Translate

சனி, 8 ஏப்ரல், 2017

AIBSNLPWA கடலூர் மாவட்ட  ஏப்ரல் பகுதி கூட்டங்கள்
விழுப்புரம்  2-4-2017
2-4-2017 காலை அன்று தோழர் k.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் விழுப்புரம் BSNL தொலைபேசி நிலைய வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது.கடலூரிலிருந்து தோழர்கள் K.வெங்கடரமணன் ,தங்கவேலு,அசோகன்  கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.ஜோ.வெற்றி துரைபாபு ,பகுதிக்கூட்ட செயலர் தோழர் வீரமணி,வீரராகவன் மற்றும் பல முன்னணி தோழர்கள் கலந்துக் கொண்டு கூட்டத்தை சிறப்பாக நடத்தினர்.இந்த பகுதியில் நடந்த சிறப்பு செல் மேளாவில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களோடு இணைந்து நமது ஒய்வுதியர்களும் கலந்துக் கொண்டு 350 செல் சிம் கார்டுகள் விற்றனர்.நம்முடைய பங்கின் காரணமாக கடலூர் மாவட்டம் மாநில அளவில் 5 வது இடத்தை வகித்து நம்மை மகிழ்ச்சியில்  ஆழ்த்துகிறது.

சிதம்பரம்  7-4-2017
தோழர்  சந்திரமோகன்  மருத்துவ வசதிகள்,பில்கள் சமர்ப்பிக்க விதிமுறைகள், Incometax விதிகள்,சட்டங்கள்  IT Returns சமர்ப்பித்தல் முதலிய  முக்கிய மான  செய்திகளை விரிவாக கூறினார்

தோழர் T.செல்வராஜ்  STS ( DOT ஓய்வூதியர்-  82வயது) பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இன்றைய கூட்டத்தின் செலவுகளை அவர் ஏற்றுக்கொண்டு தனது மகிழ்ச்சியினையும்,வாழ்த்துக்களையும்  வெளிப்படுத்தினார்.

தோழர் N.T மாவட்டச்செயலர் விருதுநகர் செயற்குழுகூட்ட நிகழ்வுகளையும் தீர்மானங்களையும்  தெரிவித்தார்.எல்லோருக்கும் 78.2 நிலுவை 10-4-2017 க்குள் அனைவருக்கும் கிடைக்கும் என்ற மாநில செய்தியையும் பகிர்ந்தார்.

10 மகளிர் உட்பட 60 ஓய்வூதியர்கள் கலந்துக்கொண்டனர்.

கடலூரில் இருந்து தோழர்கள் சந்திரமோகன்,NT,KVR,ரகோத்தமன்,
கலந்துக்கொண்டனர்.
Add caption
தோழர்கள் இஸ்மாயில்,ஜெயகுமார்,சுதாகர் ஆகியோர் நடப்புக் கருத்துக்களை அவையோருடன் பகிர்ந்துக்கொண்டனர்.
தோழர் ராஜசேகர் நன்றி தெரிவித்து நன்றி கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்.
கடலூர் 8-4-2017









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக