Translate

புதன், 25 டிசம்பர், 2019

 விழுப்புரம் பகுதி ஆம் ஆண்டு விழாவும்  
 ஒய்வூதியர் தின சிறப்புக்கூட்டமும் -17.12.2019


17.12.2019 அன்று கடலூர் மாவட்டம் AIBSNLPWAவிழுப்புரம் பகுதி 
ஆம் ஆண்டு விழாவும் ஒய்வூதியர் தின சிறப்புக்கூட்டமும் மிக 
சிறப்பாக பாவ்டா மண்டபத்தில் நடந்தது.
தோழர்ராமச்சந்திரன் தலைமை தாங்க்கினார்.
மாவட்ட தலைவர் .P.ஜெயராமன்  துவக்க உரை ஆற்றினார். 
தோழர்.தக்ஷிணாமூர்த்தி வரவேற்புரை நிகழ்ததினார்
தோழர்கள்.N.திருஞானம் K.வெங்கட் ரமணன்செல்வரசுமரி,பொன்மலை,ஜெகந்நாதன்,ஜெயகுமார்நாராயணசாமி ,இராதாகிருஸ்ணன் இளங்கோவீரராகவன்வாழ்த்துரை
 வழங்கி சிற்ப்பித்தனர்.  
 மாநில சங்க துணை தலைவர்கள்விக்டர் ராஜ் & K.சந்திரமோகன்  ஆகியோர்  சிறப்புரை வழங்கினர்.
கடைசியாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுடன் நம் சங்க தலைவர்கள்  7வது CPC ,  அடிப்படையில் CDA pattern  pension  வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை கூறி தற்போதய நிலைமைகளை எடுத்துஉரைத்தனர். 

 நமக்கு நியாயமான ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட  தோழர்நகரா வின் முயற்சிகளை என்றென்றும் மறக்கக்கூடாது என தங்கள் சிறப்பு உரையில் குறிப்பிட்டனர்
இந்த விழாவில் 80 வயதிற்கு மேலான  தோழர்கள்.செல்வராஜ்கணிக்கண்ணன்,ராஜகோபால் ஆகியோரை பாவ்டா அமைப்பு நிர்வாகி ஜோஷ்லின் தம்பி நினைவுப்பரிசு ,பழத்தட்டுமற்றும் பொன்னாடை போர்தியும் டர்பன் கட்டியும் வாழ்த்தி பேசினார்.

நம் சங்கம் மூத்த குடிமக்கள் ஆன நமக்கும் குடும்ப ஓய் வூதியம்பெற்றிட ஆற்றிவரும் பணிகளை பற்றியும் பெருமைப்பட பேசினார்
நிறைவாக தக்ஷிணாமூர்த்தி நன்றி கூறினார்.

 மாவட்டம்  முழுவதிலிருந்தும் 200 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டனர்
விழா ஆரம்பத்தில் தேசியக்கொடியை தோழர்துரை பாபு வும் 


 விழா ஆரம்பத்தில் தேசியக்கொடியை தோழர்துரை பாபு வும் சங்க கொடியை தோழர்.அண்ணமலையும் ஏற்றிவைத்தனர்.














நமது மனதில் என்றும் வாழும் தலைவர் திருநெல்வேலி  S .அருணாச்சலம்  கடலூரில்  நமது ஒய் வூதியர்  2017 தின விழாவில் ஆற்றிய சொற்பொழிவு


மீண்டும் கேட்க கீழே உள்ள  இணையத்தை சொடுக்கவும் :




செவ்வாய், 24 டிசம்பர், 2019

கிருஸ்துமஸ் 2019,புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020

இயேசுவும்,கிருஷ்ணரும் மேய்ப்பரே
எளிமையும்,அன்புமே உலகை ஆளும்.

பகிர்ந்துக்கொள்வது,அன்பு செலுத்துவது
தோள் கொடுப்பது, துயர் துடைப்பது,
உற்சாகம் கொள்வது,உயர்வில் மகிழ்வது,
தன் சுதந்திரத்தை இழக்காமல் ஏற்றமாய் இருப்பது 
நம்மை நெறிபடுத்துவதால்மற்றவரையும் மகிழ்விப்பதாகும்.

                       கிருஸ்துமஸ் 2019,புத்தாண்டு வாழ்த்துக்கள்.2020

புதன், 27 நவம்பர், 2019

கடலூரில் 
மறைந்த தலைவருக்கு 
அஞ்சலி கூட்டம்.

தோழர்
S.அருணாச்சலம் . 



நமது AIBSNLPWA-வின் அனைத்திந்திய துணை பொது செயலரும்திருநெல்வேலி மாவட்ட செயலருமான தோழர்
S.அருணாச்சலம் . 26.11.2019 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்தோழர்.அருணாச்சலம் மறைவு BSNL ஊழியர்களுக்கும்குறிப்பாக நம் AIBSNLPWA _ விற்கும்  ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.அவர் மிக சிறந்த தொழிற்சங்க தலைவர் ஆவார்.  மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தும் முகத்தான் நாளை 28.11.2019 வியாழன் காலை 1100 மணி அளவில் இரங்கல் கூட்டம் நமது கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
தோழர்கள்தோழியர்கள் அனைவரும்  கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம்
R.அசோகன்
மாவட்ட செயலர்

செவ்வாய், 26 மார்ச், 2019

AIBSNLPWA தமிழ்மாநில செயற்குழு கூட்டம் கும்பகோணம் 15th & 16th March '19
தோழர் p.கங்காதர்ராவ்  அகிலஇந்திய செயலர் உரையாற்றினார்

சங்ககொடிஎற்றம்  , புதிய சங்ககொடி  மர  கற்பலகை




































CEC meeting of Tamil Nadu Circle was held on 15th & 16th March '19 at KUMBAKONAM.
Com. P Gangadhara Rao GS has opened a STONE CARVED PLAGUE in front of GM's office and our Association Flag was hoisted by him. On behalf of CHQ ,Coms. D Gopalakrishnan VP, A Sugumaran VP, K Muthiyalu DGS, and S Arunachalam AGS have graced the occasion. Com. V Rama Rao Asst. Treasurer CHQ and Circle President , presided over the two - day CEC meeting. Nearly 200, including Circle Office Bearers, District Secretaries and activists from nearby SSAs have attended the meeting.Regarding PENSION REVISION, Tamil Nadu Circle Executive has decided to convey to CHQ to wait till Next Government formation and seek LEGAL REMEDY if it is not settled with in Three months.
............... 

 கஜா புயல் இயற்கை பேரிடர் நிவாரண வேலைகளில் AIBSNLPWA தமிழ்நாடு சங்கத்தின் பங்களிப்பு ...மாநிலச்சங்க தலைவர் தோழர் v.ராமாராவ் அவர்களின் செய்தி








நமது சங்க 13000 உறுப்பினர்களின் ரூ14 லட்சம் நன்கொடையிலிருந்து 8.5 லட்சம் செலவில் வேதாரண்யம்,பட்டுக்கோட்டை,திருவாரூர்,திருத்துறைப்பூண்டி பகுதிகளில் 4-12-2018 அன்று உடைகள்,போர்வைகள்,4000 கிலோ அரிசி  கஜா புயல் நமது நமது பங்காக பாதிக்கப்பட்ட வர்களுக்கு  வழங்கினோம்.
5.5 லட்சம் செலவில் பாதிக்கப்பட்ட திருவள்ளுவர் அருள்நெறி பள்ளி குன்றக்குடி கொருக்கை நிர்மாண வேலைகளுக்காக நன்கொடையாக அளித்திட்டோம்.
புதிய  ஷீட்வேயப்பட்டு நிர்மாண வேலைகள் முடிந்த 2 பகுதிகளின் சாவிகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் 17-3-2019 அன்று தோழர்கள் v.ராமாராவ் மா.த, R.வெங்கடாசலம் மா.செ,K.முத்தியாலு மத்திய உதவிச்செயலர்  அளித்து நமது பணியை நிறைவுச்செய்தனர்.
நன்கொடை அளித்த சென்னை தொலைபேசி தோழர்களின் சார்பாக  தோழர்கள் கிருஷ்ணமூர்த்தி உதிவிசெயலர்,கண்ணப்பன் பொருளாளர் தோழர்கள் கலந்துக்கொண்டு நிகழ்வினை சிறப்புச்செய்தனர்.




ஞாயிறு, 17 மார்ச், 2019

கண்ணீர்  அஞ்சலி 

தோழர் திண்டிவனம் துரைசாமி லைன் இன்ஸ்பெக்டர்  ஒய்வு 
17-3-2019 அன்று காலை இயற்கை எய்தினார்
AIBSNLPWA தோழர்கள்,மற்றும் அவரது நண்பர்கள் இறுதி மரியாதையில் கலந்துக் கொண்டனர். அவரின் ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திக்கிறோம்.