற்பொழுது அந்தக்கடிதம்
DOT-தான் உள்ளது
சஞ்சார் பவனில் உள்ள
ஒருசில அதிகாரிகள்
நாடகம் ஆடுகிறார்கள்
[7:44 AM, 2/1/2019] Aruna Madurai: BSNL-லிருந்து
பணிநிறைவு பெற்றவர்களுக்கு
ஓய்வூதிய மாற்றம் செய்ய
CPC- ஏதாவது பரிந்துரைத்திருக்கிறதா?
என்று கேட்கிறார்கள். 
உண்மையில்  CPC எதுவும்
பரிந்துரைக்கவில்லைதான்.
அதற்கு
முக்கிய காரணகர்த்தாக்கள்
இதே DOT அதிகாரிகள்தான்.

நாம் CPC -க்கு அளித்த
மெமோரண்டத்தின் மீது
கருத்து கேட்டு DOT-க்கு
05-01-2015 அன்று
CPC கடிதம் அனுப்பியது

நமது சங்கத்தின் சார்பில்
04-08-2015 அன்று
தொலைத்தொடர்பு செயலர்
திரு.R.K.கார்க்  அவர்களை சந்தித்தபோது
CPC-க்கு எந்தவித பதிலும்
அனுப்பவில்லை என்று
தெரியவந்தது.
நாம் சுட்டிக்காட்டிய பின்தான்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
உடனே அனுப்பிவைக்க
உத்தரவிட்டார் கார்க்.
16-08-2015 அன்று DOT இடமிருந்து
CPC க்கு கடிதம் அனுப்பி
அது போய்ச்சேரும் பொழுது
CPC தனது அனைத்து வேலைகளையும்
முடித்து மூட்டை கட்ட
தயாராக இருந்த சமயத்தில்
கடிதம் போய்ச்சேர்ந்ததால்
கடிதம் குப்பைக்கூடையில்
அடைக்கலமானது.
இந்தப் பிரச்னையில்
எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ
அவ்வளவு தாமதத்தை
செயற்கையாக உருவாக்கிய
அதே DOT அதிகாரிகள்
இன்று கேட்கிறார்கள்
CPC பரிந்துரை எங்கே?  என்று
 
இப்போது கூட வாய்ப்பு
உள்ளது.
DOT ஓய்வூதிய மாற்றம் சம்பந்தமாக
உறுதியான திட்டத்தை
முன்மொழியும் பட்சத்தில்
ஓய்வூதிய இலாகா
அனுமதி அளிக்க தயாராக
உள்ளது

DELINKING சம்பந்தமாக
AUAB -ம்  கடிதம் அனுப்பியிருப்பது
பாராட்டத்தக்கது.
தோழர்கள்
சந்தேஷ்வர்சிங் அவர்களுக்கும்
அபிமன்யு அவர்களுக்கும்
நன்றி உரித்தாகுக.




We still have hopes.Read the following message from PSR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக